அரசை எதிர்த்தால் சும்மா இருப்பார்களா?.. விஷாலின் ‘ரத்னம்’ வீழ்ச்சி.. பழி தீர்த்த பயில்வான் ரங்கநாதன்
சென்னை: ரத்னம் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது பயில்வான் ரங்கநாதன் கேள்விக்கு பதில் சொல்ல முடியாது என நடிகர் விஷால் விரட்டி அடித்த நிலையில், தொடர்ந்து விஷால் குறித்து தனது வீடியோக்களில் பேசி வருகிறார் பயில்வான் ரங்கநாதன்.
புதிதாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் ரத்னம் படம் தஞ்சாவூர் மற்றும் திருச்சி பகுதிகளில் வெளியாகாமல் போனதற்கு விஷால் தான் காரணம் என பகிர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

திமுக அரசை கண்டித்து பகிரங்கமாக விஷால் பேசியதுதான் அவரது ரத்தினம் படத்துக்கு பல பிரச்சினைகளை உருவாக்க காரணமாக அமைந்திருக்கலாம் என பயில்வான் ரங்கநாதன் பற்ற வைத்துள்ளார்.
திமுக அரசை எதிர்த்து: 2026 ஆம் ஆண்டு நடிகர் விஜய்யை போலவே விஷாலும் அரசியலுக்கு வரப்போவதாக அவரே அறிவித்துள்ளார். பாஜகவின் தூண்டுதல் காரணமாகவே விஷால் அரசியலுக்கு வரப் போகிறாரா என்கிற கேள்விகள் எழுந்துள்ளன. தொடர்ந்து மோடியை பாராட்டி வரும் விஷால் சமீபத்தில் அளித்த பேட்டியில் தமிழ்நாட்டில் மட்டும்தான் ஜிஎஸ்டி மற்றும் சேவை வரி என இரண்டு வரிகள் வசூல் செய்யப்படுகிறது. மற்ற எந்த மாநிலங்களிலும் இந்தக் கொடுமை இல்லை. பிரதமர் மோடி இதை தட்டிக் கேட்க வேண்டும் என பேசியிருந்தார்.
கட்டப்பஞ்சாயத்து செய்றாங்க: மேலும், மார்க் ஆண்டனி திரைப்படம் விநாயகர் சதுர்த்திக்கு வெளியாகாமல் இருக்க வேண்டும் என்பதற்காக ரெட் ஜெயன்ட் நிறுவனம் தன்னை தடுத்ததாக பகிரங்கமாக குற்றச்சாட்டையும் முன் வைத்திருந்தார். இந்நிலையில், கடைசியாக ரத்னம் படம் தஞ்சாவூர் மற்றும் திருச்சி பகுதிகளில் வெளியாக விடாமல் தியேட்டர் உரிமையாளர்கள் கட்டப்பஞ்சாயத்து செய்வதாக விஷால் பரபரப்பு குற்றச்சாட்டை வெளியிட்டார். ரத்னம் படத்துக்கு மிகப்பெரிய நஷ்டம் உண்டாக காரணமே விஷால் இப்படி தேவை இல்லாமல் அரசு எதிர்த்து பேசியதுதான் காரணம் என பயில்வான் ரங்கநாதன் பரபரப்பை கிளப்பியுள்ளார்.
பிரியா பவானி சங்கர் வராததற்கு: ரத்னம் படத்தின் இசை வெளியீட்டு விழா தனியார் ஹோட்டலில் நடைபெற்ற போது அந்த விழாவுக்கு பிரியா பவானி சங்கர் வராமல் போனதற்கும் விஷால் தான் காரணம் என சினிமா வட்டாரத்தில் பேச்சுக்கள் அடிபடுகிறது. மேலும், அவர் சூட்டிங் இருந்ததால் வரவில்லை என மழுப்பி விட்டனர். ஆனால் அவரிடம் எதையோ எதிர்பார்த்து அது நடக்காத நிலையில் தான் பிரியா பவானி சங்கர் வரவில்லை என்றும் கூறியுள்ளார். அதற்கு பழி வாங்கும் விதமாக ரத்னம் பட போஸ்டர்களில் ஒட்டுமொத்தமாக பிரியா பவானி சங்கரை இருட்டடிப்பு செய்து விட்டார் விஷால் என்றும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். பயில்வான் ரங்கநாதனை விஷால் துரத்தி அடித்த நிலையில், விஷால் மீது வன்மத்தை கக்கி வருகிறார் பயில்வான் ரங்கநாதன் என கமெண்ட்டில் விஷால் ரசிகர்கள் திட்டி வருகின்றனர்.
ரத்னம் படத்தின் வசூல்: ஹரி இயக்கத்தில் விஷால், பிரியா பவானி சங்கர், யோகி பாபு, முரளி சர்மா, சமுத்திரகனி மற்றும் மற்றும் கௌதம் என நடிப்பில் வெளியான ரத்னம் திரைப்படம் முதல் நாளில் 2.5 கோடி ரூபாயும் இரண்டாவது நாளான சனிக்கிழமை 2.7 கோடி ரூபாயும் வசூல் செய்துள்ளதாகவும் ஒட்டுமொத்தமாக இதுவரை 5.2 கோடி ரூபாய் வசூலை உலகம் முழுவதும் ரத்தம் திரைப்படம் ஈட்டி இருப்பதாக கூறுகின்றனர். நெகட்டிவ் விமர்சனங்கள் வேறு இந்த படத்துக்கு அதிகளவில் வந்துள்ள நிலையில், அதிகபட்சமாக 15 முதல் 20 கோடி தான் வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











