வனிதா விஜயகுமார் 50 வயசுல கல்யாணம் பண்ணி என்ன பண்ணப் போறாரு.. பயில்வான் ரங்கநாதன் கிண்டல்!
சென்னை: நடிகை வனிதா விஜயகுமார் ராபர்ட் மாஸ்டருடன் ரொமாண்டிக் போஸ் கொடுத்து Save the date என வெளியிட்ட போஸ்டர் ஒன்று நேற்று முதல் சினிமா வட்டாரத்தில் பெரும் சலசலப்பை உருவாக்கியுள்ளது. ஏற்கனவே பலமுறை வனிதா விஜயகுமார் திருமணம் செய்த நிலையில், மீண்டுமொருமுறை திருமணம் செய்யப் போகிறாரா என்கிற கேள்விகள் எழுந்துள்ளன.
ஆனால், இது முழுக்க முழுக்க படத்திற்கான புரமோஷன் யுக்தி தான் என்றும் தகவல்களும் வெளியான நிலையிலும், அக்டோபர் 5ம் தேதி வனிதா விஜயகுமார் மற்றும் ராபர்ட் மாஸ்டர் இருவரும் என்ன தான் செய்யப் போகின்றனர் என்பதை காணவும் ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், அப்பு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பின் போது பயில்வான் ரங்கநாதனிடம் வனிதா விஜயகுமாரின் திருமண அறிவிப்பு குறித்த கேள்வி எழுந்த போது 50 வயதில் கல்யாணம் பண்ணி என்ன பண்ண போறாரு என கிண்டலாக பதிலளித்துள்ளார்.
ராபர்ட் மாஸ்டருடன் நட்பு: பிக் பாஸ் சீசன் 3ல் போட்டியாளராக கலந்துக் கொண்ட வனிதா விஜயகுமார் யாஷிகா ஆனந்த் அடுத்தடுத்து தனது நண்பர்களான பாலாஜி முருகதாஸ், நிரூப் நந்தகுமார் உள்ளிட்ட பிரபலங்களை பிக் பாஸ் வீட்டுக்கு அனுப்பி வைத்ததை போல ராபர்ட் மாஸ்டர் மற்றும் தனது மகள் ஜோவிகா உள்ளிட்டோரை பிக் பாஸ் வீட்டுக்கு வனிதா அனுப்பி வைத்துள்ளார்.
திருமண அறிவிப்பு போல: வனிதா விஜயகுமார் பீட்டர் பாலை பிரிந்த நிலையில் இருந்தே வனிதா விஜயகுமார் அடுத்து யாரை திருமணம் செய்துக் கொள்வார் என்கிற கேள்விகள் எழுந்துக் கொண்டு தான் இருக்கின்றன. இந்நிலையில், அதனை படத்தின் புரமோஷனுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என்கிற ஐடியாவுடன் ராபர்ட் மாஸ்டருடன் வனிதா விஜயகுமார் திருமணம் செய்துக் கொள்ளப் போவதை போன்ற Save the date போஸ்டர் வெளியானது.
பட புரமோஷன்: Mr & Mrs எனும் படத்தில் ராபர்ட் மாஸ்டருடன் இணைந்து ஜோடி போட்டு வனிதா விஜயகுமார் நடித்து வருகிறார். அந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரைத் தான் வரும் அக்டோபர் 5ம் தேதி வெளியிடபோகின்றனர் என்றும் அதற்கான பப்ளிசிட்டி ஸ்டன்ட் தான் இது என தகவல்கள் வெளியாகி உள்ளன.

பயில்வான் ரங்கநாதன் கிண்டல்: இந்நிலையில், இதுபற்றிய கேள்வி பயில்வான் ரங்கநாதனிடம் நேற்று நடைபெற்ற அப்பு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கேட்கப்பட்டது. அதற்கு இந்த நிகழ்ச்சிக்கும் இந்த கேள்விக்கும் சம்மந்தம் இருக்கா எனக் கேட்க, நீங்க தான் வனிதாவோட நல்ல நண்பராயிற்றே என பத்திரிகையாளர்கள் பயில்வானை மடக்க, அது வெறும் படம் புரமோஷன் தான் எனக் கூறிவிட்டார். 50 வயசுல கல்யாணம் பண்ணி அவரு என்ன பண்ணப் போறாரு என கிண்டலாக பதிலளிக்க அனைவரும் சிரித்து விட்டனர்.
வரவேற்பை பெற்ற அந்தகன்: பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு வனிதா விஜயகுமார் தமிழ் மற்றும் தெலுங்கில் 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து விட்டார். இந்த ஆண்டு பிரசாந்த் நடிப்பில் வெளியான அந்தகன் படத்தில் சமுத்திரகனி மனைவியாக நடித்து அவர் செய்த முட்டை காமெடிக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. பிக் பாஸ் பிரபலங்களான ராபர்ட் மாஸ்டர் மற்றும் வனிதா இணைந்து நடித்து வரும் Mr & Mrs படமும் அவருக்கு நல்ல படமாக அமையும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.


Click it and Unblock the Notifications











