Amala Paul - திருமணத்துக்கு பின் நடிகருடன் அமலா பால் நெருக்கம் - பரபரப்பை பற்றவைத்த பயில்வான்

சென்னை: Amala Paul (அமலா பால்) திருமணத்துக்கு பிறகும் நடிகர் ஒருவருடன் அமலா பால் நெருக்கமாக இருந்ததாகவும் அதனால்தான் அவருக்கு விவாகரத்து நடந்ததாகவும் பயில்வான் ரங்கநாதன் தெரிவித்திருக்கிறார்.

சாமி இயக்கிய சிந்து சமவெளி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் அமலா பால். முதல் படம் தோல்வியடைந்தாலும் அந்தப் படத்தின் கதைக்களமும், அமலா பால் ஏற்றிருந்த கதாபாத்திரமும் சர்ச்சைக்குரியதாக இருந்தது. இதன் காரணமாக அமலா பால் பலரது கவனத்துக்கு உள்ளானார். தொடர்ந்து அவருக்கு தமிழில் பட வாய்ப்புகள் வர ஆரம்பித்தன. அப்படி நடித்த மைனா படம் ஹிட்டாக முன்னணி ஹீரோயின் என்ற இடத்துக்கு நகர்ந்தார்.

 Bayilvan Ranganathan Reveals The Reason for Amala paul divorce

விஜய்யுடன் தலைவா:

மைனா படத்தின் வெற்றிக்கு பிறகு அவருக்கு சில படங்கள் கிடைத்தாலும் முக்கியமான படம் தலைவா. ஏ.எல்.விஜய் இயக்கத்தில் விஜய் நடித்த அந்தப் படம் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியானது. படம் தோல்வியடைந்தாலும் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா பட ரிலீஸுக்கு கொடுத்த குடைச்சலும், அதனையடுத்து விஜய் வெளியிட்ட வீடியோவும் அப்போது பேசுபொருளானது. படம் எப்படி போனாலும் விஜய்யுடன் நடித்த நடிகை என்பதால் அமலா பாலுக்கு மேலும் பட வாய்ப்புகள் அமைந்தன.

ஏ.எல்.விஜய்யுடன் திருமணம்:

தலைவா படத்தில் நடித்தபோது அமலா பாலும் இயக்குநர் ஏ.எல்.விஜய்யும் காதலித்தனர். பாரம்பரிய குடும்பத்தை சேர்ந்த ஏ.எல்.விஜய் அமலா பாலை ஒருவழியாக கடந்த 2014ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். அவர்களது திருமண வாழ்க்கை சுமூகமாக போய்க்கொண்டிருந்த சூழலில் கடந்த 2017ஆம் ஆண்டு இரண்டு பேரும் விவாகரத்து செய்தனர். அவர்களது விவாகரத்துக்கு காரணமாக பல யூகங்கள் கூறப்பட்டன. ஆனால் அதுகுறித்து இருவரும் அமைதி காக்க ஏ.எல்.விஜய் இரண்டாவது திருமணம் செய்துகொண்டார்.

Bayilvan Ranganatha Reveals The Reason for amala paul divorce

அமலா பாலின் கரியர்:

விவாகரத்துக்கு பிறகு அமலா பால் தொடர்ந்து நடித்துவருகிறார். அந்தவகையில் ரத்னகுமார் இயக்கத்தில் அவர் நடித்த ஆடை படத்தில் நிர்வாணமாக தோன்றி பரபரப்பாக பேசவைத்தார் அமலா பால். தொடர்ந்து கடாவர் உள்ளிட்ட படங்களில் நடித்தார். இதற்கிடையே அமலா பால் வடமாநிலத்தை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை காதலிப்பதாகவும் தகவல் பரவியது. அவர்கள் இருவரும் பீச்சில் ரிலாக்ஸ் செய்யும் புகைப்படங்களும் வெளியாகி இணையத்தில் ட்ரெண்டாகின.

விவாகரத்துக்கு என்ன காரணம்?:

இந்நிலையில் அமலா பாலின் விவாகரத்துக்கு காரணம் என்ன என்பது குறித்து பயில்வான் ரங்கநாதன் தெரிவித்திருக்கிறார். எப்போதும் சர்ச்சைக்குரிய வகையில் பேசும் பயில்வான் ரங்கநாதன் அமலா பாலின் விவாகரத்து குறித்து பேசுகையில், "திருமணத்துக்கு பிறகு அமலா பால் ஒரு நடிகருடன் நெருக்கமாக இருந்துவந்தார். அந்த நடிகருடன் பப், மது விருந்து என ஜாலியாக சுற்றிவந்தார்.

 Bayilvan Ranganathan Reveals The Reason for Amala paul divorce

இந்தப் பொண்ணு ஒத்துவராது:

இதை தெரிந்துகொண்ட ஏ.எல்.விஜய்யின் தந்தை ஏ.எல்.அழகப்பன் இந்தப் பொண்ணு உனக்கு ஒத்து வராது என விஜய்யிடம் நேரடியாகவே கூறிவிட்டார். எனவே விவாகரத்து செய்வதுதான் உகந்தது என கூறினார். இதனையடுத்துதான் அமலா பாலுக்கும், விஜய்க்கும் விவாகரத்து நடந்தது" என்றார். பயில்வானின் இந்த பேச்சு திரையுலகில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X