Vijay : விஜய்-சங்கீதா விவாகரத்து வதந்தி..காழ்ப்புணர்ச்சிதான் காரணம்.. பயில்வான் ரங்கநாதன் பளீச்!

சென்னை : விஜய், சங்கீதா பிரிந்து விட்டதாக இணையத்தில் பரவி வரும் வதந்தி குறித்து பயில்வான் ரங்கநாதன் பேட்டி ஒன்றில் விளக்கமாக கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவின் உச்ச நடிகரான விஜயை அவரது ரசிகர்கள் தளபதி என்று நெஞ்சில் குடிவைத்து கொண்டாடி வருகின்றனர்.

Bayilvan Ranganathan say about vijay sangeetha Divorce rumors

விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் லியோ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

விஜய்யின் காதல் மனைவி : விஜய்யின் காதல் மனைவி : நடிகர் விஜய் தனது தீவிர ரசிகையாக இருந்த இலங்கையைச் சேர்ந்த சங்கீதா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் 1999ம் ஆண்டு பெற்றோர்களின் சம்மதத்துடன் நடைப்பெற்றது. இவர்களது திருமணம் திரைப்பிரபலங்கள் பலர் கலந்து கொள்ள கோலாகலமாக நடந்தது. இந்த தம்பதிகளுக்கு ஜேசன் சஞ்சய் என்ற மகனும் திவ்யா சாஷா என்ற மகளும் இருக்கிறார்கள்.

விஜய், சங்கீதா வதந்தி : இருபத்தி மூன்று வருடமாக இணைபிரியாத தம்பதிகளாக வாழ்த்து வரும் இவர்கள் இருவர் குறித்தும் கடந்த சில ஆண்டுகளாக சர்ச்சைக்குரிய தகவல்கள் பரவி வருகிறது. அதாவது, விஜய்க்கும், அவரது மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால், சங்கீதா தனது குழந்தைகளுடன் தனியாக வாழ்த்து வருவதாகவும், விரைவில் இருவரும் விவாகரத்து செய்ய இருப்பதாகவும் பலவிதமான தகவல்கள் பரவி வருகின்றன.

Bayilvan Ranganathan say about vijay sangeetha Divorce rumors

காழ்ப்புணர்ச்சி கொண்டவர்கள் : இந்நிலையில், சினிமா விமர்சகரும் பத்திரிக்கையாளருமான பயில்வான் ரங்கநாதன் அளித்துள்ள பேட்டியில், விஜய்யும் அவரது மனைவியும் பிரிந்து விட்டதாக பரவி வரும் தகவலில் துளிக்கூட உண்மை இல்லை எல்லாம் பொய். இவர்கள் சேர்ந்துதான் இருக்கிறார்கள் அவ்வப்போது தொலைபேசியில் பேசிக் கொள்கிறார்கள். விஜய் மீது காழ்ப்புணர்ச்சி கொண்ட யாரோ பரப்பிய வதந்தி, விஜய்யும் அவரது மனைவியும் எந்த சூழ்நிலையிலும் பிரிய வாய்ப்பே இல்லை.

சாதாரண சண்டை : அதே போல விஜய்க்கும் அவரது அப்பாவுக்கும் இருக்கும் சண்டை சாதாரணமானது தான். ஏதோ கருத்து வேறுபாடால் வந்த பிரிவு தான் இது நாளடைவில் சரியாகிவிடும், இது நிரந்தரமானது இல்லை. நீர் அடித்து நீர் விலகாது விரைவில் இருவரும் சேர்ந்து விடுவார்கள் என்று பயில்வான் ரங்கநாதன் பேட்டியில் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X