2 மணி நேரத்துக்கு 13 லட்சம் வாங்கிய நடிகை மீனா...பயில்வான் சொன்ன ஷாக் நியூஸ்!

சென்னை: சினிமாவில் வந்த இடம் தெரியாமல் சில ஆண்டுகளில் காணாமல் போகும் கதாநாயகிகளுக்கு மத்தியில் தனித்துவமான தனது கதாபாத்திரங்கள் மூலம், ரசிகர்கள் மனதில் நிலையான இடத்தை பெற்று இருக்கிறார் மீனா. தற்போது, நடிகை மீனா குறித்து பயில்வான் ரங்கநாதன் சொல்லி இருக்கும் தகவல் அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

நடிகர் சிவாஜி கணேசனின் நெஞ்சங்கள் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான மீனா, அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் நடித்ததன் மூலம் சிறுவயதிலேயே பட்டிதொட்டியெங்கும் பிரபலமானார். குழந்தை நட்சத்திரத்தில் இருந்து கதாநாயகியாக, ராசாவின் மனசிலே என்னும் திரைப்படத்தில் ராஜ்கிரணுடன் நடித்தார்.

Bayilvan Ranganathan shared a secret about Meena

நடிகை மீனா: அதைத்தொடர்ந்து மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என அடுத்தடுத்து படங்களில் கமிட்டி ஆனார். குறிப்பாக, எஜமான்,சேதுபதி ஐபிஎஸ், வீரா, நாட்டாமை, முத்து, அவ்வை சண்முகி, பொற்காலம், ஆனந்த பூங்காற்றே, வானத்தைப்போல, வெற்றிக்கொடிகட்டு, ரிதம் உள்ளிட்டப் பல்வேறு படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார். மலையாளத்தில் மோகன்லாலுடன் மீனா இணைந்து நடித்த திருஷ்யம் படம் பல்வேறு மொழிகளில் ரீமேக்கானது.

கணவர் உயிரிழந்தார்: மீனாவின் கணவர் உடல்நிலை குறைவால் உயிரிழந்ததை அடுத்து, மனமுடைந்து வெளியே வராமல் இருந்த மீனா, இப்போது கொஞ்சம் கொஞ்சமாக மீடியாவில் தலை காண்பிக்க ஆரம்பித்திருக்கிறார். அது மட்டுமில்லாமல், மீனா 2வது திருமணம் செய்யவிருப்பதாக பல வதந்திகள் வலம் வந்தன. ஆனால், மீனா கணவர் இல்லாமல், தனியாக வாழ முடியும் என்பதை நிரூபித்து காட்டி வருகிறார்.

பயில்வான் ரங்கநாதன்: இந்நிலையில், சினிமா விமர்சகரான பயில்வான் ரங்கநாதன் மீனா குறித்து யூடியூப் வீடியோ ஒன்றில் பேசி உள்ளார். அதில், நடிகர் முன்பு எல்லாம் பத்திரிக்கை பேட்டி கொடுப்பது என்றால், நாளைக்கு அந்த ஸ்டுடியோவில் இருப்பேன் அங்கு வாங்க எடுத்துக்கொள்ளலாம் என்று சொல்லுவார்கள். இதன் மூலம் நடிகர்கள் பிரபலமானவர்கள் என்பதால், அப்படி கொடுத்தார்கள். ஆனால், இப்போது பேட்டி கேட்டால், எவ்வளவு சார் தருவீங்க என்று பேரம் பேச ஆரம்பித்துவிட்டார்கள்.

2 மணி நேரத்திற்கு 13 லட்சம்: அண்மையில் ஒரு பிரபல யூடியூப் நிறுவனம் போய் மீனாவிடம் பேட்டி கேட்டு இருக்கிறார்கள். அதற்கு மீனா எவ்வளவு மணி நேரம், எவ்வளவு தருவீங்க என்று கேட்டுள்ளார். அதற்கு அந்த யூடியூப் நிருபர் இரண்டு மணிநேரம் போதும் என்று சொல்ல, உடனே மீனா இரண்டு மணி நேரமா சரி, 13 லட்சம் ரூபாய் கொடுங்க என்று கேட்டுள்ளார். அந்த யூடியூப் நிறுவனமும் தனது சேனல் மேலும் வளர்ச்சி அடைய 13 லட்சம் ரூபாய் கொடுத்து அவரை பேட்டி எடுத்து இருக்கிறார்கள், பேட்டிக்கே இவ்வளவு பணம் கேட்டால் எப்படி என்று பயில்வான் அந்த பேட்டியில் பேசி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X