விக்ரமனை கமல் எதுவும் கேட்க மாட்டார்..அதுக்கு காரணம் இதான்.. உண்மையை உடைத்த பயில்வான் ரங்கநாதன்!

சென்னை : விக்ரமன் என்ன தப்பு செய்தாலும் கமல் அவரை எதுவுமே கேட்க மாட்டார் என்று பயில்வான் ரங்கநாதன் உண்மையை புட்டு புட்டு வைத்துள்ளார்.

21 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில், ஏழு போட்டியாளர்கள் வெளியேறி உள்ளனர். தற்போது அசீம், விக்ரமன், மணிகண்டன், கதிரவன், ஏடிகே, குயின்ஸி, மைனா, தனலட்சுமி, ரச்சிதா, ஷிவின், ஆயிஷா என 14 போட்டியாளர்கள் இருக்கிறார்கள்.

இதில், அசீம், விக்ரமன்,ஷிவின், தனலட்சுமி வலுவான போட்டியாளர்களாக இருக்கிறார்கள்.

சினிமா பிரபலங்கள்

சினிமா பிரபலங்கள்

பிக் பாஸ் நிகழ்ச்சி இதுவரை 5 சீசன்களை கடந்துள்ளது. அக்டோபர் 9ந் தேதி தொடங்கிய பிக் பாஸ் சீசன்6 நிகழ்ச்சி இன்றோடு 56வது நாளில் அடியெடுத்து வைத்துள்ளது. வழக்கமாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் சினிமா பிரபலங்கள், செய்திவாசிப்பாளர்கள், பல துறையில் பிரபலமானவர்கள் தான் வருவார்கள். அந்த வகையில் இந்த சீசனில் டிக்டாக் மூலம் பிரபலமான ஜிபி முத்து, தனலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

விக்ரமன்

விக்ரமன்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டதே இல்லை. அந்த வகையில் அரசியல் பிரமுகரான விக்ரமன் முதன்முறையாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். இவர் 2016 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான விண்ணைத்தாண்டி வருவாயா என்ற சீரியலில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். பல ஊடகங்களிலும் பணியாற்றி இருக்கிறார்.

ஆத்திரக்காரர்களுக்கு புத்தி மட்டு

ஆத்திரக்காரர்களுக்கு புத்தி மட்டு

நேற்றைய எபிசோடில் கமல், ஆத்திரக்காரர்களுக்கு புத்தி மட்டு என்பார்கள் அதே போல, அசீமிடம் பல முறை அறிவுரை சொல்லும் போது அதையெல்லாம் அமைதியாக கேட்டுக் கொண்டு மறுபடியும் அவர் தொடர்ந்து ரகளை தான் செய்கிறார். அவருக்கு ரெட் கார்ட் கொடுங்க என்று பார்வையாளர்கள் கருத்து கூறி வருகின்றனர். அசீம் செய்வது போல நானும் ஆத்திரத்தில் செய்தால் அவருக்கும் எனக்கும் என்ன வித்தியாசம் என்று இந்த வாரமும் அசீமை கடுமையான வார்த்தையால் விளாசியிருந்தார் கமல்.

விக்ரமனை எதுவும் கேட்க மாட்டார்

விக்ரமனை எதுவும் கேட்க மாட்டார்

இந்நிலையில்,பத்திரிக்கையாளரும் சினிமா விமர்சகருமான பயில்வான் ரங்கநாதன்,பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்தே தினமும் நடக்கும் நிகழ்வுகள் குறித்து விமர்சனம் செய்து வருகிறார். அதில், அசீமை வாரா வாரம் விளாசும் கமல்,விக்ரமன் என்ன தப்பு செய்தாலும் ஏன் கண்டுகொள்வதில்லை. ஏன் என்றால், விக்ரமன் ஒரு அரசியல்வாதி அது மட்டுமில்லாமல், பல அரசியல் பிரபலங்களை மடக்கி மடக்கி கேள்வி கேட்டு இருக்கிறார்.

இதுதான் காரணம்

இதுதான் காரணம்

சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்த விக்ரமன், கமல்ஹாசன் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பல விமர்சனங்களை பதிவிட்டுள்ளார். இதனால் தான் கமல்ஹாசன் விக்ரமன் செய்யும் எந்த தவறையும் சுட்டிக்காட்டாமல் அப்படியே மேம்போக்காக நடந்து கொள்வது போல எனக்கு தோன்றுகிறது என பயில்வான் ரங்கநாதன் கருத்து தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X