தெய்வமச்சான் திரைப்படம் மிரட்டலா? சொதப்பலா? பயில்வான் ரங்கநாதன் விமர்சனம்!

சென்னை : விமல் நடிப்பில் நேற்று திரையரங்கில் வெளியானத் திரைப்படம் தெய்வ மச்சான்.

புதுமுக இயக்குநர் மார்டின் நிர்மல் குமாரின் இயக்கத்தில் விமல், அனிதா சம்பத், பாண்டியராஜன், தீபா உள்ளிட்ட இப்படத்தில் நடித்துள்ளனர்.

Bayilvan ranganathan review about Deiva machan

தெய்வ மச்சான் படம் எப்படி இருக்கு என்பதை பயில்வான் ரங்கநாதனின் விமர்சனத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

தெய்வமச்சான் : கிராமத்து பின்னணி கதையை தேர்வு செய்து நடித்து வரும் விமல், இந்த படத்திலும் அதையே செய்திருக்கிறார். தெய்வ மச்சான் திரைப்படத்தில் நடிகர் பாண்டியராஜன் விமல் மற்றும் அனிதா சம்பத்தின் அப்பாவாக நடித்துள்ளார். சிறுவயதிலேயே அம்மா இறந்துவிடுவதால் தங்கை மீது அதிக பாசம் வைத்து கண்ணுக்கு கண்ணாக அன்பை பொழிந்து அவரை பார்த்து வருகிறார்.

ராசியில்லாத தங்கை : தங்கைக்கு திருமண வயது வந்துவிட்டதால் திருமணம் செய்து வைக்க ஏற்பாடு நடக்கிறது. ஆனால், திருமண நாள் அன்று மாப்பிள்ளையின் அம்மா இறந்துவிடுவதால் திருமணம் நின்று விடுகிறது. இதனால், ஊரில் உள்ளவர்கள் பலர் இவரை அதிர்ஷ்டம் இல்லாதவள் என்று கூறி வருகின்றனர். இந்த நேரத்தில் தங்கை நல்ல வரன் அமைந்து திருமண ஏற்பாடு நடிக்கிறது.

Bayilvan ranganathan review about Deiva machan

யார் சாகப் போகிறார்கள் : யார் சாகப் போகிறார்கள் என்பதை முன்கூட்டியே கனவில் தெரிந்து கொள்ளும் சக்தி கொண்ட விமலின் கனவில், உன் தங்கச்சி புருஷன் கல்யாணமாகி இரண்டு நாளைக்குள் இறந்து விடுவான் என்று கூறுகிறான். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த விமல் என்ன செய்தார், தங்கையின் கணவரை எப்படி காப்பாற்றினார் என்பதுதான் படத்தின் கதை.

சிறப்பான நடிப்பு : நடிகர் விமல் அண்மையில் ஓடிடியில் வெளியான விலங்கு வெப் தொடரில் நன்றாக நடித்து பெயர் எடுத்தார். சில பல பழக்கவழங்களால் விளையாட்டுத் தனமாக நடித்துக்கொண்டிருந்த விமல், ஓவர் ஆக்ஷன் இல்லாத ஒரு இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். அவர் வரும் பல காட்சிகளில் நம்மை அறியாமலே சிரிப்பு வந்துவிடுகிறது.

பால சரவணனின் நடிப்பு சூப்பர் : தெய்வ மச்சன் படத்தின் கதாநாயகி அனிதா சம்பத்தான். இவர் படம் முழுக்க எதையோ பறிகொடுத்தது போலவே இருக்கிறார். நகைச்சுவை நடிகர் பால சரவணன் நன்றாக நடித்துள்ளார். பால சரவணனுக்கு பெரிய நடிகர்களின் படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் ஒரு சிறந்த நடிகைச்சுவை நடிகராக வாய்ப்பு உள்ளது.

Bayilvan ranganathan review about Deiva machan

கோடையில் ஒரு காமெடி விருந்து : கடந்த சில ஆண்டுகளாக குடும்ப நகைச்சுவை திரைப்படங்கள் வெளியாகாத நிலையில், அந்த ஏக்கத்தை தெய்வமச்சன் திரைப்படம் போக்கி உள்ளது. மது அருந்தினால் நமக்கு மட்டும் கேடு இல்லை நம்மை சுற்றி இருப்பவர்களுக்கும் கேடு என ஒரு நல்ல கருத்தை இயக்குநர் இந்த படத்தின் மூலம் கூறியிருக்கிறார். கோடையில் ஒரு காமெடி விருந்து தெய்வமச்சான் திரைப்படம் என்று பயில்வான் படத்தை பாராட்டி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X