கவர்ச்சி வேண்டும் என்ற டைரக்டர்.. நடிகையின் விபரீத முடிவு?.. ஃபேமஸ் நடிகை பற்றி பிரபலம் கொடுத்த ஷாக்
சென்னை: பயில்வான் ரங்கநாதன் தொடர்ந்து சினிமா நடிகர்கள், நடிகைகளின் அந்தரங்க விஷயங்கள் பற்றி பேசிவருபவர். அவர் பேசுவதில் எதுவுமே உண்மை இல்லை என்று பலர் சொல்வதுண்டு. ஆனால் அதையெல்லாம் காதில் போட்டுக்கொள்ளாத அவர் தொடர்ந்து அப்படி பேசுவதையே வழக்கமாக வைத்திருக்கிறார். இந்தச் சூழலில் நடிகை தீபா குறித்து அவர் பேசியிருக்கும் விஷயம் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் இப்படி பேசுவதை இவர் எப்போதுதான் நிப்பாட்டுவார் என்றும் ரசிகர்கள் கேட்க ஆரம்பித்திருக்கின்றனர்.
சினிமா பத்திரிகையாளர் மற்றும் நடிகராக வலம் வருபவர் பயில்வான் ரங்கநாதன். 90களில் பல படங்களில் காமெடி ரோலிலும், கேரக்டர் ரோலிலும் நடித்திருக்கும் இவர் சினிமா சம்பந்தமான நிகழ்ச்சிகளுக்கு பத்திரிகையாளராக சென்று சர்ச்சையான கேள்விகள் கேட்பதை வழக்கமாக வைத்திருப்பவர். அதுமட்டுமின்றி நடிகர்கள் மற்றும் நடிகைகளின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேசி பல சர்ச்சைகளுக்கு தொடக்கப்புள்ளியாகவும் இருப்பார்.

அவதூறு பரப்பும் பயில்வான்: தான் சொல்வதுதான் உண்மை. தனக்கு சினிமாவில் இருப்பவர்கள் பற்றி எல்லாமே தெரியும் என்ற மனப்பான்மையில் இருப்பவர் நயன்தாரா, த்ரிஷா, ரேகா நாயர் உள்ளிட்ட நடிகைகள் குறித்தும் தனுஷ், கவுண்டமணி, வடிவேலு உள்ளிட்ட நடிகர்கள் குறித்தும் பல விஷயங்களை பேசியிருக்கிறார். ஆனால் அவை அனைத்துமே அவதூறுகள்தான் என்பது ரசிகர்களின் கருத்து. மேலும் அவர் அப்படி பேசுவதை பிரபலங்கள் கண்டுகொள்ளாமல் விடக்கூடாது. அவர் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகின்றனர்.
தொடர் பஞ்சாயத்து: பயில்வான் ரங்கநாதன் இப்படி பேசுவதை பல செலிபிரிட்டிகள் கண்டும் காணாமல் சென்றுவிடுகின்றனர். ஆனால் ரேகா நாயர், கே.ராஜன், சாந்தனு, கீர்த்தி பாண்டியன் உள்ளிட்டோர் மட்டும் முகத்தில் அடித்தாற்போல் பேசிவிடுகின்றனர். முக்கியமாக ரேகா நாயர் நேரடியாக சண்டைக்கே சென்றுவிட்டார். அதுமட்டுமின்றி பயில்வான் ரங்கநாதன் இறந்தால் பட்டாசு வெடித்து கொண்டாடுவேன் என்றும் ஓபனாக பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
விஷால் பதிலடி: அதேபோல் சில வாரங்களுக்கு முன்பு ரத்னம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது. அப்போது பயில்வான் ரங்கநாதன் ஏதோ ஒரு கேள்வியை கேட்டு வைக்க; 'அவருக்கெல்லாம் என்னால் பதில் சொல்ல முடியாது' என்று மேடையில் அமர்ந்தபடியே மூக்குடைத்தார் விஷால். அதுமட்டுமின்றி பிசாசு பட சமயத்தின்போதும் இயக்குநர் பாலா பயில்வான் ரங்கநாதனுக்கு தரமான பல்பு கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இருந்தாலும் பயில்வான் ரங்கநாதனின் போக்கில் எந்த மாற்றமும் இல்லை.
பயில்வான் கிளப்பிய பகீர்: இந்நிலையில் நடிகை தீபா குறித்து பயில்வான் ரங்கநாதன் பேசியிருக்கிறார். அந்த வீடியோவில் பேசிய அவர், "இளம் வயதிலேயே நடிக்க வந்தவர் தீபா. 90களில் ஃபேமஸான நடிகையாக வலம் வந்தார். அவர் நடிக்க வந்தபோது ஒரு இயக்குநர் தீபாவிடம், உங்களுக்கு மார்பக பகுதி சிறியதாக இருக்கிறது; கவர்ச்சி தூக்கலாக வேண்டும் என்று சொல்லி அனுப்பிவிட்டார். உடனே தீபா மருத்துவமனைக்கு சென்று சில மருந்துகளை எடுத்துக்கொண்டார். அதை சாப்பிட்டதும் அவரது கவர்ச்சி கொஞ்சம் தூக்கலாகவே இருந்தது. பிறகு ஒரு ஆபரேஷனும் செய்துகொண்டார் அவர்" என்றார்.
தீபா: நடிகை தீபா 90களில் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்து பிரபலமானவர். தமிழில் ஜானி, முந்தானை முடிச்சு, கூட்டு புழுக்கள், வாழ்க வளர்க, கல்யாண பறவைகள் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். இவற்றில் ஜானியும், முந்தானை முடிச்சு படமும் அவருக்கு நல்ல அடையாளத்தை பெற்றுக்கொடுத்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











