ஜெயம் ரவிக்கும் -தனுஷுக்கும் சண்டை.. காரணம் ஆர்த்திதானாம்.. பற்ற வைத்த பயில்வான்.. எப்போ அடங்குவார்?

சென்னை: ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாக அறிவித்திருக்கிறார். விவாகரத்து மனுவையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கும் ரவி; ஆர்த்தியிடமிருந்து தனது உடைமைகளை மீட்டு தருமாறு காவல் நிலையத்திலும் புகார் அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது. சூழல் இப்படி இருக்க பத்திரிகையாளரும், நடிகருமான பயில்வான் ரங்கநாதன் இதுகுறித்து சில விஷயங்களை பேசி புதிய பரபரப்பை பற்ற வைத்திருக்கிறார்.

ஆர்த்தியை காதலித்து திருமணம் செய்துகொண்ட ஜெயம் ரவி அவரை விட்டு பிரிவதாக அறிவித்து விவாகரத்து மனு தாக்கல் செய்திருக்கிறார். அதுமட்டுமின்றி ஆர்த்தியிடமிருந்து தனது உடைமைகளை மீட்டுத் தருமாறும் காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தச் சூழலில் பத்திரிகையாளரும், நடிகருமான பயில்வான் ரங்கநாதன் இந்த விவகாரத்தில் பேசியிருக்கும் விஷயம் புதிய பரபரப்பு ஒன்றை கோலிவுட்டில் ஏற்படுத்தியிருக்கிறது.

jayam ravi aarthi bayilvan ranganathan

பயில்வான் பேட்டி: இதுதொடர்பாக தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "ஜெயம் ரவி இந்த விவாகரத்து விஷயத்தில் பல விஷயங்களை சொல்வதற்கு மறுக்கிறார். எனது மகன்களின் நல்வாழ்க்கை ரொம்ப முக்கியம். அதனால் ஆர்த்தியை பற்றி சொல்ல விரும்பவில்லை என்று ஜெயம் ரவி கூறுகிறார். இரண்டு பேருமே விவாகரத்து பெற்றாலும் இரண்டு மகன்களுக்கு அவங்கதானே அம்மா, அபா. அதனால்தான் ஜெயம் ரவி ரொம்ப கட்டுப்பாடா இருக்கிறார்.

தனுஷுடன் சண்டை: ஒரு வருடத்துக்கு முன்பு ஜெயம் ரவிக்கும், தனுஷுக்கும் சண்டை ஏற்பட்டது. அதற்கு காரணம் தனுஷிடம் ஆர்த்தி நெருங்கி பேசிக்கொண்டிருந்ததுதான் என்று ஒரு கிசுகிசு இருந்தது. அதற்கு பிறகு ரவியும், ஆர்த்தியும் சமாதானம் ஆகிவிட்டார்கள். அதுதான் உண்மை. ஆனால் ரவியிடம் சொல்லாமலேயே ஆர்த்தி பப்க்கு போவது, குடிப்பது என அதிகமாகிவிட்டார். அதேபோல் ரவியிடம் சொல்லாமலேயேஅனுமதி இல்லாமலேயே பாங்காங், தாய்லாந்துகூட சென்றிருக்கிறார் என்ற தகவலும் வந்திருக்கிறது.

வாடகை காரில் வந்தார்: பிரதர் படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு ஜெயம் ரவி வாடகை காரில் வந்தார் என்பது உண்மைதான். அடையாறில் அவருக்கு சொந்தமாக ஒரு ஃபிளாட் இருக்கிறது. அவர் அங்கிருந்துதான் எனக்கு பேட்டி கொடுத்தார். மற்றபடி அவர் சம்பாதித்த பணம் ஆர்த்தி மற்றும் ஆர்த்தியின் அம்மாவிடம்தான் இருப்பதாக சொன்னார். அதுமட்டுமின்றி செக் புக்கை கொடுக்கவில்லை; இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட்டையும் முடக்கியிருக்கிறார்கள் என்றும் சொன்னார்.

அப்பாட்ட சொன்னீங்களா?: உங்களது பிரச்னையை அப்பாவிடம் சொன்னீர்களா என்று கேட்டேன். அதற்கு அவர் முழுவதுமாக சொல்லிவிட்டேன். பிறகுதான் என்னை எனது விருப்பபடி முடிவெடுக்க சொன்னார். மேலும் முழு சப்போர்ட் செய்கிறேன் என்றும் ரவியின் தந்தை சொல்லியிருக்கிறார். இரண்டு முறை ரவி அனுப்பிய நோட்டீஸில் முதல் நோட்டீஸின்போது மாமியார் சுஜாதா; ரவியின் அப்பாவிடம் வந்து பேசியிருக்கிறார். அப்போது ரவியின் அப்பா வைத்த கேள்விகளுக்கு சுஜாதாவிடம் எந்த பதிலும் இல்லை.

ஆதரவுதான்: விவாகரத்துக்கு இரண்டு பேர் தரப்பிலும் ஆதரவு இருக்கிறது. சுஜாதாவும் இந்த டைவர்ஸுக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார். ஆனால் தனக்கு டைவர்ஸ் பற்றி எதுவுமே தெரியாது என்று ஆர்த்தி இப்போது சொல்வதெல்லாம் சுத்த பொய். மேலும் மாமியார் வைத்திருக்கும் இடம் மீது கேஸ் போய்க்கொண்டு இருக்கிறது. மாமனார் சும்மாதான் இருக்கிறார். நான் அவர்களின் வீட்டுக்கு ஒரு பொன் முட்டை இடும் வாத்தாகத்தான் இருந்தேன். அதனால்தான் அவர்கள் என்னை வெளியே விட சம்மதிக்கவில்லை.

இதுதான் இந்த விவாகரத்துக்கு ஆர்த்தி ஒத்துக்கொள்ளாததற்கு காரணம் என்று என்னிடம் கூறினார் என பயில்வான் தெரிவித்திருக்கிறார். இதனைப் பார்த்த ரசிகர்கள் ஜெயம் ரவி பயில்வான் ரங்கநாதனுக்கு பேட்டி கொடுத்தாரா; எனில் எப்போது கொடுத்தார் என்பதையும் பயில்வான் சொல்ல வேண்டும் என்று கேள்வி எழுப்பும் அவர்கள்; விவாகரத்து முடிவு அவர்களது தனிப்பட்ட விவகாரம் இதை ஏன் தொடர்ந்து நோண்டிக்கொண்டே இருக்க வேண்டும் என்றும் காட்டமாக தெரிவித்துவருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X