மஞ்சள் வீரன் இயக்குநர் ஒரு Gay- வா? சரியான திருட்டுப்பய.. விளாசிய பயில்வான் ரங்கநாதன்!

சென்னை: யூடியூப் மூலம் பிரபலமான டிடிஎஃப் வாசன் மஞ்சள் வீரன் படத்திலிருந்து நீக்கப்பட்டு அந்த படத்தில் கூல் சுரேஷ் ஹீரோவாக நடிக்க இருக்கிறார்.அந்த படத்தில் இருந்து நீக்கியதே எனக்கு தெரியாது, பணத்தை வாங்கிக்கொண்டு ஏமாற்றிவிட்டார் என டி.டி.எஃப்.வாசன் ஒரு பக்கம் கூறி வர, இயக்குநர் செல்அம் டி.டி.எஃப்.வாசன் தனக்கு ஒத்துழைப்பு தரவில்லை என்று பேட்டி அளித்து வருகிறார். இருவரும் மாறி பேசி வரும் நிலையில் இதுகுறித்து பயில்வான் ரங்கநாதன் வீடியோவில் பேசி உள்ளார்.

டி.டி.எஃப்.வாசனை யூடியூப்பில் 40 லட்சம் சப்ஸ்கிரைபர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர். பைக் ஓட்டி இளசுகள் மத்தியில் பிரபலமான வாசன், மஞ்சள் வீரர் படத்தில் ஹீரோவாக நடிக்க இருப்பதாக போஸ்டருடன் அறிவிப்பு வெளியானது.இப்படத்தை திருவிக பூங்கா என்ற படத்தை இயக்கிய செல் அம் என்பவர் இயக்குவதாக தகவல் வெளியானது. இந்த அறிவிப்பு வெளியாகி இரண்டு ஆண்டுக்கு மேலான நிலையில் திடீரென "மஞ்சள் வீரன்" படத்திலிருந்து டி.டி.எஃப்.வாசனை நீக்குவதாக அப்படத்தின் இயக்குநர் செல் அம் அறிவித்திருந்தார்.

ttf vasan manjal veeran

எனக்கு தெரியாது: இதுகுறித்து தனது யூடியூப் சேனலில் பேசி டி.டி.எஃப்.வாசன், செல் அம்,என்னை படத்தில் இருந்து நீக்கியதே எனக்கு தெரியாது. இதுபற்றி அவர் ஒரு முறைக்கூட என்னிடம் பேசியது இல்லை. அதுமட்டுமில்லாமல், அவர் படப்பிடிப்புக்கு ஒத்துழைப்பு தரவில்லை என்று சொல்லி இருந்தார். ஆனால், மஞ்சள் வீரன் படத்தின் போட்டோஷூட் மட்டுமே நடந்தது. 30 சதவீதம் படம் முடிந்துவிட்டது என்று சொல்வது எல்லாமே பொய் என்று கூறினார். மேலும், போட்டோஷூட் மற்றும் படபூஜைக்கு கூட நான் தான் பணம் செலவு செய்தேன். அந்த பணத்தைக்கூட நான் கேட்க மாட்டேன். ஆனால், என்னிடம் சொல்லி இருக்கலாம், என்னிடம் எதையும் சொல்லாமல் நேரடியாக மீடியாவில் என்னை நீக்குவதாக சொல்லி என் பெயரை கெடுத்துவிட்டார் என்று பேசி இருந்தார்.

வாசன் ஒரு குப்பை: இதையடுத்து சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த இயக்குநர் செல்அம், வீவ்சுக்காக எதுவேண்டுமானாலும் செய்யக்கூடியவன் டி.டி.எஃப்.வாசன், சரியான குப்பை என மிகவும் மோசமாக பேசி இருந்தார். இந்த பேட்டியைப்பார்த்து கொந்தளித்த டி.டி.எஃப்.வாசனின் நண்பர்கள் மற்றும் சில யூடியூபர்ஸ் இயக்குநர் செல்அம்மை திட்டி தீர்த்து வருகின்றனர்.இப்படி ஒருவரை ஒருவர் வசை மழை பொழிந்து இருக்கும் நிலையில், இதுகுறித்து பயில்வான் ரங்கநாதன் பேசி இருக்கிறார். அதில், மஞ்சள் வீரன் படத்தை ஆரம்பிக்கும்போது இயக்குனர் செல்அம்மை யாருக்கும் தெரியாது,

டம்மி பீஸ்: சரியான டம்மி பீஸாகத்தான் இருந்தார். டி.டி.எஃப்.வாசன் அவருக்கு நல்ல அறிமுகத்தை கொடுத்து அவருக்கு பிரேம் கொடுத்து, அவ்வப்போது அவருக்கு பணம் கொடுத்து இருக்கிறார். இதுவரை 25 லட்சம் ரூபாய் கொடுத்து இருக்கிறார். ஆனால்,படம் எடுக்காமல் இயக்குநர் இஷ்டத்திற்கு செலவு செய்து இருக்கிறார். இதனால் டிடிஎஃப் வாசன் பணத்தை கொடுப்பதை நிறுத்தியுள்ளார்.இதுமட்டுமில்லாமல், அவர் ஒரு ஓரினசேர்க்கையாளர் என்று ஒரு இயக்குநர் கூறியுள்ளார்.

நம்பி ஏமாறலாமா? தற்போது டிடிஎஃப் வாசன் படத்தில் இருந்து நீக்கிவிட்டு, அதில் கூல் சுரேஷ் இப்போது ஹீரோவாகி இருக்கிறார். அது சம்பந்தமான பிரமோஷன் சமீபத்தில் நடந்தது. அந்த பிரமோஷனுக்கு கூட கூல் சுரேஷ் தான் நாற்பதாயிரம் கொடுத்ததாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. இது எந்த அளவுக்கு உண்மை என தெரியவில்லை, கூல் சுரேஷை பொருத்தவரைக்கும் அவருக்கு என ஓபனிங் கிடையாது. அவரை நம்பி யார் எந்த தயாரிப்பாளர் பணத்தை போடுவார்கள். இப்படி எல்லாம் தெரிந்தவர்களே இப்படி ஒரு இயக்குநரை நம்பி ஏமாறலாமா? என்றும் இருவரையும் விசாரித்தால் தான் உண்மை தெரியும் என பயில்வான் ரங்கநாதன் அந்த பேட்டியில் பேசி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X