Sneha : நைட் பார்ட்டி.. காதலனை கழட்டிவிட்ட சினேகா.. பயில்வான் ரங்கநாதன் சொன்ன சீக்ரெட்!
சென்னை: தென்னிந்திய சினிமா உலகில் டாப் நடிகையான சினேகா மலையாள திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆனார். ஆனந்தம், பார்த்தாலே பரவசம், பம்மல் கே சம்பந்தம், புன்னகை தேசம், உன்னை நினைத்து, வசூல் ராஜா எம்பிபிஎஸ் என பல ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ள நடிகை சினேகா குறித்து பயில்வான் ரங்கநாதன் பேட்டி ஒன்றில் வெளிப்படையாக பல விஷயங்களை பேசி உள்ளார்.
விளக்கி வைத்த குத்து விளக்குப்போல பளீச்சென்று இருக்கும் நடிகை சினேகா தனது அழகான சிரிப்பால் தமிழக ரசிகர்களை வளைத்துப்போட்டு புன்னகை அரசி என பெயர் எடுத்தார். சினேகாவுக்கு மார்டன் உடையைவிட புடவையும், தாவணியும் அம்சமாக பொருந்தி இருந்ததால், பல படங்களில் புடவை, தாவணியிலேயே ரசிகர்களை வசியம் செய்தார்.

பல மொழிகளில் : இவர் நடித்த வசீகரா, ஆட்டோகிராப், புதுப்பேட்டை, நான் அவன் இல்லை, பள்ளிக்கூடம் போன்ற படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இவருக்கு என்று தனி இடத்தை பெற்றார். புதுப்பேட்டை படத்தில் விலை மாதுவாக நடித்த போது, அதில் எந்த ஆபாசமும் காட்டாமல் தனது கதாபாத்திரத்தை சிறப்பாக செய்து பெயர் எடுத்தார். தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னட படங்களில் நடித்துள்ளார்.
காதல் திருமணம் : அச்சமுண்டு அச்சமுண்டு திரைப்படத்தில் பிரசன்னாவுடன் இணைந்து நடித்த போது இருவருக்கும் நட்பு ஏற்பட்டு பின்னாளில் அது காதலாக மாறியது. இதையடுத்து 2011ம் ஆண்டு இருவரும் பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் செய்துக் கொண்டனர். தற்போது இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் இருக்கிறார்கள். தற்போது சின்னத்திரை டான் நிகழ்ச்சியில் நடுவராக வலம் வரும் சினேகா, விஜய் நடித்து வரும் கோட் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
நைட் பார்ட்டி: இந்நிலையில் சினிமா பத்திரிக்கையாளரும் திரைப்பட விமர்சகருமான பயில்வான் ரங்கநாதன் பல நடிகைகள் குறித்து ரகசியமான பல தகவல்களை வெளிப்படியாக பேசி வருகிறார். அந்த வகையில் நடிகை சினேகாவுக்கு படவாய்ப்பு குவிந்தது இப்படித்தான் என அவர் குறித்து வெளிப்படையாக பேசி உள்ளார். அதில், நடிகை சினேகா மலையாளப்படத்தின் மூலம் தான் சினிமாவிற்கு நடிக்க வந்தார். ஆரம்பத்தில் அவர் நடித்த படங்கள் சரியாக போகவில்லை, படங்கள் தோல்வி அடைந்ததால், படவாய்ப்பை அதிகரிக்க அடிக்கடி நைட் பார்ட்டிகளுக்கு சென்றார். அதன் பிறகுதான் இவரைத் தேடி படவாய்ப்புகள் வந்தன என்றார்.
தயாரிப்பாளருடன் காதல்: அதே போல, நடிகர் பிரசன்னாவை காதலிப்பதற்கு முன், சினேகா நாக் ரவி என்கிற தயாரிப்பாளரை உருகி உருகி காதலித்து வந்தார். ஒரு கட்டத்தில் இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போகிறார்கள் என்றும், இருவரும் வைர மோதிரமெல்லாம் மாற்றி நிச்சயம் செய்துகொண்டார்கள் என்றும் அப்போது சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால், நிச்சயத்திற்கு பின்னர் காதலரின் மீது சந்தேகப்பட்ட சினேகா, தயாரிப்பாளருடனான காதலை முறித்துக் கொண்டார் என்று பயில்வான் ரங்கநாதன் அந்த வீடியோவில் பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











