வடிவேலு உல்லாசமாக இருந்ததற்கு நானே சாட்சி.. பலாத்காரமும் செய்திருக்கிறார்?.. பயில்வான் ரங்கநாதன் கொடுத்த ஷாக்

சென்னை: Vadivelu (வடிவேலு) வடிவேலு உல்லாசமாக இருந்ததற்கு நானே சாட்சி என்று பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் தெரிவித்திருக்கிறார்.

சினிமாவின் மிகச்சிறந்த நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் வடிவேலு. ராஜ்கிரணால் அறிமுகப்படுத்தப்பட்ட அவர் கவுண்டமணி, செந்தில் உச்சத்தில் இருந்தபோது அவர்களுடன் சேர்ந்து சிறிய சிறிய கதாபாத்திரங்களில் நடித்தார். அந்தக் காலகட்டத்தில் விவேக்கும் வளர்ந்துவந்தார். எனவே வடிவேலு வளர்வதற்கு கடுமையான போட்டி சூழலே இருந்தது. ஆனால் எதற்கும் அஞ்சவில்லை வடிவேலு.

Bayilvan Ranganathan Revealing Shocking News About Actor Vadivelu

தனி பாணி: தன்னுடைய காமெடிகளில் தன்னை தானே தாழ்த்திக்கொண்டு மக்களை சிரிக்க வைத்தார் வடிவேலு. அதேபோல் எந்த ஈகோவும் இல்லாமல் விவேக்குடனும் சேர்ந்து நடித்தார். இதனால் அவரது வளர்ச்சி ஆரோக்கியமாகவே இருந்தது. ஒருகட்டத்தில் வயது மூப்பு காரணமாகவும்; காலம் மாறியதன் காரணமாகவும் கவுண்டமணியும் செந்திலும் சினிமாவிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக ஒதுங்க ஆரம்பித்தனர்.

வைகை புயல்: அந்த வெற்றிடத்தை சரியாக பயன்படுத்திக்கொண்டார் வடிவேலு. தனக்கென தனி டீமை செய்து காமெடி செய்து ரகளைகட்டி அடித்தார். இதனால் அவரது வளர்ச்சி 2000களின் தொடக்கத்தில் புயல் வேகத்தில் இருந்தது. அவர் இல்லாத படங்களே இல்லை என்ற நிலைதான் அப்போது இருந்தது. பல படங்களில் நடித்தாலும் ஒவ்வொரு காமெடி காட்சியையும் வித்தியாசமான முறையிலும் புதிய பாணியிலும் நடித்து அப்ளாஸை அள்ளினார் வைகை புயல் வடிவேலு.

பஞ்சாயத்து: இப்படி படு பயங்கரமாக வளர்ந்து அவரது கிராஃப் உயரத்தில் இருந்தது. ஆனால் அவர் ஏறிய அரசியல் மேடை அந்த கிராஃபை சட்டென்று கீழே இறக்கியது. 2011ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவாக குரல் கொடுத்தார். அப்போது ஜெயலலிதா, விஜயகாந்த்தை கடுமையாக தாக்கி பேசினார். ஆனால் அவர் எவ்வளவு பேசியும் திமுக அந்தத் தேர்தலில் தோல்வியையே சந்தித்தது.

பயந்த திரையுலகினர்: திமுக தோல்வியடைந்து அதிமுக ஆட்சிக்கு வந்தது. அப்போது ஒட்டுமொத்த திரையுலகிலும் ஒரு எண்ணம்தான் இருந்தது. ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தாகிவிட்டது அவரையும், அவரது கட்சியையும் எதிர்த்து பேசிய வடிவேலுவை வைத்து இனியும் படம் செய்தால் பிரச்னை உருவாகும் என்பதுதான் அது. அதன் காரணமாக வடிவேலு கொஞ்சம் கொஞ்சமாக ஓரங்கட்டப்பட்டார்.

காணாமல் போன புயல்: இந்தப் பிரச்னையோடு வேறு சில பிரச்னைகளும் அவருக்கு ஏற்பட்டதால் இடையில் சில வருடங்கள் எந்தப் படத்திலும் நடிக்காமல் இருந்தார். ஒருவழியாக அவரை சுற்றி இருந்த பிரச்னைகள் எல்லாம் சரி செய்யப்பட்டு நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் மூலம் ரீ என் ட்ரி கொடுத்தார் அவர். அவரது இரண்டாவது இன்னிங்ஸில் மாமன்னன், சந்திரமுகி 2 ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். மேலும் சில படங்களில் கமிட்டாகியிருக்கிறார்.

புது பிரச்னை: வடிவேலு இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்தவுடன் அவர் மீது புதிய குற்றச்சாட்டுக்கள் பாய ஆரம்பித்திருக்கின்றன. அதாவது அவர் யாரையுமே வளரவிட மாட்டார் என்று அவருடனேயே பணியாற்றியவர்கள் பேச ஆரம்பித்தனர். ஒன்றிரண்டு பேர் மட்டும்தான் சொல்வார்கள் என்று பார்த்தால் அந்த லிஸ்ட் நீண்டுகொண்டே சென்றது. அதேபோல் பெண்கள் விஷயத்திலும் அவர் கொஞ்சம் வீக் என்ற பேச்சும் சமீபகாலமாக எழுந்திருக்கிறது.

பயில்வான் ரங்கநாதன்: இந்நிலையில் பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் வடிவேலு குறித்து பேசியிருக்கும் ஒரு விஷயம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அவர் தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "வடிவேலு உல்லாசமாக இருந்ததற்கு நானே சாட்சி. ஒருமுறை பாண்டிசேரியில் ஒரு ஷூட்டிங் நடந்தது. நடு இரவில் ஒரு இடத்திலிருந்து பெண் ஒருவர் ஓ என கத்தினார்.

நானும், தயாரிப்பு நிர்வாகியும் சத்தம் வந்த இடத்துக்கு சென்று பார்க்கையில் ஒரு பெண் இருந்தார். அவரது அந்தரங்க உறுப்பை வடிவேலு ஏதோ செய்துவிட்டார். பிறகு அந்தப் பெண்ணை நாங்கள் மருத்துவமனைக்கு கொண்டு போய் சேர்த்தோம். அந்தப் பெண் வடிவேலு அழைத்ததற்கு வரவில்லை. சொல்லப்போனால் அந்த பெண்ணை வடிவேலு பலாத்காரம் செய்திருக்கிறார்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X