ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பங்களா வாங்க காரணம் இதுதான்.. பயில்வான் ரங்கநாதன் சொன்ன அந்த விஷயம்!

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், அண்மையில் புது வீடு கட்டி அதில் குடியேறி நிலையில், புது பங்களா வாங்கியதற்கான முக்கிய காரணமே இதுதான் என்று பயில்வான் ரங்கநாதன் பேட்டி ஒன்றில் வெளிப்படையாக கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் நடிகர் தனுஷ். தொடர்ந்து பல பட ஹிட் படங்களில் நடித்த தனுஷ், தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, ஹாலிவுட் வரை சென்றுவிட்டார். நடிகர் தனுஷ் 2006ஆம் ஆண்டு ஆண்டு ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு மகன்கள் உள்ளனர்.

Bayilvan Ranganathan shared shocking information about Aishwarya Rajinikanth bought a bungalow

இரண்டு வருடத்திற்கு முன் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிவதாகவும் இனி கணவன் மனைவி என்ற பந்தத்தில் வாழப் போவதில்லை என்றும் அறிவித்தனர். இதையடுத்து இருவரும் அவரவர் வேலையில் கவனம் செலுத்தி வருகின்றனர். மகன்களும் அப்பா அம்மா என மாறி மாறி இருந்து வருகின்றனர். ரஜினிகாந்த் வீட்டில் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டதாகவும் இதில் விவாகரத்து முடிவை கைவிட தனுஷும் ஐஸ்வர்யாவும் சம்மதித்ததாகவும் தகவல் வெளியானது. ஆனால், கடந்த மாதம் இருவரும் விவாகரத்து கோரி குடும்ப நல நீதிமன்றத்தை நாடி உள்ளனர்.

தனுஷை பிரிந்த ஐஸ்வர்யா மனஅழுத்தத்தில் இருந்த நிலையில், தனது கவனத்தை சினிமாவில் திருப்பினார். இதைத் தொடர்ந்து லால் சலாம் என்ற படத்தை இயக்கினார். கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவான இந்த படத்தில், ரஜினி மொய்தீன் பாய் என்ற சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். லைகா நிறுவனம் தயாரித்த இந்த படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து இருந்தார். மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

பிரம்மாண்டமான வீடு: தற்போது, ஐஸ்வர்யா ரஜினிகாந்த், சொந்தமாக புது வீடு ஒன்றை வாங்கி உள்ளார். அந்த வீட்டின் கிரகப்பிரவேசம் மிகவும் எளிமையாக நடைபெற்றது. ஆசை ஆசையா கட்டிய வீட்டை தனது அப்பாவுக்கும் அம்மாவிற்கும் சுற்றி காட்டிய வீடியோ இணையத்தில் வெளியானது. மகள் பார்த்து பார்த்து கட்டிய வீட்டை ரஜினிகாந்த் வியந்து பார்த்து மகளை பாராட்டினார்.

காரணம் இதுதான்: இந்நிலையில் சினிமா பத்திரிக்கையாளரான பயில்வான் இதுகுறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஐஸ்வர்யா விவாகரத்து உறுதியானதை அடுத்து சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகிறார். தனுஷை பிரிந்து தந்தை வீட்டில் வாழ்ந்து வந்த அவர், பெற்றோருடன் வாழ பிடிக்காமல், குழந்தைகளுடன் தனியாக வாழ முடிவு செய்த புதுவீட்டை கட்டி உள்ளதாக தெரிகிறது. இதில் ரஜினிகாந்த், லதா ரஜினிகாந்த் இருவரும் சென்று குத்துவிளக்கு ஏற்றிவைத்து வாழ்த்தி உள்ளனர். இதில் மிகப்பெரிய விஷயம் என்னவென்றால், ஐஸ்வர்யா பெயரில் வாங்கிய பங்களாவை அவரே வைத்துக்கொள்ளட்டும் என்று பெருந்தன்மையோடு விட்டு கொடுத்து இருக்கிறார் தனுஷ்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X