மாமனார் செய்ற வேலையா இது? ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பிரிய காரணம் இதுதான்.. ரகசியத்தை உடைத்த பயில்வான்!
சென்னை: சோஷியல் மீடியாவில் கடந்த சில நாட்களாக ஐஸ்வர்யா ராய்- அபிஷேக் பச்சன் பிரிவு குறித்த செய்தி தான் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. அதற்கு காரணம் அம்பானி வீட்டு திருமணத்தில் ஐஸ்வர்யா ராய் தனது மகளுடன் தனியாக கலந்து கொண்டது தான். இதுகுறித்து பேசி உள்ள பயில்வான் ரங்கநாதன் இவர்களின் பிரிவுக்கு காரணமே அபிதாப் பச்சன் செய்த வேலை தான் என கூறியுள்ளார்.
பாலிவுட்டில் முன்னணி நடிகையான ஐஸ்வர்யா ராய், தமிழில் இருவர், ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ராவணன், எந்திரன் போன்ற பல படங்களின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். தமிழ் மட்டுமில்லாமல் இந்தி, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் நடித்துள்ளார். இவர் 2007ஆம் ஆண்டு அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு ஆராத்யா என்ற மகள் உள்ளார்.

ஐஸ்வர்யா, அபிஷேக் பிரிவு: நடிகை ஐஸ்வர்யா ராய்- அபிஷேக் பச்சன் தம்பதியினர் எப்போதும் சோஷியல் மீடியாவில் ஹாட் டாப்பிக்காகவே உள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இருவரும் பிரிந்து விட்டதாக, சோசியல் மீடியாவில் வதந்திகள் உலவி வந்தது. அதன் பின் இருவருமே ஜோடியாக இருந்த புகைப்படத்தை பகிர்ந்து வதந்திக்கு முற்றிப்புள்ளி வைத்தனர். அண்மையில் நடந்த அம்பானி வீட்டு திருமண விழாவில், ஐஸ்வர்யா ராய் தனது மகளுடன் தனியாக வந்திருந்தார். அதே போல அபிஷேக் பச்சன் தனது அப்பா அம்மாவுடன் வந்திருந்தார். இதனால், இருவரின் விவாகரத்து செய்தி சூடுபிடித்துள்ளது.
பயில்வான் ரங்கநாதன்: இதுகுறித்து பேசி உள்ள பயில்வான் ரங்கநாதன், ஐஸ்வர்யா ராயைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என்று அபிஷேக் பச்சன் அடம்பிடித்ததால் தான் அமிதாப் இந்த கல்யாணத்திற்கு ஓகே சொன்னார். ஐஸ்வர்யா ராய் திருமணத்திற்கு முன் விவேக் ஓப்ராய், சல்மான் கான் போன்ற நடிகர்களுடன் உறவில் இருந்ததால், அமிதாபிற்கு இந்த திருமணத்தில் அவருக்கு விருப்பம் இல்லை. இருந்தாலும் மகனுக்காக இந்த திருமணத்தை நடித்தி வைத்தார். இவர்களுக்கு ஆராதனா என்ற மகள் இருக்கிறார்.
காரணம் அந்த நடிகை: ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன் பிரிய முக்கிய காரணமே சொத்து பிரச்சனை தான் என்று கூறப்படுகிறது. அபிதாப் மும்பையில் பெரிய பணக்காரர்கள் வசிக்கும் ஜூஹூ பகுதியில் இருக்கும் பெரிய வீட்டை தனது மகள் ஸ்வேதா நந்தாவிற்கு கொடுத்துவிட்டார். இதனால், ஐஸ்வர்யா ராய் மாமனார் மீது மிகுந்த கோபத்தில் இருக்கிறார். இதனால், ஏற்பட்ட சண்டை காரணமாக, ஒரே வீட்டில் இருந்தாலும் ஐஸ்வர்யா ராய் யாரிடமும் பேசாமல் தனியாக இருந்து வருகிறார். இதுமட்டுமில்லாமல் அபிஷேக்கிற்கு ஒரு நடிகையுடன் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. இது குடும்பத்தில் மேலும் விரிசலை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது என்று பயில்வான் அந்த வீடியோவில் பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











