பாக்யராஜின் முதல் மனைவிக்கு நடந்த விபரீதம்.. வாழ்க்கை கொடுத்தவரையே மறந்த பயில்வான் ரங்கநாதன்!
சென்னை: பத்திரிக்கையாளராக இருந்த பயில்வான் ரங்கநாதன் சினிமாவிற்கு வர காரணமாக இருந்தவரே இயக்குநர் பாக்யராஜ் தான். முந்தானை முடிச்சு படத்தில், அந்த முருங்கைக்காய் விஷயத்தை சொல்லி இன்றளவும் டிரெண்டிங்கில் இருக்கும் பயில்வான் ரங்கநாதன், பாக்யராஜ் குறித்து பல விஷயத்தை பகிர்ந்துள்ளார்.
நாடக கம்பெனி வைத்துக்கொண்டு இருந்தவர் தான் பாக்யராஜ், அவரோட உண்மையான பேரு ராஜா. அதே போல உடுமலைப்பேட்டையில் ஆர் சுந்தர்ராஜனும் நாடக கம்பெனி நடத்திட்டு இருந்தாரு, இவங்க ரெண்டு பேருமே நல்ல நண்பர்களாக இருந்தனர். இதனால், பாக்யராஜுக்கு பணத்தை கொடுத்து சென்னைக்கு அனுப்பி வைத்தார் ஆர்.சுந்தர்ராஜன். அவர் அப்போதே, பேக்கரி கடை வைத்து இருந்ததால், அவருக்கு பணம் பிரச்சினை கிடையாது என்பதால், பாக்யராஜுக்கு பணத்தை கொடுத்து அனுப்பினார்.

காதல் மலர்ந்தது: சென்னைக்கு வந்த பாக்யராஜ், பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக பணியாற்றினார். அதன் பின் பாரதி ராஜா இயக்கத்தில் உருவான படத்துல, உதவி இயக்குனராக இருந்தாரு. பாக்யராஜோட கையெழுத்து நல்லா இருக்கும், சுறுசுறுப்பாக இருப்பார் என்பதால், அவருக்கு அந்த வேலை கிடைச்சுச்சு. அதன் பின், பாரதிராஜாவின் படத்துல வசனகர்த்தாவாக ஆனார். அப்படியே, முன்னேறிக்கொண்டு இருந்த பாக்யராஜ், ராதிகா, ராதா போன்ற நடிகைகளுக்கு டயலாக் கத்து கொடுத்தார் அப்படி அறிமுகமானவர் தான் நடிகை பிரவீணா. அப்போது தான், பாக்யராஜுக்கும் பிரவீணாவுக்கும் இடையே காதல் மலர்ந்தது. பிரவீணா இல்லை என்றால் பாக்கியராஜ் இல்லை.
சின்ன மனக்கசப்பு: பாக்யராஜை இயக்குநராக பார்க்க ஆசைப்பட்ட பிரவீணா, தனக்கு தெரிந்த தயாரிப்பாளர் ஒருவரிடம் பேசி, பாக்கியராஜ் இயக்குனராக ஆக்கினார். அந்த படத்தில், சுதாகரை ஹீரோவாக போட்டு ஹீரோயின் புதுமுகமாக போட்டு எடுத்தாரு அந்த படம் தான் சுவர் இல்லா சித்திரம். அந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. அந்த படத்தைத் தொடர்ந்து அடுத்தடுத்து படத்தை இயக்கினார். அப்போது தான் முந்தானை முடிச்சு படத்தை இயக்கினார். இந்த படத்தில் வரும் கண்ண தொறக்கணும் சாமி பாடலுக்கு சில்கை போட்டால் நன்றாக இருக்கும் என்று சொன்னார். ஆனால், அதற்கு பாக்யராஜ் ஒத்துக்கொள்ளவில்லை, அந்த பாட்டில் சில்க்கை போட்டால், சில்கால் தான் படம் ஓடியது என பெயர் வந்துவிடும் என பாக்யராஜ் அதை தவிர்ந்துவிட்டார்.இதனால், இருவருக்கும் சின்ன மனக்கசப்பு இருந்தது ஆனால், அது நாளடைவில் சரியாகி விட்டது.
நோயால் இறந்தார்: அதன் பிறகு தான் பாக்யராஜ், பிரவீணா இருவரும் திருமணம் செய்து கொண்டனர், இருவரும் சில காலம் ஒன்றாக வாழ்ந்தனர். அப்போது தான், பிரவீணாவிற்கு மஞ்சள் காமாலை நோய் வந்து அவர் இறந்து விட்டார். அதன் பிறகு தான், பாக்யராஜ் பூர்ணிமாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணத்தை நடத்தி வைத்தது, தாலி எடுத்து கொடுத்தது எம்ஜிஆர் தான், அப்போது, இவர்களின் திருமணம் குறித்து பல கிசுகிசுக்கள் வந்தன.
மறக்கவே மாட்டேன்: அதுமட்டுமில்லாமல், நான் சினிமாவுக்கு வருவதற்கு காரணமாக இருந்தவர் பிரவீணா தான், என்னை முந்தானை முடிச்சு படத்தில் எனக்கு வைத்தியர் கதாபாத்திரத்தை வாங்கி கொடுத்தது அவர் தான். அதை என்றுமே நான் மறக்கவே மாட்டேன். அது மட்டுமல்லாமல் பாக்கியராஜ் அவர்கள் அந்த படத்தில், டீச்சரிடம் பாடம் கற்றுக்கொடுக்கும் ஒரு நகைச்சுவை காட்சியில் என்னை நடிக்க வைத்தார். அதன் மூலம் தான், நான் ஒரு நகைச்சுவை நடிகராக மாறினேன். அதுவரைக்கும் சண்டை காட்சிகளில் நடித்து வந்தேன் ஆனால் எனக்குள் இருக்கும் நகைச்சுவை உணர்வை வெளிக்கொண்டு வந்தது பாக்கியராஜ் தான் அதை நான் என்றைக்கும் மறக்கவே மாட்டேன் என்று பயில்வான் ரங்கநாதன் அந்த பேட்டியில் பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











