ஒரு காலத்துல எப்படி இருந்த மனுஷன்.. அசிங்கப்படுத்தப்பட்ட சசிகுமார்?.. பயில்வான் ரங்கநாதன் தாக்கு!

சென்னை: சூரி கதையின் நாயகனாக நடித்துள்ள கருடன் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. அந்த விழாவுக்கு சிறப்பு விருந்தினர்களாக வெற்றிமாறன், விஜய் சேதுபதி மற்றும் சிவகார்த்திகேயன் வந்திருந்தனர்.

வெற்றிமாறன் கதையில் துரை செந்தில்குமார் இயக்கத்தில் சூரி, சசிகுமார் மற்றும் உன்னி முகுந்தன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள கருடன் திரைப்படம் இந்த மாதம் மே 31-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

Bayilvan Ranganathan says Sasikumar upset at Soori s Garudan movie event

அந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட சசிகுமாரை படக்குழுவினரே அசிங்கப்படுத்தி விட்டதாக பயில்வான் ரங்கநாதன் தற்போது பகீர் கிளப்பும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சுந்தரபாண்டியன் படத்தில்: சுந்தரபாண்டியன் படத்தில் சசிகுமார், லட்சுமி மேனன், இனிகோ பிரபாகர் மற்றும் விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடித்திருப்பார்கள். அந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு நெகட்டிவ் ரோல் கொடுக்கப்பட்டிருக்கும். அந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய் சேதுபதியை ஜிம் பாய்ஸ் உள்ளே விடவில்லை என்றும் அதன் பின்னர் படக்குழுவினர் சொல்லிய பின்னர் தான் உள்ளே நுழைந்தார். அப்படி இருந்த விஜய்சேதுபதி, தற்போது நடைபெற்ற சூரி படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நிலையில், மைக் பிடித்து பேசிய அனைவரும் விஜய் சேதுபதி மட்டுமே புகழ்ந்து பாராட்டி பேசி இருந்தனர் என பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.

விஜய் சேதுபதி மற்றும் சிவகார்த்திகேயன்: கருடன் பட விழாவில் விஜய் சேதுபதி மற்றும் சிவகார்த்திகேயனுக்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதாகவும் அந்த படத்தில் இரண்டாவது ஹீரோவாக நடித்த சசிகுமாரை யாரும் பெரிதாக கண்டுகொள்ளவில்லை என்றும் பேசும் போது அவரது பெயரை கூட பலர் குறிப்பிடாமல் பேசியது அவரை மனக்கஷ்டம் அடையச் செய்ததாக பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.

சூரியும் கண்டுக்கல: படத்தின் ஹீரோவான சூரி செகண்ட் ஹீரோவான சசிகுமாரை ஒரு பொருட்டாகவே மதிக்காமல் விஜய் சேதுபதி மற்றும் சிவகார்த்திகேயனை மேடையில் ஏற்றி பேசினார் என்றும் அதன் பின்னர் வெற்றிமாறன் குறித்து பேசினார் என்றும் கடைசி வரை சசிகுமாரை கண்டுக் கொள்ளவில்லை இதுதான் சினிமா என பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.

சசிகுமார் நிலைமை: இந்த படத்தில் தான் நடிச்சிருக்கவே கூடாது என்றும் ஏமாற்றி நடிக்க வைத்து விட்டனர் என்கிற அளவுக்கு சசிகுமார் பேச காரணமே அவர் மனம் கஷ்டப்பட்டது தான் என பயில்வான் ரங்கநாதன் பேசியுள்ளார். சுப்ரமணியபுரம் படத்தை இயக்கி இயக்குநராக மாஸ் காட்டிய சசிகுமார் நாடோடிகள், சுந்தர பாண்டியன், குட்டிப் புலி என பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். கடந்த ஆண்டு அவர் நடித்த அயோத்தி திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வெற்றியை பெற்றது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X