இது என்ன புதுக்கதையா இருக்கே.. விக்ரமுக்கு அப்படி நடந்ததா? பயில்வான் ரங்கநாதன் சொன்ன டாப் சீக்ரெட்!
சென்னை: பிரபலங்கள் பற்றிய பல ரகசியங்களை பகிர்ந்து வரும் பயில்வான் ரங்கநாதன் சமீபத்தில் சியான் விக்ரம் பற்றி பேசியுள்ள ஷாக்கிங் ஆன விஷயம் ரசிகர்களை கவலையில் ஆழ்த்தி உள்ளது.
சியான் விக்ரம் தனது 57வது பிறந்தநாளை கடந்த ஏப்ரல் 17ம் தேதி கொண்டாடினார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு தங்கலான் படத்தின் மெர்சலான மேக்கிங் வீடியோவை பா. ரஞ்சித் வெளியிட்டு இருந்தார்.
முன் சொட்டை தலை, காட்டுத்தனமான தேகத்துடன் தங்கலானாகவே சியான் விக்ரம் மாறியதை பார்த்த சினிமா பிரபலங்களே அவரது உழைப்பை பார்த்து ஸ்தம்பித்துப் போயுள்ளனர்.

சின்ஸியர் சியான்: தமிழ் சினிமாவில் கமல்ஹாசனுக்கு பிறகு வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து உடல் உழைப்பை அதிகம் சிந்தி நடிக்கும் நடிகராக சியான் விக்ரம் இருக்கிறார் என அவரது பிறந்தநாளை முன்னிட்டு பாராட்டி பயில்வான் ரங்கநாதன் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
சியான் விக்ரமின் உண்மையான பெயர் ஜான் விக்டர் கென்னடி என்றும் இயக்குநர் ஸ்ரீதர் தான் சினிமாவில் விக்ரம் என்கிற பெயருடன் அவரை அறிமுகப்படுத்தினார் என்றும் சியான் விக்ரம் கிறிஸ்துவராக இருந்தாலும் எம்மதமும் சம்மதம் என்கிற கொள்கையுடன் வாழ்ந்து வருகிறார் எனக் கூறியுள்ளார்.

பிரசாந்துக்கும் விக்ரமுக்கும் என்ன உறவு: நடிகர் பிரசாந்தின் அப்பா நடிகர் தியாகராஜனின் தங்கை ராஜேஷ்வரி தான் சியான் விக்ரமின் அம்மா என்றும் துணை கலெக்டராக பணியாற்றியவர் என்றும் பயில்வான் ரங்கநாதன் தனது பேட்டியில் கூறியுள்ளார். நடிகர் பிரசாந்தின் அத்தை மகன் தான் சியான் விக்ரம் என்றாலும் இருவரும் அதனை வெளியே காட்டிக் கொள்ளாமலும், ஒருத்தருக்கு ஒருத்தர் பேசிக் கொள்ளாமலும் இருந்து வருகின்றனர் என்றார்.
கருணாநிதி குடும்பத்தில் சம்பந்தம்: அப்பா வினோத் ராஜ் கிறிஸ்தவராக இருந்தாலும், அம்மா ராஜேஸ்வரி இந்து என்பதால் சியான் விக்ரம் குடும்பத்தில் இரு மதங்களையும் பின்பற்றி வருகின்றனர். துருவ் விக்ரமை நடிகராக மாற்றிய விக்ரம் தனது மகள் அக்ஷிதாவை கருணாநிதி குடும்பத்தில் திருமணம் செய்து கொடுத்த நிகழ்வையும் குறிப்பிட்டுள்ளார்.

சியான் விக்ரமுக்கு மாரடைப்பு: அதிகமாக ரிஸ்க் எடுத்து படங்களில் நடித்து வரும் சியான் விக்ரம் அந்நியன், ஐ உள்ளிட்ட படங்களில் தனது உடம்பை மிகவும் வருத்திக் கொண்டு நடித்தார். சமீபத்தில் சியான் விக்ரமுக்கு மாரடைப்பு ஏற்பட்டது என்றும் ஆனால், அதனை அவர் ரகசியமாக வைத்துக் கொண்டு வெளியே சொல்லாமல் மீண்டு வந்தார் என்றும் தங்கலான் படத்தில் இந்த வயதிலும் கஷ்டப்பட்டு நடித்து வருகிறார் என்றும் பாராட்டி உள்ளார்.
அதிகமாக ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சி செய்து வரும் நடிகர்களுக்கு சமீப காலமாக மாரடைப்பு ஏற்பட்டு வரும் நிலையில், சியான் விக்ரமுக்கு எதுவும் ஆகக் கூடாது என்றும் அவர் வலிமையானவர் எதுவும் ஆகாது என்றும் ரசிகர்கள் அவரது வீடியோவுக்கு கீழ் கமெண்ட் போட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











