Bayilvan Ranganathan: பிச்சை எடுத்து பிக் பாஸுக்கு போனவரு அந்த போட்டியாளர்.. பொங்கிய பயில்வான்!
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் ஏழு நிகழ்ச்சிக்கு பிச்சை எடுத்துப் போனவர் நடிகர் கூல் சுரேஷ் என பயில்வான் ரங்கநாதன் தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
நடிகர் சிம்புவின் நண்பரான கூல் சுரேஷ் தியேட்டர்களில் FDFS கொண்டாட்டங்களின் போது கலந்து கொண்டு அந்த படங்களை விதவிதமாக புரமோட் செய்து வந்தார்.

சமீபத்தில், தொகுப்பாளினி ஐஸ்வர்யாவிடம் அநாகரிகமாக கூல் சுரேஷ் நடந்து கொண்டதற்காக மன்னிப்பும் கேட்டிருந்தார். ஆனால் திடீரென அவருக்கு படம் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வாய்ப்புகள் மறுக்கப்பட்டதாக கூறுகின்றனர்.
கூல் சுரேஷ்: 2001ம் ஆண்டு வெளியான பிரசாந்தின் சாக்லேட் படத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானவர் கூல் சுரேஷ். 2002ம் ஆண்டு வெளியான சிம்புவின் காதல் அழிவதில்லை படத்தில் நடித்த நிலையில், சிம்புவுடன் அப்போதிலிருந்தே நல்ல நட்பு ஏற்பட்ட நிலையில், அவரது தீவிர ரசிகனாகவே செயல்பட்டு வருகிறார்.
காக்க காக்க, திருடா திருடி, அலை, எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி, தேவதையை கண்டேன், திருப்பாச்சி, ஆழ்வார், தீபாவளி, பச்சைக்கிளி முத்துச்சரம், குசேலன், படிக்காதவன், வாலு, டிடி ரிட்டர்ன்ஸ், இந்த வாரம் வெளியான சந்திரமுகி 2 படம் வரை பல படங்களில் நடித்துள்ளார். தற்போது பிக்பாஸ் போட்டியாளராக மாறியுள்ளார்.
மாயாவை குறுகுறுவென பார்த்து: பிக் பாஸ் வீட்டில் கூல் சுரேஷ் ஆரம்பத்தில் இருந்தே டபுள் மீனிங்காக பேசுவது, பெண்களை பூக்கள் என்றும் தன்னை பூந்தோட்ட காவல்காரன் என சொல்வதுமாக பெண் போட்டியாளர்களுடனே ஒட்டி உரசி விளையாடி வருகிறார். இந்நிலையில், நேற்று மாயா நடந்து செல்லும் போது அவரது பின்னழகை பார்த்து கூல் சுரேஷ் ரசிக்க, மாயா ஏன் அப்படி பார்க்குறீங்க என்றே டைரக்ட்டாக கேட்டு விட்டார். உடனடியாக தேவையில்லாமல் வாய் கொடுத்து விஷ்ணு அந்த சண்டையில் சிக்கி விட்டார்.
பயில்வான் ரங்கநாதன் விளாசல்: பிக் பாஸ் எல்லாம் ஒரு நிகழ்ச்சியா அதுக்கெல்லாம் மனுஷன் போவானா என அபிஷேக் ராஜா முன்பு பேசிவிட்டு பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றதைப் போலவே கூல் சுரேஷும் பிக் பாஸை கழுவி ஊற்றி இருந்தார். இந்நிலையில் அவரே பிக் பாஸ் போட்டியாளராக தற்போது மாறியிருப்பது தான் வேடிக்கை என பயில்வான் ரங்கநாதன் பேசியுள்ளார்.
பிச்சை எடுத்து பிக் பாஸுக்கு: அந்தத் தொகுப்பாளனியிடம் மேடையில் அத்துமீறி நடந்து கொண்ட நிலையில் கூல் சுரேஷுக்கு சோத்துக்கே வழியில்லாமல் போய்விட்டது என அவரே வீடியோ போட்டு பிச்சை எடுத்து இருந்தார். பிச்சை எடுத்து தான் பிக்பாஸ் வீட்டுக்கு கூல் சுரேஷ் போட்டியாளராக வந்துள்ளார் என்ன பயில்வான் ரங்கநாதன் பொங்கியுள்ளார்.
முன்னதாக இந்த சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பயில்வான் ரங்கநாதன் மற்றும் ரேஷ்மா நாயர் உள்ளிட்டோர் போட்டியாளர்களாக கலந்து கொள்ளப் போவதாக எதிர்பார்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











