Bayilvan: தயாரிப்பாளருக்கு எதிரி தயாரிப்பாளர் தான்.. பயில்வான் ரங்கநாதன் காரசாரமான பேச்சு!

சென்னை: Bayilvan Ranganathan - பயில்வான் ரங்கநாதன் அன்புச்செழியன் நடத்திய சினிமா விழாவில் நேற்று கலந்து கொண்டு பேசிய பேச்சுக்கள் பெரும் பரபரப்பை பற்ற வைத்துள்ளன.

சர்ச்சை கிங் என்றே பயில்வானை அந்த நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்த இதே மேடையில் தான் எனக்கும் அன்புச்செழியனுக்கும் சண்டை நடந்தது. இன்று நான் வந்து பேசினால் தான் வியூஸ் வரும் என நினைத்து அவரே பேச வாங்க என அழைத்தார். இதுதான் சினிமா என பேசிய பயில்வான் ரங்கநாதன் தயாரிப்பாளர் சங்கம் குறித்து அதிரடியாக ஏகப்பட்ட விஷயங்களை அடுக்கி பேசியது அங்கிருந்தவர்களையே அதிர வைத்தது.

Bayilvan Ranganathan says Producers are the real villain to Producers

தயாரிப்பாளருக்கு எதிரி வேற யாருமே இல்லைங்க தயாரிப்பாளர் தான் என ஒரே போடாக போட்டு பேசியுள்ளார் பயில்வான் ரங்கநாதன்.

ஹீரோக்களின் சம்பளத்தை உயர்த்துவது யார்: ஒரு பெரிய நடிகரை தங்கள் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிக்க 100 கோடி முதல் 200 கோடி வரை சம்பளத்தை உயர்த்தி மற்ற தயாரிப்பாளர்கள் தலையில் துண்டு போட வைப்பதே தயாரிப்பு நிறுவனங்கள் தான்.

100 கோடி சம்பளம் ஹீரோவே வாங்கினால் அவரை வைத்து தயாரிக்கும் படத்தின் பட்ஜெட் எந்தளவுக்கு அதிகரிக்கும் அந்த அளவுக்கு வசூல் வந்தால் போச்சு, இல்லையென்றால் தயாரிப்பாளர் பெரிய பூட்டை போட்டு விட்டு பிச்சை எடுக்கப் போக வேண்டும் நிலை உருவாகி விடுகிறது. ஒரு தயாரிப்பாளர் அந்த நிலையில், உதவி கேட்க, சில யூடியூபர்கள் வீடியோ எடுத்துப் போட்டுத் தான் தற்போது மருத்துவ சிகிச்சை பெற்று உயிருடன் இருக்கிறார்.

Bayilvan Ranganathan says Producers are the real villain to Producers

தயாரிப்பாளருக்கு எதிரி: தயாரிப்பாளருக்கு வெளியில் இருந்து யாருமே எதிரி வரமாட்டாங்க, தயாரிப்பாளருக்கு எதிரி தயாரிப்பாளர் தான். 4 கோடி ரூபாய் வைத்துக் கொண்டு சினிமா எடுக்கிறேன்னு யாருமே இங்க வராதீங்க.. இங்க 500 கோடி, 1000 கோடின்னு வியாபாரம் நடக்குது.

125 சிறு பட்ஜெட் படங்களை எடுத்து வைத்துக் கொண்டு பல தயாரிப்பாளர்கள் படத்தை வெளியிட முடியாமல் கந்து வட்டி கடனில் சிக்கி வாழ்க்கையை தொலைத்து வருகின்றனர். தயாரிப்பாளர்கள் முதல் புரொடக்‌ஷன் மேனேஜராக பணியாற்ற வேண்டும். அப்போ தான் சினிமாவில் வியாபாரத்தை எப்படி செய்து சம்பாதிக்க முடியும் என்பதை புரிந்து கொள்ள முடியும் என காரசாரமாக பேசியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X