எல்லாம் மேல இருக்குறவன் பார்த்துப்பான்.. ஷர்மிலியை தூக்கிய பயில்வான்.. கோபப்பட்ட கவுண்டமணி!

சென்னை: இணையத்தில் அவ்வப்போது புது புது செய்திகளை பேசி, எப்போதும் பிஸியாக இருக்கும் பயில்வான் ரங்கநாதன், எல்லாம் மேல இருக்குறவன் பார்த்துப்பான் என்ற காமெடியில் ஷர்மிலியை தூக்கியதால், கவுண்டமணி தன் மீது கோபப்பட்டது குறித்து பயில்வான் ரங்கநாதன் வீடியோவில் கூறியுள்ளார்.

சினிமா பத்திரிக்கையாளரான பயில்வான் ரங்கநாதன், பாக்கியராஜ் இயக்கத்தில் உருவான முந்தானைமுடிச்சு படத்தின் மூலம் சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆனார். அந்த படத்தில் வைத்தியராக நடித்த இவர் கோவை சரளாவிடம், அந்த முருங்கைக்காய் கசமுசா விஷயத்தை சொல்லி இருப்பார். அந்த படத்திற்கு பின், தர்மதுரை, ஆவாரம்பூ, ஆசை, ஜமீன் கோட்டை, எல்லாமே என் ராசா என பலத்திரைப்படங்களில் நடித்துள்ளார்.

Bayilvan ranganathan shared sharmili and goundamani relationship

பயில்வான் ரங்கநாதன்: சினிமா பத்திரிக்கையாளரான பயில்வான், நடிகர், நடிகைகளின் அந்தரங்க விஷயத்தை பொதுவெளியில் பேசி வருகிறார். இது கடும் விமர்சனத்திற்கு உள்ளானாலும், நான் பொய் சொல்லவில்லை எனக்கு தெரிந்த கவலை சொல்கிறேன் என்று பேசி வருகிறார். இருந்தாலும், பலர் இவர் காசுக்காக வாய்க்கு வந்தபடி பேசி வருவதாக திட்டிதீர்த்து வருகின்றனர்.

எல்லாம் மேல இருக்குறவன் பார்த்துப்பான்: தற்போது பயில்வான் ரங்கநாதன், ஆவாரம்பூ படத்தில் வரும் எல்லாம் எல்லாம் மேல இருக்குறவன் பார்த்துப்பான் என்கிற காமெடியில் ஷர்மிலி மற்றும் கவுண்டமணியுடன் சேர்ந்து நடித்த போது நடந்த விஷயத்தை கூறியுள்ளார். அதில், நான் முதன் முதலாக ஷர்மிலியை தர்மதுரை படப்பிடிப்பின் போது அப்போது அவர் டான்சராக இருந்தார். பார்ப்பதற்கே ஷர்மிலியை சும்மா கும்முனு அழகாக இருப்பார். ஆறுமாதத்திற்க பிறகு ஷர்மிலியை கவுண்டமணிக்கு ஜோடியாக நடிக்க ஆரம்பித்தார். இதனால், கவுண்டமணிக்கும் ஷர்மிலிக்கும் ரகசிய உறவு என்று பத்திரிக்கையில் எழுதினார்கள்.

மேல இருக்குறவன் பார்த்துப்பான்: அப்போது தான் நான் ஷர்மிலியின் கணவனாக ஆவாரம்பூ படத்தில் நடித்து இருப்பேன். அப்போது,கவுண்டமணி எனக்கு தெரியாமல் ஷர்மிலியை சந்திக்க வருவார் நான் எல்லாம் மேல இருக்குறவன் பார்த்துப்பான் என்று சொல்லுவேன், உடனே கவுண்டமணி, எல்லாத்தையும் மேல இருக்குறவன் பார்த்துப்பான் என்றால், கீழ இருக்குறவனை யாருடா பாக்குறது என்று சொல்லிக்கொண்டே வருவார். அந்த காமெடி இன்று வரைக்கும் பிரபலமாக உள்ளது. இந்த காமெடி சீனில் நான் ஷர்மிலியை கட்டிப்பிடித்து தூக்குவேன். இந்த காட்சி நள்ளிரவுக்கு மேல் படமாக்கப்பட்டதால், கவுண்டமணி இல்லை. அவர் இருந்து இருந்தால், அந்த காட்சியை படமாக்கவிட்டு இருக்க மாட்டார் என்று நினைக்கிறேன்.

கவுண்டமணி கோபப்பட்டார்: ஆனால், டப்பிங்கின் போது இந்த காட்சியைப் பார்த்த கவுண்டமணி கோபத்துடன், யோய் என்ன ஆளுயா நீ, அவ என் ஆளுனு தெரிஞ்சும் எப்படிடா தூக்குனா என்று கேட்டார். அதன் பிறகு ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது ஆனால், கவுண்ட மணி என்னை வேண்டாம் என்று சொல்லிவிட்டார். இதனால், அவருடன் நடிக்க முடியாமல் போனது, இதற்கு காரணம் ஷர்மிலியை நான் தூக்கி சுற்றியது தான் காரணம். அதன் பிறகு நானும் ஷர்மிலியும் சேர்ந்து நிறைய படங்களில் நடித்து இருக்கிறோம். நாங்க ரெண்டு பேரும் யூடியூப் தளத்திற்கும் பேட்டி கொடுத்து இருக்கிறோம். அவர் ரொம்ப நல்ல பொண்ணுதான், அவருக்கு ஒரு நல்ல வாழ்க்கை கிடைக்கவில்லை என்கிற கவலை இருந்தது. ஆனால், அவர் அண்மையில் அளித்த பேட்டியில் ஒருவரை திருமணம் செய்து கொண்டதாகவும் தற்போது நான் கர்ப்பமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். எது எப்படியோ கணவரோடு மகிழ்ச்சியாக இருந்தால் சரி என்று பயில்வான் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X