தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து.. மொத்த காரணமே ரஜினியும், கஸ்தூரி ராஜாவும்தானா?.. பிரபலம் கொடுத்த ஷாக்
சென்னை: தனுஷுக்கும் ஐஸ்வர்யாவுக்கும் சட்டப்பூர்வமாக விவாகரத்து வழங்கி தீர்ப்பளித்திருக்கிறது நீதிமன்றம். இதனால் அவர்கள் மீண்டும் இணைவார்கள் என்று எதிர்பார்த்திருந்தவர்கள் ஏமாற்றமடைந்திருக்கிறார்கள். இந்த விவாகரத்துக்கு காரணமாக பலரும் பல விஷயங்களை சொல்ல பிரபல நடிகரும், பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பேசியிருப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
ரஜினிகாந்த்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை தனுஷ் காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். பல வருடங்கள் இரண்டு பேரும் சேர்ந்து வாழ்ந்த சூழலில் சில வருடங்களுக்கு முன்பு தங்களது சமூக வலைதள பக்கத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டார்கள். அதில் அவர்கள், 'தாங்கள் இருவரும் பிரியவிருக்கிறோம். பிரிந்துவிட்டு தனித்தனி பாதையில் பயணம் செய்யவிருக்கிறோம்' என்று குறிப்பிட்டிருந்தனர்.

தொடங்கிய முயற்சிகள்: இருவரும் பிரிவதாக அறிவித்தாலும் சட்டப்பூர்வமாக விவாகரத்து கோரி மனுத்தாக்கல் எதுவும் செய்யாமல் இருந்தார்கள். தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜாவும் ஒரு செய்தியாளர் சந்திப்பில், 'எல்லோரின் வீட்டிலும் நடக்கும் சண்டை போல்தான் தனுஷுக்கும் ஐஸ்வர்யாவுக்கும் சண்டை வந்திருக்கிறது.விரைவில் இணைவர்கள்' என்று கூறியிருந்தார். மேலும் ரஜினிகாந்த்தும் அவர்களை சேர்த்து வைக்க ரொம்பவே முயன்று வந்தார். இதனால் எப்படியாவது சேர்ந்துவிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.
விவாகரத்து வழக்கு: ஆனால் யாரும் எதிர்பார்க்காத விதமாக இரண்டு பேரும் சட்டப்பூர்வமாக விவாகரத்து கேட்டு சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்கள். இருந்தாலும் முதல் இரண்டு விசாரணையின்போது அவர்கள் இரண்டு பேரும் ஆஜராகவில்லை. அதன் காரணமாக கண்டிப்பாக அவர்கள் மீண்டும் இணைந்துவிடுவார்கள் என்று பலரும் பேசிக்கொண்டார்கள். ஆனால் திடீர் ட்விஸ்ட்டாக சில நாட்களுக்கு முன்பு நீதிமன்றத்தில் இருவரும் ஆஜராகி விவாகரத்து வேண்டும் என்று உறுதியாக கூறினார்கள்.
உறுதியான விவாகரத்து: அதனையடுத்து நேற்று தனுஷுக்கும் ஐஸ்வர்யாவுக்கும் சட்டப்பூர்வமாக விவாகரத்து அளித்த நீதிமன்றம்; அவர்களது திருமணத்தை ரத்து செய்தும் உத்தரவிட்டது. இதனால் கிட்டத்தட்ட 20 வருட திருமண பந்தம் முடிவுக்கு வந்திருக்கிறது. இந்த விஷயம் ரஜினி வீட்டில் கொஞ்சம் அப்செட்டை ஏற்படுத்தியிருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இதுகுறித்து பிரபல பத்திரிகையாளரும், நடிகருமான பயில்வான் ரங்கநாதன் தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்திருக்கிறார்.
பயில்வான் பேட்டி: அவர் அளித்த அந்தப் பேட்டியில், "தனுஷையும், ஐஸ்வர்யாவையும் எப்படியாவது சேர்த்து வைக்க முயன்றார்கள். ஆனால் அது நடக்கவில்லை. இருவருக்கும் கோர்ட் விவாகரத்து கொடுத்துவிட்டது. இதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. அதாவது கஸ்தூரி ராஜாவுக்கு தேனியில் சொந்தமாக ஒரு தியேட்டர் இருக்கிறது. அந்தத் தியேட்டரின் பேரில் கஸ்தூரி ராஜா வட்டிக்கு கடன் வாங்கினார். ஆனால் அந்தக் கடனை அவரால் திருப்பி கொடுக்க முடியவில்லை.
இதுதான் பிரச்னை: இதனால் கடன் கொடுத்தவர் வழக்கு தொடர்ந்துவிட்டார். அப்போது நான் ரஜினிகாந்த்தின் சம்பந்தி என்று கஸ்தூரி ராஜா சொல்ல; இந்தப் பிரச்னையில் ரஜினியையையும் கடன் கொடுத்தவர் இழுத்துவிட்டார். இதனால் கோபமடைந்த ரஜினிகாந்த், தனக்கும் அந்தக் கடனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறிவிட்டார். எனவே கஸ்தூரி ராஜா கொஞ்சம் டென்ஷனாகிவிட்டார். அன்றிலிருந்து ரஜினிகாந்த்தின் வீட்டில் நடக்கும் எந்த நிகழ்ச்சிக்கும் கஸ்தூரி ராஜாவோ, அவரது மனைவியோ கலந்துகொள்ளவே இல்லை. ரஜினி வீட்டுடன் அவர்கள் சுமூகமான உறவிலும் இல்லை" என்றார்.


Click it and Unblock the Notifications











