துணை முதல்வரை கூப்பிடுங்க.. ரெட் ஜெயண்ட் தான் பெரிய படங்கள் வாங்குது.. பயில்வான் ரங்கநாதன் ஆவேசம்!

சென்னை: பிரம்மாண்ட படங்கள் நல்லாவே இல்லை என்றாலும் அந்த படத்தை முட்டுக் கொடுத்து சில யூடியூப் விமர்சகர்கள் காப்பாற்ற பார்க்கின்றனர். அதையெல்லாம் செய்து மக்களை ஏமாற்ற வேண்டாம் என இயக்குநர் ஆர்.வி. உதயகுமார் மேடையில் பேசிய நிலையில், படம் நல்லா இருந்தா தான் விமர்சகர்கள் நல்லா இருக்குன்னு சொல்வாங்க, நான் அப்படித்தான் சொல்வேன் என பயில்வான் ரங்கநாதன் மேடையில் ஆவேசப்பட்டுள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது.

மேலும், தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் தியேட்டர் ஓனர்கள் ஒன்றாக இணைந்து பேசி டிக்கெட் கட்டணத்தை குறைத்தாலே தியேட்டர்களில் படத்தை பார்க்க மக்கள் கூட்டம் வருவார்கள். ரசிகர்களின் பாக்கெட்டை காலி செய்ய வேண்டிய அவசியமும் கிடையாது என பேசியுள்ளார்.

bayilvan ranganathan udhayanidhi stalin rv udhaykumar

துணை முதல்வராக இருக்கும் உதயநிதி ஸ்டாலினே சினிமாக்காரர் தான். சினிமாக்காரர்களின் கஷ்டம் அவருக்கு நல்லாவே தெரியும். அவரை அழைத்துப் பேசி இந்த பிரச்சனைக்கு முடிவு கட்டுங்கள் என கொந்தளித்து விட்டார் பயில்வான் ரங்கநாதன்.

விமர்சகர்கள் மீது குற்றச்சாட்டு: உரிமை கீதம் படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் ஆர்.வி. உதயகுமார். கிழக்கு வாசல், சின்ன கவுண்டர், சிங்காரவேலன், எஜமான், உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய ஆர்.வி. உதயகுமார் சமீப காலமாக படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார். இந்த ஆண்டு சூரி நடித்து வெளியான கருடன் படத்தில் கடைசியாக நடித்திருந்தார். சினிமா விழாக்களில் கலந்துக் கொண்டு பேசி வரும் அவர் விமர்சகர்கள் சில பெரிய படங்களை ஓட வைக்க என்னவெல்லாம் பொய் சொல்றாங்க தெரியுமா? என பேசியதும் பயில்வான் ரங்கநாதன் முகமே மாறிவிட்டது.

பாக்கெட்டை காலி பண்ணாதீங்க: அனைத்து தியேட்டர்களிலும் பெரிய படம் வந்தால் அதை மட்டுமே போட்டு ஒட்டுமொத்த மக்களின் பாக்கெட்டுகளையும் காலி பண்றாங்க. இப்போ வர படங்களின் கதையை யாராவது சரியாக சொல்ல முடிகிறதா? யூடியூப் விமர்சகர்களே படத்தின் கதையை சொல்ல முடியாமல் திணறுறாங்க என ஆர்.வி. உதயகுமார் பேசினார்.

பதிலடி கொடுத்த பயில்வான் ரங்கநாதன்: ஆர்.வி. உதயகுமார் பேசி முடித்த பின்னர் மேடை ஏறி பேசிய பயில்வான் ரங்கநாதன் ஒரு படம் நல்லா இருந்தா தான் நல்லா இருக்குன்னு சொல்வேன். விமர்சகர்கள் பலரும் அதைத்தான் செய்கின்றனர். தியேட்டருக்கு ரசிகர்கள் வர மாட்டேங்கிறாங்கனா அதுக்கு காரணம் டிக்கெட் விலை தான். இப்பவும் காசி தியேட்டர் மற்றும் கமலா தியேட்டர்களில் புதன்கிழமையான வெறும் 100 ரூபாய்க்கு டிக்கெட் விற்பனை செய்கின்றனர். அவங்களாம் ஜிஎஸ்டி கட்டவில்லையா? டிக்கெட் விலையை தயாரிப்பாளர்களும் தியேட்டர் ஓனர்களும் இணைந்து பேசி குறைத்தாலே சின்ன படங்கள் சிறப்பாக ஓடும் என்றார்.

துணை முதல்வரை கூப்பிடுங்க: உங்களுக்கு ஓபனா பேச பயம். ஆனால், எனக்கு அது இல்லை. தமிழ்நாட்டில் பெரிய படங்களை அதிகம் வாங்கி வெளியிடுவதே சன் பிக்சர்ஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் நிறுவனங்கள் தான். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை கூப்பிட்டு பேசி இதற்கு ஒரு முடிவு கட்டுங்க. பெரிய படங்கள் வந்தால் அனைத்து தியேட்டர்களும் அந்த படத்துக்கு ஒதுக்கப்படும் நிலையில், சிறு பட்ஜெட் படங்கள் வந்தால் டிக்கெட் விலையை குறைத்து வியாபாரம் நடத்தினால் அந்த படத்தை பார்க்கவும் மக்கள் வருவார்கள் என சரவெடியாக பயில்வான் ரங்கநாதன் பேசியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X