ரஜினி பற்றி உனக்கு என்ன தெரியும்.. விஜய் தேவரகொண்டாவை விளாசிய பிரபலம்!

சென்னை: ரஜினி பற்றி உனக்கு என்ன தெரியும் விஜய் தேவரகொண்டாவை விளாசிய பயில்வான் ரங்கநாதன்.

சமந்தா, விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகி உள்ள குஷி திரைப்படம் செப்டம்பர் 1ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது.

Bayilvan Ranganathan who severely criticized Vijay Devarakonda

படத்தின் ரிலீஸ் நெருங்கி வருவதால் புரமோஷன் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. நடிகர் விஜய் தேவரகொண்டா இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு புரமோஷன் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

குஷி: தெலுங்கு மொழியில் உருவாகியுள்ள குஷி திரைப்படம் தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு செப்டம்பர் 1ஆம் தேதி தியேட்டரில் வெளியாக உள்ளது. இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு கோயம்புத்தூரில் நடைபெற்றது. இதில் சமந்தா கலந்து கொள்ளாத நிலையில், விஜய் தேவரகொண்டா மட்டும் கலந்து கொண்டார்.

ரஜினிக்கே 6 படம் பிளாப்: அப்போது, பத்திரிக்கையாளர்கள், தொடர்ந்து உங்களது படங்கள் தோல்வி அடைந்து வருவதற்கு என்ன காரணம் என்று கேட்டனர். இதற்கு பதில் அளித்த விஜய் தேவரகொண்டா, ரஜினி சாருக்கே 6 படம் ஃப்ளாப் ஆனது. இப்போது ஜெயிலர் படம் 500 கோடி வசூல் செய்துள்ளது. அதே போல, கமல், விஜய், சிரஞ்சீவி படங்களும் ஓடவில்லை வெற்றி என்பது தோல்விக்கு அப்பாற்பட்டது என்றார்.

Bayilvan Ranganathan who severely criticized Vijay Devarakonda

சர்ச்சை பேச்சு: விஜய் தேவரகொண்டாவின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், சினிமா விமர்சகரான பயில்வான் ரங்கநாதன் விஜய் தேவரகொண்டாவை கடுமையாக விமர்சித்துள்ளார். அதில், எங்க வந்து யாரை பற்றி தப்பா பேசுற, ரஜினி பற்றி உனக்கு என்ன தெரியும், உங்க படம் ஏன் ஓடவில்லை என்று கேட்டால் அதற்குத்தான் பதில் சொல்ல வேண்டும். அதைவிட்டு விட்டு ரஜினியின் 6 படம் பிளாப் என்று பேசக்கூடாது.

ரஜினி பற்றி உனக்கு என்ன தெரியும்: ஏற்கனவே நீங்க நடிச்ச படம் கடந்த முறை வெளியாகி படுமோசமான விமர்சனத்திற்கு உள்ளது. அதுமட்டுமில்லாமல் எங்க தமிழ் நடிகர்களான ரஜினி, கமல், விஜய்யை பற்றி எப்படி நீங்க விமர்சனம் செய்யலாம், இப்படி எல்லாம் பேசுனா, உங்க படம் எதுவுமே தமிழ் நாட்டில் ஓடாது, அனைத்து ரசிகர்களும் புறக்கப்பணிப்பார்கள் என்பதை மனதில் வைத்துக்கொண்டு பேசுங்கள் என்று பயில்வான் ரங்கநாதன் விஜய் தேவரகொண்டாவை கடுமையாக விமர்சித்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X