Bayilvan Ranganathan: விஜய்க்கு நேரடியாகவே வார்னிங் கொடுத்த ரஜினிகாந்த்.. பயில்வான் ரங்கநாதன் பளிச்!

சென்னை: ஜெயிலர் பாடல்கள் மூலமே விஜய்யின் லியோ படத்துக்கு ரஜினிகாந்த் தக்க பதிலடி கொடுத்து வருகிறார் என சோஷியல் மீடியா முழுவதுமே ரணகளமாக மாறி உள்ளது.

ரஜினிகாந்த் ரசிகர்கள் இந்த கம்பேக்கை தான் தலைவா எதிர்பார்த்தோம் என்றும் ஹேட்டர்களுக்கும் பட்டத்தை பறிக்க நினைக்கும் கோஷ்டிக்கும் சாட்டையடி கொடுத்திருக்கீங்க என கொண்டாடி வரும் நிலையில், பயில்வான் ரங்கநாதனும் தன் பங்குக்கு கொளுத்திப் போட்டுள்ளார்.

Bayilvan Ranganathan says Rajinikanth gives a direct warning to Vijay via Hukum song

விஜய்க்கு நேரடியாகவே நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தின் செகண்ட் சிங்கிள் மூலம் எச்சரிக்கை கொடுத்துள்ளதாக புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சூப்பர்ஸ்டார் சர்ச்சை: வாரிசு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் நடிகர் சரத்குமார் தளபதி விஜய்யை சூப்பர் ஸ்டார் என சொன்னது பெரும் சர்ச்சையை கிளப்பியது. மேலும், விமர்சகர் பிஸ்மி ரஜினிகாந்தை முன்னாள் சூப்பர்ஸ்டார் என பேசியதும் பிரளயத்தை உண்டாக்கியது.

Bayilvan Ranganathan says Rajinikanth gives a direct warning to Vijay via Hukum song

ரஜினிகாந்த் தமிழ்நாட்டின் சூப்பர்ஸ்டார் இல்லை என்றும் சூப்பர்ஸ்டார் பட்டத்துக்கு விஜய் தான் இனிமேல் உரியவர் என விஜய் ரசிகர்களும் நடிகர் விஜய்யை சூப்பர்ஸ்டாராகவே கொண்டாடி வரும் சூழலில் எல்லாத்துக்கும் ஆப்பு அடிக்கும் விதமாக ஜெயிலர் படத்தின் செகண்ட் சிங்கிள் பாடல் வரிகள் இடம்பெற்று இருப்பதாக சோஷியல் மீடியாவில் ஹுகும் மிகப்பெரிய அளவில் டிரெண்டாகி வருகிறது.

Bayilvan Ranganathan says Rajinikanth gives a direct warning to Vijay via Hukum song

லியோவுக்கு வேட்டு: லியோ படத்தில் விஜய் பாடிய "நா ரெடி தான் வரவா" பாடலை பின்னுக்குத் தள்ளும் விதமாக அனிருத் இசையில் ஜெயிலர் படத்திற்காக உருவான காவாலா பாடலே கலக்கிக் கொண்டிருக்கும் நிலையில், அடுத்ததாக ஹுகும் பாடலில் ஏகப்பட்ட பஞ்ச் வரிகள் இடம்பெற்று ரஜினிகாந்தின் ஹேட்டர்களுக்கு மரண அடியாக அமைந்துள்ளது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

"பெயர தூக்க நாலு பேரு. பட்டத்த பறிக்க நூறு பேரு" என்கிற வரிகள் மூலமாக நேரடியாகவே ரஜினிகாந்த் விஜய்க்கு வார்னிங் கொடுத்துள்ளதாக பயில்வான் ரங்கநாதன் தனது புதிய வீடியோவில் பளிச்சென பேசி உள்ளார்.

Bayilvan Ranganathan says Rajinikanth gives a direct warning to Vijay via Hukum song

விஜய்யை எச்சரித்த ரஜினி: உங்கப்பன் விசிலை கேட்டவன், உன் மவனும் பேரனும் ஆட்டம் போட வைப்பேன், உன் அலும்ப பார்த்தவன் போன்ற வரிகள் நேரடியாகவே நடிகர் விஜய்யை தாக்கியபடி தான் உருவாக்கப்பட்டுள்ளது என பயில்வான் ரங்கநாதன் கூறி பஞ்சாயத்தை கூட்டி உள்ளார்.

சமீப காலமாக ரஜினிகாந்தின் பாடல் வரிகள் இப்படி எல்லாம் வராமல் இருந்த நிலையில், "சூப்பர்ஸ்டாருடா" என்கிற வரிகளுடன் இப்படியொரு பாடல் இடம்பெற காரணமே விஜய் தான் என பயில்வான் ரங்கநாதன் பேசியுள்ளார்.

விஜய்க்கு யார் ஓட்டுப்போடுவா: மேலும், நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார் என்கின்றனர். அப்படியே அவர் அரசியலுக்கு வந்தால், அவருக்கு யார் ஓட்டுப் போடுவார்கள், சூர்யா ரசிகர்களுடன் விஜய் ரசிகர்கள் பஞ்சாயத்து, அவர்களும் ஓட்டுப் போட மாட்டாங்க, அஜித் ரசிகர்களுடன் பெரிய போர் நடந்து வருகிறது அவர்களும் விஜய் அரசியலுக்கு வந்தால் ட்ரோல் செய்யவே துடிப்பார்களே தவிர ஓட்டுப் போட மாட்டாங்க..

சூப்பர்ஸ்டார் சர்ச்சையில் இருந்து ரஜினிகாந்த் ரசிகர்கள் கொலவெறியில் இருக்காங்க, அவங்களும் விஜய் அரசியலுக்கு வந்தால் ஓட்டுப் போட மாட்டாங்க, இப்படி இருக்கும் பாதகமான சூழலில் நடிகர் விஜய் அலசி ஆராய்ந்தால் அரசியலுக்கே வரமாட்டார் என்றும் ரஜினிகாந்தை போல கடைசி வரை அரசியலுக்கு வருகிறேன் என பூச்சாண்டி காட்டியே தனது படங்களை ஓட வைப்பார் என விளாசி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X