விஜயகாந்த் மகன் நடித்த கொம்பு சீவி படம் எப்படி இருக்கு? பயில்வான் ரங்கநாதனின் விமர்சனம்!

சென்னை: பொன்ராம் இயக்கத்தில் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் ஹீரோவாக நடித்திருக்கும் படம் கொம்பு சீவி. இந்த படத்தில் சரத்குமார் முக்கிய வேடத்தில் நடித்திருக்க நாட்டாமை படத்தில் டீச்சராக வந்த ராணியின் மகள் தர்ணிகா கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார். மேலும் இந்த படத்தில் காளி வெங்கட், முனீஸ்காந்த், ஜார்ஜ் மரியான், சுஜித் சங்கர், கல்கி ராஜா ஆகியோர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். டிசம்பர் 19ஆம் தேதியான வெளியாக இப்படம் குறித்து பயில்வான் ரங்கநாதனின் விமர்சனம் பார்க்கலாம்.

கொம்பு சீவி திரைப்படத்தின் கதை என்னவென்றால் ஊரில் பெரிய மனுஷனாக சரத்குமார் இருக்கிறார். பெயருக்கு தான் பெரிய மனுஷன், ஆனால், கஞ்சா கடத்துவது, மீன் கடத்துவது என பல வேலைகளை செய்கிறார். கெட்ட வேலைகளை செய்தாலும் ஊர் மக்களுக்கு பல நன்மைகளை செய்கிறார். ஒரு நாள் சரத்குமார் வில்லன் ஒருவனிடம் வசமாக மாட்டிக் கொள்கிறார். உயிர் போகும் நேரத்தில் சண்முக பாண்டியன் சரத்குமாரின் உயிரை காப்பாற்றுகிறான். சண்முக பாண்டியனின் நடவடிக்கைகள் பிடித்துப் போனதால் சரத்குமார் அவர் மீது மிகுந்த பாசத்தை வைத்து இருக்கிறார்.

Kombuseevi Bayilvan Ranganathan Review
Photo Credit:

கொம்பு சீவி படத்தின் கதை: இந்த நேரத்தில் தான், காவேரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அணை உடைந்து வெள்ளம் ஊருக்குள் வந்து பல கிராமங்கள் அடித்துச் செல்லப்படுகிறது. வீடு வாசலை இழந்த கிராம மக்களுக்கு உதவுவதற்காக சரத்குமார் கஞ்சாவை பயிரிடுகிறார். அதில் கிடைக்கும் பணத்தை வைத்து ஊர் மக்களுக்கு பல உதவிகளை செய்து வருகிறார். ஆனாலும் கிராமத்தில் பஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது. கஞ்சா மூலம் சம்பாதிக்கும் பணம் போதவில்லை என்பதால் பெரிய அளவிற்கு கஞ்சா விற்பனை செய்ய 'டீல்' ஒன்று வருகிறது. ஐந்து கோடி ரூபாய் டீலை முடித்தால், பல கிராமங்கள் பிரச்சனையில் இருந்து மீண்டு விடலாம் என நினைக்கும் சரத்குமாரும், சண்முகம் பாண்டியனும் ஒரு லாரியில் அந்த கஞ்சாவை கடத்திக்கொண்டு செல்கிறார்கள். அவர்கள் அந்த கஞ்சாவை விற்பனை செய்தார்களா... இல்லை போலீசில் சிக்கினார்களா.. என்பது தான் கொம்பு சீவி திரைப்படத்தின் கதை.

ஜாலியான நடிப்பு: கொம்பு சீவி திரைப்படத்தில் சரத்குமார் அலட்டிக் கொள்ளாமல் ஜாலியான நாட்டாமையாக நடித்திருக்கிறார். டியூப் படத்தில் எப்படி ஒரு கதாபாத்திரத்தில் ஜாலியாக நடித்திருந்தாரோ அதேபோல நடித்திருக்கிறார். ஏற்கனவே பொன்ராம் அவர்கள் சிவகார்த்திகேயன் சத்யராஜை வைத்து வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற படத்தை எடுத்திருந்தார். அந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. அதேபோல தற்போது சரத்குமார், சண்முக பாண்டியனை வைத்து இந்த படத்தை எடுத்திருக்கிறார். இதில் சரத்குமார் ஜாலியாக நடித்து ஸ்கோர் செய்து இருக்கிறார்.

பார்க்க வேண்டிய படம்: அதேபோல சண்முகம் பாண்டியன் சண்டையில் அதிரிபுதிரி செய்திருக்கிறார். அவர் சண்டை காட்சிகளில் தியேட்டரில் கைதட்டார் பறக்கிறது. அவர் அப்பாவை போல பல இடங்களில் சண்டை காட்சிகளை செய்து இருந்தாலும் நடிப்பில் எல்கேஜி மாணவனாக இருக்கிறார். இன்னும் நடிப்பில் அவர் மெருகேற வேண்டும். வெறும் சண்டை, டான்ஸ் தெரிந்தால் மட்டும் போதாது, அதற்கான முயற்சிகளை சண்முக பாண்டியன் செய்ய வேண்டும். படத்தில் பல இடத்தில் லாஜிக் மீறல்கள் இருந்தாலும், திரைக்கதை, படம் சுவாரசியமாக திருப்பங்களுடன் செல்வதால் படம் எந்த இடத்திலும் போர் அடிக்காமல் செல்கிறது. மற்றபடி கொங்கு சீவி திரைப்படம் ஜாலியா குடும்பத்தோடு அனைவரும் சேர்ந்து பார்க்க வேண்டிய படம் என பயில்வான் ரங்கநாதன் தனது விமர்சனத்தில் கூறியுள்ளார்

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X