விரட்டி விட்ட விஷால்.. கடுப்பான பயில்வான் ரங்கநாதன்.. மனுவே நிரப்ப தெரியாது என மரண கலாய்!
சென்னை: ஹரி இயக்கத்தில் விஷால் நடித்த ரத்னம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பயில்வான் ரங்கநாதன் எழுப்பிய கேள்விக்கு பதில் சொல்ல முடியாது என விஷால் விரட்டி விட்ட நிலையில், அங்கிருந்து அப்படியே புறப்பட்டுச் சென்று விட்டார் பயில்வான் ரங்கநாதன். இந்நிலையில், யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் விஷால் குறித்து ஏகப்பட்ட விஷயங்களை அடுக்கி உள்ளார்.
சினிமா நடிகர்கள் மற்றும் நடிகைகள் குறித்த அந்தரங்க விவகாரங்களை பேசுகிறேன் என பயில்வான் ரங்கநாதன் பல முன்னணி நடிகர்கள் மற்றும் நடிகைகள் பற்றி கிசுகிசு செய்திகளை பேசி வருகிறார்.

பலர் பயில்வான் ரங்கநாதனை இதற்காகவே எதிர்த்து வருகின்றனர். சில நடிகைகள் நேரடியாகவே சண்டைக்கும் சென்றுள்ளனர். ஆனால், தொடர்ந்து சினிமா விமர்சகராகவும் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பயில்வான் ரங்கநாதன் வில்லங்கமான கேள்விகளை எழுப்பி சர்ச்சையை கிளப்பி வருகிறார்.
ரத்னம் ரிலீஸ்: ஹரி இயக்கத்தில் விஷால், பிரியா பவானி சங்கர், சமுத்திரகனி, கெளதம் மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள ரத்னம் படம் வரும் ஏப்ரல் 26ம் தேதி சோலோவாக வெளியாக உள்ளது. முன்னதாக சுந்தர். சி, தமன்னா, ராஷி கன்னா நடித்த அரண்மனை 4 படம் அதே தேதியில் வெளியாகவிருந்த நிலையில், ரெட் ஜெயண்ட் பிரச்சனை குறித்து விஷால் பேசிய நிலையில், அரண்மனை 4 ரிலீஸ் தள்ளிப்போனதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.
பயில்வானை விரட்டிய விஷால்: மூத்த பத்திரிகையாளரான பயில்வான் ரங்கநாதன் நடிகர்கள் மற்றும் நடிகைகள் குறித்த அந்தரங்க விஷயங்களை சொல்கிறேன் என எந்த நடிகர் எந்த நடிகையுடன் தொடர்பில் இருந்தார் என ஏகப்பட்ட கிசுகிசு சமாச்சாரங்களை பேசி சர்ச்சையை கிளப்பி வந்த நிலையில், ஒரு நடிகர் சங்க செயலாளராக பயில்வான் ரங்கநாதன் கேள்விக்கு பதில் சொல்ல முடியாது. அவர் இங்கே கேள்வி கேட்டால் அசிங்கமாகிவிடும் என பேச அங்கிருந்து உடனடியாக பயில்வான் ரங்கநாதன் வெளியேறிவிட்டார்.
மனுவே நிரப்ப தெரியாது: இந்நிலையில், யூடியூப் சேனல் ஒன்று பயில்வான் ரங்கநாதனிடம் விஷால் அரசியலுக்கு வரப்போவதாக சொல்லியிருக்காரே அது பற்றி உங்கள் கருத்து என்ன என கேட்டபோது, விஷாலுக்கு ஒழுங்கா மனுவே நிரப்ப தெரியாது. ஆர்கே நகர் தொகுதியில் அரசியலில் போட்டியிடுகிறேன் என விஷால் நிரப்பிக் கொடுத்த மனுவை தேர்தல் அதிகாரிகள் சரியாக இல்லை என நிராகரித்து விட்டனர். இதற்கு மேல் வேறென்ன அசிங்கம் வேண்டும் என காண்டையெல்லாம் கொட்டித் தீர்த்துள்ளார்.
ரசிகர்களே கிடையாது: நடிகர் விஷாலுக்கு சினிமாவிலேயே ரசிகர்கள் கிடையாது. அவர் நடிச்ச படங்கள் எல்லாமே தோல்வியை தான் தழுவியுள்ளன. தயாரிப்பாளர் சங்கத் தலைவரானார் அதிலும் பிரச்சனை. நடிகர் சங்கத் தலைவரானார் பல நடிகர்கள் கோடிக் கணக்கில் பணம் கொடுத்தும் இன்னமும் அந்த கட்டடத்தை கட்டாமல் இருக்கிறார். எதிலும், அவர் சாதித்ததாகவே இல்லை. அரசியலுக்கு வரவேண்டும் என்றால் குறைந்தளவு ரசிகர்களாவது இருக்க வேண்டும். விஷால் படம் நல்லா இல்லைன்னா அதை யாராவது பார்ப்பார்களா? என விஷாலை தொடர்ந்து டோட்டல் டேமேஜ் செய்யும் விதமாகவே பேசியிருக்கிறார் பயில்வான் ரங்கநாதன்.


Click it and Unblock the Notifications











