லியோ சக்சஸ் மீட்டுக்கு அனிருத்தை கூப்பிடல… பயில்வான் சொன்ன காரணம் இதுதான்!

சென்னை: லியோ சக்சஸ் மீட்டுக்கு அனிருத்தை கூப்பிடவே இல்லை என்று பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா, சஞ்சய் தத் உள்ளிட்டோர் நடித்த லியோ திரைப்படம் அக்டோபர் 19ந் தேதி வெளியானது.

லியோ படம் ரூ.550 கோடிக்கும் மேல் வசூலை அள்ளிய நிலையில், இப்படத்தின் வெற்றி விழா, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

Bayilvan Ranganathan said that Anirudh was not invited to the leo success meet

விஜய் பேச்சு: இந்த விழாவில் பேசிய நடிகர் விஜய், எந்த எதிர்பார்ப்பும் இல்லாம என் மீது இவ்வளவு அன்பு வச்சிருக்கீங்க. என் உடம்பு தோலை உங்க காலுக்கு செருப்பா தச்சுப்போட்டாகூட, அந்த அன்புக்கு ஈடாகாது. உங்க உழைப்புல நீங்க எனக்காக செலவு பண்ற ஒவ்வொரு காசுக்கும் உண்மையா இருப்பேன். கொஞ்ச நாளாக சோஷியல் மீடியாவில் உங்க கோபம் அதிகமா இருக்கு யார் மனசையும் புண்படுத்த வேண்டாம், அது நம்ம வேலை இல்லை என்றார்.

மனைவி வரல: லியோ சக்சஸ் மீட், வெற்றிகரமாக நடந்து முடிந்த பிறகும், இந்த நிகழ்ச்சியில் விஜய்யின் மனைவி சங்கீதா மற்றும் அனிருத் கலந்து கொள்ளாதது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து யூடியூப் ஒன்றுக்கு பயில்வான் ரங்கநாதன் பேட்டி அளித்துள்ளார். அதில், விஜய் மற்றும் சங்கீதா இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து இருப்பதாக செய்திகள் பரவி வருகிறது.

பேருக்குத்தான் சக்சஸ் மீட்: ஆனால், இந்த நிகழ்ச்சிக்கு சங்கீதா வருவார் என்று அனைவரும் எதிர்பார்த்தார்கள். அவர் வராமல் அனைவரின் முகத்திலும் கறியை பூசிவிட்டார். இந்த நிகழ்ச்சியின் பேரு தான் சக்சஸ் மீட், விஜய் ரசிகர்களிடம், ரசிகர் மன்ற நிர்வாகிகளிடம் அவர் பேச வேண்டும் என்பதற்காக நடத்தப்பட்ட நிகழ்ச்சி தான்.

கூப்பிடவே இல்லை: அதே போல, லியோ படத்தின் இசையமைப்பாளர் அனிருத்தை கூப்பிடவே இல்லை. இதனால், அவர் வெற்றி விழாவில் கலந்து கொள்ளவில்லை. சக்சஸ் மீட் என்றால், படக்குழுவினருக்கு கேடயம் கொடுத்து அவர்களை கௌரவப்படுத்தி இருக்க வேண்டும், அந்த எண்ணம் கூட விஜய்க்கு வரவில்லை என்பதும் என்னுடைய ஆதங்கமாக இருக்கிறது என்று பயில்வான் அந்த பேட்டியில் பேசி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X