என்னோட உயிர் மட்டும்தான் உயிரா என்ன... அஜித் பற்றி பிரபல நடிகர் கூறிய தகவல்!
சென்னை : நடிகர் அஜித்குமார் இப்பொழுது தமிழ் சினிமாவில் மிகப்பெரிய ரசிகர் கூட்டத்துடன் வலம் வந்து கொண்டிருக்கும் மாஸ் கதாநாயகன் ஆவார்.
இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான வலிமை திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக வெளியாகி ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது
ஸ்டண்ட் காட்சிகளில் பொதுவாக டூப் போடாமல் நடிக்கும் பண்பு கொண்ட அஜித் பற்றி பிரபல நடிகர் ஒருவர் கூறியுள்ளது வைரலாகி வருகிறது.

அஜித் கூட்டணியில்
தொடர்ந்து சிறுத்தை சிவாவுடன் கூட்டணி அமைத்து நடித்துக்கொண்டிருந்த நடிகர் அஜித்குமார் இப்பொழுது புதிய கூட்டணியாக ஹெச். வினோத் உடன் கூட்டணி அமைத்துள்ளார். ஹெச். வினோத், அஜித் கூட்டணியில் முதல் முறையாக வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.

வலிமை
நேர்கொண்ட பார்வை வெற்றியை தொடர்ந்து ஹெச். வினோத், அஜித் கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்த திரைப்படம் வலிமை. 2019ஆம் ஆண்டு இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது அதன்பிறகு எந்த ஒரு அப்டேட்டும் வெளியிடாமல் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. இதனால் ரசிகர்கள் பலரும் பெரும் ஆவலுடன் வலிமை அப்டேட் எப்போது வெளியாகும் என தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தனர் . இந்த நிலையில் படக்குழு அடுத்தடுத்து அட்டகாசமான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களை வெளியிட்டது. அதில் நடிகர் அஜித் ஹாலிவுட் ஸ்டைலில் பைக் ரேஸிங் செய்யும் புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது

ஜனரஞ்சகமான ஆக்சன் கதை
ஒட்டுமொத்த இந்திய ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வலிமை திரைப்படம் தமிழ்,தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என அனைத்து மொழிகளிலும் கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி திரையரங்குகளில் வெற்றிகரமாக வெளியானது. இந்த படத்தில் அஜித்துக்கு வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயா நடித்து இருப்பார். ஜனரஞ்சகமான ஆக்சன் கதை களத்தில் ஹெச் வினோத்தின் அட்டகாசமான இயக்கத்தில் அஜித்தின் மாஸான நடிப்பில் வெளியான வலிமை தொடர்ந்து பாராட்டுகளை அள்ளி வருகிறது.
இதில் பைக் ரேஸிங் காட்சிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இருக்க அதில் டூப் போடாமல் ரிஸ்க் எடுத்து அஜித் நடித்து அசத்தியிருப்பார்.

என்னோட உயிர் மட்டும்தான் உயிரா என்ன
இந்த நிலையில் பிரபல விமர்சகரான பயில்வான் ரங்கநாதன் அஜித் பற்றி முக்கிய தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் அஜித் பெரும்பாலும் தான் நடிக்கும் திரைப்படங்களில் சண்டை காட்சிகளில் டூப் பயன்படுத்த மாட்டார். ஏன் என்று கேட்டால் "என்னோட உயிர் மட்டும்தான் உயிரா என்ன" என ரிஸ்க் எடுப்பதெல்லாம் ரஸ் சாப்பிடுற மாதிரி ஒவ்வொரு படங்களிலும் டூப் போடாமல் நடித்து வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன்பு கை நிறைய மாத்திரைகளை சாப்பாடு சாப்பிட்டு வந்த அஜித் இப்பொழுது வலிமை படத்திலும் சண்டைக் காட்சிகள் மற்றும் பைக் ரேஸிங் காட்சிகளில் டூப் போடாமல் நடித்துள்ளார் என பயில்வான் ரங்கநாதன் அஜித் பற்றி முக்கிய தகவலை பகிர்ந்துள்ளார்.


Click it and Unblock the Notifications











