Bayilvan Review: தீயவர் குலை நடுங்கு படம் எப்படி இருக்கு? பயில்வான் விமர்சனம்!

சென்னை: அறிமுக இயக்குனர் தினேஷ் லட்சுமணன் இயக்கத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜுன், ஐஸ்வர்யா ராஜேஷ், ராம்குமார், வேலன் ராமமூர்த்தி இணைந்து நடித்துள்ள திரைப்படம் 'தீயவர் குலை நடுங்க'. இப்படம் தியேட்டரில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இப்படம் குறித்து பயில்வான் ரங்கநாதனின் விமர்சனத்தை பார்க்கலாம்.

சிறப்பு குழந்தைகள் படிக்கும் பள்ளியில் ஆசிரியராக வேலை செய்து வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். அந்தப் பள்ளியில் படிக்கும் 10 வயது சிறுமியை ஒரு தொழில் அதிபர், பாலியல் பலாத்காரம் செய்து கொன்றுவிடுகிறார். அந்த தீய செயலில் ஈடுபட்டவர்களை அர்ஜூன் கண்டுபிடித்து என்ன தண்டனை வாங்கிக் கொடுக்கிறார் என்பது தான் தீயவர் குலை நடுங்க திரைப்படத்தின் கதை.

Theeyavar Kulaigal Nadunga Bayilvan Ranganathan Aishwarya
Photo Credit:

தீயவர் குலை நடுங்க: படத்திற்கு தீயவர் குலை நடுங்க என அழகான பொருத்தமான தலைப்பை வைத்து இருக்கிறார் இயக்குநர். 10 வயது குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்துவிட்டு, அதை விபத்து என நாடகம் ஆடுகிறார்கள். அது கொலை என கண்டுபிடிக்கிறார் அர்ஜுன். இந்த திரைப்படத்தில் சிவாஜி கணேசனின் மகன் ராம் குமார் கொடூரமான வில்லனாக நடித்து இருக்கிறார். அவரின் குரலும், கம்பீரமான உடல் அமைப்பும் அந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமானதாக இருக்கிறது. இந்த திரைப்படத்தின் மூலம் ராம் குமாரை பல திரைப்படங்களில் வில்லனாக நாம் பார்க்க முடியும். அதேபோல மற்றொரு வில்லனாக வேலன் ராமமூர்த்தி நடித்திருக்கிறார். பல தீய செயல்களுக்கு துணை போனாலும், ஒரு கட்டத்தில் வேண்டாம் பாவம் என்று சொல்லக்கூடிய நபராக இருக்கிறார். கடைசியில் அவரையே கொலை செய்து விடுகிறார் வில்லன்

அனைவரும் பார்க்க வேண்டிய படம்: ஆக்ஷன் கிங் அர்ஜுன் போலீசாக நடித்துள்ளார். பல திரைப்படங்களில் அர்ஜுனை நாம் காவல்துறை அதிகாரியாக பார்த்து இருக்கிறோம். ஆனால், இந்த திரைப்படத்தில் ஏதோ ஒன்று மிஸ் என்பது போல அர்ஜுன் அவர்களின் கதாபாத்திரம் இருந்தது. ஆனால், சண்டை காட்சிகளில் மிரட்டி உள்ளார். அர்ஜூனுக்கு டஃப் கொடுக்கும் வகையில், ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். சிறப்பு குழந்தைகளுக்கு எப்படி டீச்சராக இருக்க வேண்டும் என்பதை ஒவ்வொரு காட்சியிலும் அட்டகாசமாக நடித்து இருக்கிறார். இந்த படத்தில் ஐஸ்வர்யா ஒரு அன்னை தெரசாவாகவே மாறி இருப்பது அவருடைய நடிப்பில் தெரிகிறது. வேறு விதமான மர்டர், கிரைம், திரில்லர் திரைப்படமாக தீயவர் குலை நடுங்க திரைப்படம் இருக்கிறது. இந்த திரைப்படத்தை நிச்சயம் குடும்பத்தோடு பார்க்கலாம். குழந்தைகளுக்கு 'குட் டச் எது... பேட் டச் எது..' என்பதை இந்த திரைப்படம் கற்றுக்கொடுக்கும் திரைப்படமாக இருக்கிறது என்று பயில்வான் ரங்கநாதன் தன் விமர்சனத்தில் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X