புஸ்ஸி ஆனந்த் விஜய்க்கு வசிய மருந்து வைத்தாரா? பயில்வான் ரங்கநாதன் சொன்ன அதிர்ச்சி தகவல்!

சென்னை: தமிழ் சினிமாவில், 100 கோடிக்கும் மேல் சம்பளம் வாங்கும் உச்ச நடிகராக இருக்கும் விஜய், அரசியலுக்காக எடுத்துள்ள முடிவு, இவர் மீதான மதிப்பையும், மரியாதையையும் கூட்டி உள்ளது. இந்நிலையில், புஸ்ஸி ஆனந்த் விஜய்க்கு வசிய மருந்து வைத்துவிட்டதாக பயில்வான் ரங்கநாதன் வீடியோவில் பேசி உள்ளார். அது பலரை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

நடிகர் விஜய் பிப்ரவரி 2ந் தேதி, தமிழக வெற்றி கழகம் என தனது கட்சிக்குப் பெயர் வைத்துள்ளார். அதை இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய விண்ணப்பித்துள்ளார். கட்சியின் பெயரை அறிவித்ததைத் தொடர்ந்து, அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் எனப் பலரும் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

bayilvan ranganathan shared secrets about vijay political party

புஸ்ஸி ஆனந்த் யார் தெரியுமா: இந்நிலையில், விஜய்யின் அரசியல் வருகை குறித்து பயில்வான் ரங்கநாதன் யூடியூப் தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், புஸ்ஸி ஆனந்த் விஜய்க்கு வசிய மருந்து வைத்துவிட்டார் என்று எஸ். ஏ. சந்திர சேகர் குற்றம் சாட்டி உள்ளார். இந்த புஸ்ஸி ஆனந்த் யார் தெரியுமா. புஸ்ஸி என்பது புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதி, அந்த தொகுதியில் மொத்த வாக்காளர்களே ஐந்து ஆயிரம் பேர் தான், இதில் இரண்டாயிரம் வாக்குகளை பெற்று புஸ்ஸி தொகுதியில் சட்டமன்ற வேட்பாளராக வெற்றி பெற்று எம்.எல்.ஏவான ஆனந்த், தனது தொகுதியின் பெயரை தனது பெயரோடு இணைத்துக்கொண்டார். இவரின் தொழில் விறகுக்கடை வியாபாரம் ஆகும். விஜய்க்கு வசிய மருந்து

வசிய மருந்து: புஸ்ஸி தொகுதியில் விஜய் ரசிகர்மன்ற கிளைக்கழக தலைவராக இருந்த இவரை, விஜய்யின் தந்தை, தமிழகத்தின் விஜய் ரசிகர் மன்றத் தலைவராக்கினார். பின் நாளில் விஜய்யுடன் நெருங்கி பழகி, எஸ்.ஏ.சந்திர சேகருக்கே வேட்டுவைத்துவிட்டார் புஸ்ஸி. என் மகன் ஒன்னும் தெரியாத அப்பாவி, கேரளாவில் இருந்து, மாந்திரீகர்களை அழைத்து வந்து வசியம் வைத்தது மட்டுமில்லாமல், அப்பா அம்மாவிடம் இருந்தும் பிரித்துவிட்டார் புஸ்ஸி ஆனந்த். அவரின் கண் அசைவுக்கு ஏற்ப விஜய் நடந்து கொண்டு இருக்கிறார். விஜய் எதையும் சொந்தமாகவே யோசிப்பது இல்லை என்று எஸ்.ஏ.சந்திர சேகர் குற்றம் சாட்டி உள்ளார்.

முதல்வராகும் ஆசை: புஸ்ஸி ஆனந்தின் நெருங்கிய நண்பர் தான் நமச்சிவாயம், அந்த நட்பை பயன்படுத்தி புதுச்சேரி முதல்வர் ரெங்கசாமிக்கு அறிமுகம் ஆனார். அதை வைத்துத்தான் விஜய் ரெங்கசாமியை சந்தித்தார். புஸ்ஸி ஆனந்தின் ஒரே லட்சியம், எப்படியாவது புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராகி விட வேண்டும். அப்படி இல்லை என்றால், குறைந்தபட்சம் அமைச்சராக வேண்டும் என்ற லட்சியத்துடன் இருக்கிறார் புஸ்ஸி ஆனந்த்.

அமித்ஷாவின் அறிவுரைப்படி: அதே நமச்சிவாயத்தின் மூலம் தான் புஸ்ஸி ஆனந்த்திற்கு அமித்ஷாவை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது, விஜய் தனிக்கட்சி தொடங்குவது குறித்து புஸ்ஸி ஆனந்த் சொல்ல, அப்போது அமித்ஷா இப்போதே கட்சி தொடங்குவது குறித்த அறிவிப்பை வெளியிட்டால், வாக்குகள் பிரிந்து அது நாடாளுமன்ற தேர்தலில திமுகவின் வெற்றியை பாதிக்கும் என்று சொல்ல, அந்த அறிவுரையை கேட்டுக்கொண்டு தான் விஜய் கட்சி தொடங்குவது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் என்று பயில்வான் ரங்கநாதன் பல விஷயத்தை புட்டு புட்டு வைத்துள்ளார். ஆனால், இந்த வீடியோவை பார்த்த இணையவாசிகள் சிலர், பயில்வான் ரங்கநாதன் எப்போதும் வாய்க்கு வந்ததை பேசுவார் என்று கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X