ஊருக்குத்தான் உபதேசமா?விஜய்யை விளாசிய பயில்வான் ரங்கநாதன்!

சென்னை : நடிகர் விஜய்யின் நடிப்பில் உருவாகி உள்ள வாரிசு திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது.

இப்படத்தில் விஜய்யின் தீவிர ரசிகை ராஷ்மிகா மந்தனா ஜோடியாக நடித்தள்ளார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு , சுமன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இத்திரைப்படம் பொங்கல் பாண்டியையொட்டி ஜனவரி 11ந் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் டிரைலர் நேற்று முன்தினம் வெளியாக படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

வாரிசு

வாரிசு

இந்நிலையில் வாரிசு டிரைலர் குறித்து யூடியூப் சேனல் ஒன்றில் பேசி உள்ள பயில்வான் ரங்கநாதன். இயக்குநர் வம்சியும், தயாரிப்பாளர் தில் ராஜூம் வாரிசு படத்தை உருவாக்கி இருக்கிறார்கள். இது போன்ற ஒரு கதையில் நடித்தது இல்லை என்று விஜய்யே படத்திற்கு சர்ட்டிபிகேட் கொடுத்துள்ளார். இந்த படத்தில் முதல்முறையாக கூட்டு குடும்பத்தின் அவசியத்தையும், இதில் உள்ள பிரச்சனை,காதல், ஆக்ஷன் என அனைத்தும் உள்ளது.

அனைத்தும் சூப்பர்

அனைத்தும் சூப்பர்

நேற்று முன் தினம் வெளியான டிரைலரில்,ரசிகர்களை உசுப்பேற்றும் வகையில் அத்தனை அம்சங்களும் உள்ளது. ராஷ்மிகாவின் டான்ஸ், வில்லன் பிரகாஷ் ராஜின் அடிமேல் அடிஅடி என்ற வசனம், விஜய்யின் பஞ்ச் டையலாக், யோகி பாபுவின் நகைச்சுவை என அனைத்தும் இந்த டிரைலரில் உள்ளது.

ராஷ்மிகாவின் தூக்கலான கவர்ச்சி

ராஷ்மிகாவின் தூக்கலான கவர்ச்சி

சரத்குமார், பிரகாஷ் ராஜ், ஷ்யாம், தெலுங்கு நடிகர் சுமன் என நான்கு கதாநாயகன்கள் வாரிசு படத்தில் நடித்திருக்கிறார்கள். இவர்கள் பல படங்களில் கதாநாயகனாகவும், வில்லன்களாகவும், குணசித்திர கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார்கள். நட்சத்திர பட்டாளங்கள் நிறைந்த இந்த படத்தில் ராஷ்மிகா மந்தானா மிகவும் கவர்ச்சியாக நடித்துள்ளார்.

பாசத்தால் கட்டப்பட்ட வீடு

பாசத்தால் கட்டப்பட்ட வீடு

வாரிசு படம் கூட்டுக்குடும்பத்தின் அவசியத்தை சொல்லும் படமாக உள்ளது. டிரைலரின் ஆரம்பத்தில் விஜய்யின் அம்மாவாக நடித்திருக்கும் ஜெயசுதா, இந்த வீடு கல்லால் கட்டப்பட்ட வீடு இல்லை, பாசத்தால் கட்டப்பட்ட வீடு என்று கூறியுள்ளார். டிரைலரின் இறுதியில் குடும்பத்தில் குறை இருக்கலாம் நமக்கு இருப்பது ஒரே குடும்பம் என்று, விஜய் பேசும் ஒரு மாஸ் வசனமும் உள்ளது.

ஊருக்குத்தான் உபதேசமா?

ஊருக்குத்தான் உபதேசமா?

இந்த டிரைலரைப் பார்த்து நான் கேட்கும் கேள்வி என்னவென்றால், மனைவி சங்கீதா,மகன்,மகளைத்தான் குடும்பம் என்று சொல்லுகிறாரா? எஸ்.ஏ.சந்திர சேகர் , ஷோபாவை தனிக்குடும்பம் என்று சொல்கிறாரா? வாரிசு படத்தில் கூட்டு குடும்பத்தைப்பற்றி பேசும் விஜய் தனது சொந்த வாழ்க்கையில் ஏன் கூட்டு குடும்பத்தை விரும்பவில்லை. ஊருக்குத்தான் உபதேசம் உனக்கு இல்லையடி கண்ணே என்று சொல்லுவார்கள் அப்படித்தான் விஜய் நடந்து கொள்கிறார்.

விஜய்க்கு இல்லையா?

விஜய்க்கு இல்லையா?

படத்தில் மட்டும் கூட்டு குடும்பம் என்று சொல்லிவிட்டு தனித்தனியாக வாழ்வது ஏன்? விஜய் ஒரு சாதாரண நடிகராக இருந்து இருந்தால் இந்த கேள்வியை நான் கேட்டு இருக்க மாட்டேன். தலைவராக வரக்கூடிய ஒரு நடிகர், கூட்டுக்குடும்பமாக வாழுங்க, சந்தோஷமா இருங்க, என்று தனது ரசிகர்களுக்கு சொல்லுகிறார். ஆனால், அந்த அறிவுரை விஜய்க்கு இல்லையா? என பயில்வான் ரங்கநாதன் கேள்வி கேட்டுள்ளார்.

நாங்க என்ன கேனப்பயலா?

நாங்க என்ன கேனப்பயலா?

மற்றபடி விஜய்யின் வசனம் எல்லாம் சூப்பரோ சூப்பர். வாலிப வயதில் விஜய்க்கு மகன் இருக்கும் போதும், விஜய் இன்னும் வாலிபனாகவே ரசிகர்களின் கண்களுக்கு தெரிகிறார். ஆக்ஷன் நாயகன் விஜய் என்று பெயர் எடுத்து இருக்கிறார் விஜய். இந்த படத்தில் வா தலைவா...வா தலைவா...நீயே உனக்கு தலைவா வா என்று பாடல் ஒன்று உள்ளது. அது என்னைய்யா விஜய்க்கு அவரே தலைவரா? என்ன பாட்டு எழுதி இருக்கீங்க, இந்த மாதிரி பாட்டை கேட்பதற்கு நாங்க என்ன கேனப்பயலா? இந்த மாதிரி பாட்டு எழுதுவது சரியில்லை என பயில்வான் ரங்கநாதன் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X