நடிகை கனகாவின் கணவர் யார்? காதல் தோல்வி... காரணம் என்ன.. பயில்வான் ரங்கநாதன் சீக்ரெட் தகவல்!

சென்னை: ரகசியத் திருமணம் செய்து கொண்ட நடிகை கனகாவின் கணவர் யார் என்று பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.

பிளாக் பஸ்டர் ஹிட்டடித்த கரகாட்டக்காரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை கனகா.

பழம்பெரும் நடிகை தேவிகாவின் மகளான இவர், ரஜினிகாந்த், சரத்குமார், விஜயகாந்த், பிரபு, ராமராஜன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார்.

Bayilvan Ranganathan shared information about the husband of karagattakaran actress Kanaka

நடிகை கனகா: விரலுக்கேத்த வீக்கம் படத்திற்கு பிறகு சினிமாவில் தென்படாமல் இருந்த கனகா, அண்மையில் நடிகை குட்டி பத்மினியுடன் எடுத்துக்கொண்ட போட்டோவை பகிர்ந்து இருந்தார். அந்த போட்டோவை எந்த பக்கம் பார்த்தாலும் கனகாவா இது என கேட்கும் அளவிற்கு அடையாளமே தெரியாத அளவிற்கு மாறி இருந்தார். இந்த புகைப்படம் இணையத்தில் மிகப்பெரிய அளவில் வைரலானது.

சீக்ரெட் காதல்: பல ஆண்டுகளாக வீட்டை விட்டு வெளியில் வராமல் இருந்த கனகா குறித்து, கனகாவின் சீக்ரெட் காதல் கதை குறித்தும் சினிமா பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன் பல தகவல்களை வீடியோவில் தெரிவித்துள்ளார். அதில், கரகாட்டக்காரன் படத்தின் மூலம் அறிமுகமான கனகா, பல முன்னணி நடிகர்களில் படங்களில் நடித்துள்ளார்.

ரகசிய திருமணம்: இந்த நேரத்தில் கலிபோர்னியாவைச் சேர்ந்த இன்ஜினியர் முத்துக்குமாரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர் திருமணம் செய்து கொண்டது யாருக்குமே தெரியாது, அதை மிகவும் ரகசியமாக வைத்து இருந்தார். இந்த நேரத்தில் தாய் தேவிகா இறந்துவிட்டதால், ஆழ்வார்பேட்டை வீட்டில் தனிமையில் வாழ்ந்தார். இவர் தனிமையில் இருப்பதால் பத்திரிக்கையாளர்கள் கனகாவை பேட்டி எடுக்க சென்றோம்.

Bayilvan Ranganathan shared information about the husband of karagattakaran actress Kanaka

பல ஆண்டு தனிமையில்: அப்போது பேசிய கனகா, கலிபோர்னியாவை சேர்ந்தவரை நான் ரகசியமாக திருமணம் செய்து கொண்டேன். ஆனால், திடீரென்று அவர் என்னை விட்டு கலிபோர்னியா சென்றுவிட்டார் என்றார். அப்போது, பத்திரிக்கையாளர்கள் அவரின் புகைப்படத்தை கொடுங்கள், காவல்நிலையத்தில் புகார் கொடுக்கலாம் என்று கேட்டோம். அதற்கு கனகா, வாழ மனம் இல்லாமல் போனவர் மீது புகார் கொடுத்து என்ன பயன், அதற்கு நான் தனியாகவே இருந்துவிடுகிறேன் என்று சொல்லிவிட்டார். காதல் தோல்வியால் பல ஆண்டுகளாக தனிமையில் இருக்கும் கனகா அந்த சிறையை விட்டு வெளியில் வர வேண்டும் என்று பயில்வான் ரங்கநாதன் அன்பு வேண்டுகோள் விடுத்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X