Rambha And Lakshmi Rai - லட்சுமி ராய்க்கும், ரம்பாவுக்கும் நடந்த குடுமி பிடி சண்டை?..
சென்னை: Bayilan Ranganathan (பயில்வான் ரங்கநாதன்) லட்சுமி ராய்க்கும், ரம்பாவுக்கும் ஷூட்டிங் ஸ்பாட்டில் குடுமி பிடி சண்டை நடந்ததாக பயில்வான் ரங்கநாதன் தெரிவித்திருக்கிறார்.
சினிமா பத்திரிகையாளர் மற்றும் நடிகராக வலம் வருபவர் பயில்வான் ரங்கநாதன். 90களில் பல படங்களில் காமெடி ரோலிலும், கேரக்டர் ரோலிலும் நடித்திருக்கும் இவர் சினிமா சம்பந்தமான நிகழ்ச்சிகளுக்கு பத்திரிகையாளராக சென்று சர்ச்சையான கேள்விகள் கேட்பதை வழக்கமாக வைத்திருப்பவர். அதுமட்டுமின்றி நடிகர்கள் மற்றும் நடிகைகளின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேசி பல சர்ச்சைகளுக்கு தொடக்கப்புள்ளியாகவும் இருப்பார்.

அவதூறு பரப்பும் பயில்வான்: தான் சொல்வதுதான் உண்மை. தனக்கு சினிமாவில் இருப்பவர்கள் பற்றி எல்லாமே தெரியும் என்ற மனப்பான்மையில் இருப்பவர் நயன்தாரா, த்ரிஷா, ரேகா நாயர் உள்ளிட்ட நடிகைகள் குறித்தும் தனுஷ், கவுண்டமணி, வடிவேலு உள்ளிட்ட நடிகர்கள் குறித்தும் பல விஷயங்களை பேசியிருக்கிறார். ஆனால் அவை அனைத்துமே அவதூறுகள்தான் என்பது ரசிகர்களின் கருத்து. மேலும் அவர் அப்படி பேசுவதை பிரபலங்கள் கண்டுகொள்ளாமல் விடக்கூடாது. அவர் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகின்றனர்.
சண்டை செய்த ரேகா நாயர்: இரவின் நிழல் படத்தில் ரேகா நாயர் நிர்வாணமாக நடித்தது குறித்து பயில்வான் ரங்கநாதன் தான்தோன்றித்தனமாக பேசிவைக்க; திருவான்மியூர் கடற்கரையில் அவர் வாக்கிங் சென்றுகொண்டிருந்தபோது ரேகா அவருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதுமட்டுமின்றி பயில்வான் ரங்கநாதன் இறந்தால் பட்டாசு வெடித்து கொண்டாடுவேன் எனவும் பகிரங்கமாக பேட்டியும் அளித்தது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே ராதிகா குறித்து அவதூறாக பேசியதால் பயில்வானை ராதிகா செருப்பால் அடித்தார் என்றும் ஒரு தகவல் உலாவுகிறது.
கே.ராஜனின் பதிலடி: வீடியோக்களில் மட்டுமின்றி சினிமா நிகழ்ச்சியிலும் சர்ச்சை கேள்விகளை கிளப்பும் பயில்வான் ஒருமுறை தயாரிப்பாளர் ராஜனிடம் வாயை கொடுத்தார். அதற்கு கே.ராஜன் கடுமையான சொற்களால் பதிலடி கொடுத்தார். ராஜன் அப்படி பேசியதற்கு பலரும் தங்களது ஆதரவை தெரிவித்தனர். பயில்வான் போன்ற ஆட்களுக்கு ராஜன் வகையறாதான் சரியான ஆட்கள் என ரசிகர்களும் கருத்து தெரிவித்தனர். சமீபத்தில் நடந்த குஷி படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில்கூட சமந்தாவுக்கு நோய் வர காரணமே நீங்கள்தான் என விஜய் தேவரகொண்டாவிடம் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
குடுமி பிடி சண்டை: இந்நிலையில் ஒரு காதலன் ஒரு காதலி படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் ரம்பாவுக்கும், லட்சுமி ராய்க்கும் குடுமி பிடி சண்டை நடந்ததாக தெரிவித்திருக்கிறார் பயில்வான் ரங்கநாதன். ஒரு வீடியோவில் பேசிய அவர், "ஒரு காதலன் ஒரு காதலி என்ற படத்தில் ரம்பாவும், லட்சுமி ராயும் கமிட்டானார்கள். ஒரு நாள் ஷூட்டிங்கின்போது இருவரும் அமர்ந்திருந்தனர். ஷாட் ரெடி என்று இயக்குநர் சொல்ல. தங்களால் வர முடியாது என இரண்டு பேருமே சொல்லியிருக்கிறார்கள்.
பிறகு இரண்டு பேரும் தான்தான் சிறந்த நடிகை என பேச பேச இருவருக்குமே வாக்குவாதம் ஆரம்பித்தது. ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றி ரம்பாவும், லட்சுமி ராயும் குடுமி பிடி சண்டை போட்டுக்கொள்ள ஆரம்பித்தார்கள். இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் திணறிய இயக்குநர் அதன் பிறகு இரண்டு பேருக்கும் வெவ்வேறு நாட்கள் ஷூட்டிங் வைத்து அந்தப் படத்தை முடித்தார்" என்றார். இதனைப் பார்த்த ரசிகர்கள் இப்படியுமா ஷூட்டிங் ஸ்பாட்டில் நடக்கும் என ஆச்சரியத்துடன் கேள்வி எழுப்பிவருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











