தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்துக்கு என்ன காரணம்.. பயில்வான் ரங்கநாதன் சொல்வது இதுதான்!
சென்னை : நடிகர் தனுஷும் ரஜினிகாந்தின் மகளுமான ஐஸ்வர்யாவும் பிரிந்து வாழப்போவதாகக் கூறி பரஸ்பரம் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
இவர்களின் பிரிவு அறிவிப்பு ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. இவர்களின் விவாகரத்து முடிவுக்கு காரணம் என்ன என்பது குறித்து பயில்வான் ரங்கநாதன் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.

தனுஷ் ஐஸ்வர்யா பிரிந்தனர்
தனுஷும் மற்றும் ஐஸ்வர்யாவும் அவரவர் சமூக ஊடக பக்கங்களில் ஒரே மாதிரியான அறிக்கையை கையெழுத்து போடும் பகுதியில் பெயரையும் அதற்கு முன்பாக சில வார்த்தைகளை மட்டும் மாற்றிக் கொண்டு பிரிவாக அறிவித்துவிட்டு பிரிந்துள்ளனர். இவர்களின் திடீர் முடிவு ரசிகர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ள நிலையில், இவர்கள் பிரிவுக்கு என்ன காரணம் என்பதை பயில்வான் ரங்கநாதன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

2004ம் ஆண்டில் திருமணம்
தனுஷ் வளர்ந்து வந்த காலகட்டத்தில் தனுஷ், ஐஸ்வர்யா குறித்து கிசுகிசுக்கங்கள் எழுந்தன, அந்த கிசுகிசுவைத் தொடர்ந்தே இருவருக்கும் திருமணம் குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும், பின்னர் 2004ம்ஆண்டு இருவீட்டாரின் சம்பதத்துடன் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது என்றார்.

தனியாக வந்த ஐஸ்வர்யா
தனுஷ், ஐஸ்வர்யா தம்பதியினருக்கு யாத்ரா, லிங்கா என இரு மகன்கள் இருக்கிறார்கள் இருவருமே, அப்பாவின் மீது மிகுந்த அன்பு கொண்டவர்கள். ஹாலிவுட் திரைப்படமான தி கிரேக் மேன் திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக அமெரிக்கா சென்ற தனுஷூடன் ஐஸ்வர்யா மற்றும் இருமகன்களும் சென்று இருந்தனர். கிட்டத்தட்ட 3 மாதகாலம் படப்பிடிப்பு நடைபெற்றது. ஆனால், ஐஸ்வர்யா படப்பிடிப்பு நடந்து கொண்டு இருக்கும்போதே தனியாக இந்தியா திரும்பி விட்டார். யாத்ரா, லிங்கா தனுஷூடனே இருந்துவிட்டனர். அப்போதிலிருந்தே இருவருக்கும் பிரச்சினை என்று பேசப்பட்டது.

அப்போதே தொடங்கிய பிரச்சினை
இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட தொடங்கமாக அமைந்தது 3 திரைப்படம் தான். இந்த திரைப்படத்தில் தனுஷ், ஸ்ருதிஹாசனுடன் மிகவும் நெருக்கமாக நடித்திருந்தார்கள். அந்த படத்தால் மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டதாகவும் அதையும் தனுஷ் சமாளித்தார். அப்போதிலிருந்தே தனுஷ் ஐஸ்வர்யா குடும்பத்தில் பிரச்சினை தீவிரமாகியது.

அன்பானவர் தனுஷ்
தனுஷ் தனது குடும்பத்தின் மீது மிகுந்த ஈடுபாடுக்கொண்டவர் அப்பா கஸ்தூரி ராஜா, அண்ணன் செல்வராகவன், அண்ணி குழந்தைகளுடன் அன்பாக பழகக்கூடியவர். தனுஷ் குடும்பத்தில் நடக்கும் எந்த ஒரு குடும்ப விழாவிலும் ஐஸ்வர்யா கலந்து கொள்ள மாட்டாராம். அதே போல , தனுஷின் அப்பா, அம்மாவை இதுவரை மாமா, அத்தை என்று கூட அழைத்தது இல்லையாம்.

பணப்பிரச்சினை
அப்பா மீது மிகுந்த அன்பு கொண்ட ஐஸ்வர்யா அப்பா வீட்டிலேயே எப்போதும் இருந்ததாகவும், தனுஷூடன் இனக்கமாக இருந்தது இல்லை என்று கூறப்படுகிறது. இதனால், அப்பாவின் வீட்டிற்கு அருகிலேயே வீடு கட்ட பூஜைகள் போடப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. இதனால் தனுஷிற்கு கடன் சுமை அதிகரித்ததாகவும், இந்த நேரத்தில் ரஜினியும் உதவாமல் கை விரித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. பணத்தேவையால் தனுஷ் பல திரைப்படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருவதாகவும் கூறினார்.
Recommended Video

ரஜினியின் சமாதான முயற்சி தோல்வி
தனுஷ், ஐஸ்வர்யா பிரிவு அறிவிப்புக்கு முன் ரஜினிகாந்த் இருவரையும் சமாதானப்படுத்த முயற்சி செய்துள்ளார். ஆனால், இருவரும் தங்களின் முடிவில் உறுதியாக இருந்ததால் வேறு வழியில்லாமல் விவாகரத்து முடிவை ரஜினி ஏற்றுக்கொண்டதாக பயில்வான் ரங்கநாதன் ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











