Vijayakanth - விஜயகாந்த் உடல்நிலை நிலவரம் இதுதான்.. அது பொய்யான புகைப்படம்.. பயில்வான் சொன்ன சீக்ரெட்
சென்னை: Vijayakanth(விஜயகாந்த்) மருத்துவமனையில் ஜெயலலிதா எப்படி இருந்தாரோ அப்படித்தான் விஜயகாந்த்தும் என பயில்வான் ரங்கநாதன் தெரிவித்திருக்கிறார்.
விஜயகாந்த் நடிப்பு மட்டுமின்றி அரசியலில் தடம் பதித்து ஒருமுறை எதிர்க்கட்சி தலைவராக இருந்தவர். பிறகு அதிமுக கூட்டணியில் இருந்து பிரிந்து பாஜகவுடன் கூட்டணி வைத்தார். ஆனால் அவரால் அரசியலில் பழையபடி சோபிக்க முடியவில்லை. மேலும் விஜயகாந்த்துக்கு உடல்நிலையும் சரியில்லாமல் போக அமெரிக்காவில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
முழு ஓய்வு: அறுவை சிகிச்சை முடிந்ததிலிருந்து வீட்டில் ஓய்வில் இருக்கிறார் விஜயகாந்த். அவ்வப்போது அவர் தொடர்பான புகைப்படங்களையும், வீடியோக்களையும் மனைவி பிரேமலதா மற்றும் மகன்கள் வெளியிடுவார்கள். இந்த சூழலில் கடந்த சில நாட்களாகவே உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
நலமுடன் இருக்கிறார்: நிலைமை இப்படி இருக்க விஜயகாந்த் பிழைப்பது கடினம் என்ற தகவல் இரண்டு நாட்களுக்கு முன்பு பரவியது. இதனால் பலரும் அதிர்ச்சியடைந்தனர். ஆனால் அவரது மனைவி பிரேமலதா வீடியோ வெளியிட்டு கேப்டன் விஜயகாந்த் நலமுடன் இருக்கிறார். பொய்யான செய்திகளை பரப்ப வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். இதனால் ரசிகர்களும், தொண்டர்களும் நிம்மதியடைந்தனர்.

பயில்வான் ரங்கநாதன்: இந்நிலையில் பயில்வான் ரங்கநாதன் விஜயகாந்த் உடல்நிலை குறித்து ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார். பயில்வான் ரங்கநாதன் பேசுகையில், "பெப்ஸி தலைவர் ஆர்.கே.செல்வமணி விஜயகாந்த்தை பார்க்க மருத்துவமனைக்கு சென்றபோது தொற்று வந்துவிடும் என எச்சரித்து அவரை திருப்பி அனுப்பியது மருத்துவமனை நிர்வாகம்.
எல்லாம் ஆறுதலுக்காகத்தான்: அப்புறம் எப்படி இவர்கள் விஜயகாந்த்துக்கு அருகில் இருந்து புகைப்படங்களை எடுத்திருக்க முடியும். அதற்கான வாய்ப்புகளே இல்லை. எல்லாம் தேமுதிக தொண்டர்களை ஆறுதல்படுத்தவும் ரசிகர்களை சாந்தப்படுத்தவும் ஒரு மாதத்துக்கு முன்போ அல்லது எப்போதோ எடுக்கப்பட்ட புகைப்படங்களையோ இப்போது பிரேமலதா பகிர்கிறார்.
ஜெயலலிதா நிலைமைதான்: ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது சசிகலா தவிர யாரும் அவரை பார்க்க அனுமதிக்கப்படவில்லை. அதேபோல்தான் விஜயகாந்த்தை அவரது குடும்பத்தினர் தவிர பிறர் பார்க்க அனுமதி இல்லை. அவரின் இப்போதைய உண்மையான நிலை என்ன என்பது பிரேமலதா குடும்பத்துக்கு மட்டும்தான் தெரியும். மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளியை புகைப்படம் எடுக்க மருத்துவமனை நிர்வாகம் அனுமதிக்காது. ஏனெனில் கேமராவில் இருந்து வரும் கதிர்கள் நோயாளியை பாதிக்கும். கண்டிப்பாக இது பழைய புகைப்படங்கள்தான்" என்றார்.


Click it and Unblock the Notifications











