இலியானாவின் கர்ப்பத்திற்கு காரணம் இவரா? ரகசியத்தை உடைத்த பிரபலம்!
சென்னை: நிறைமாத கர்ப்பிணியான இலியானா தனது காதல் கணவர் குறித்து ரகசியமாக வைத்து இருக்கும் நிலையில், காதலன் யார் என்ற ரகசியத்தை பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.
தெலுங்கில் தேவதாசு என்கிற படத்தின் மூலம் கடந்த 2006 ஆம் ஆண்டு திரைத்துறையில் நடிகையாக அறிமுகமானவர் இலியானா.

அதன் பின் அதே ஆண்டு தமிழில் வெளியான கேடி படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். ஆனால் அந்தபடம் எதிர்பார்த்த வெற்றியை பெறாததால் தெலுங்கு பக்கம் சென்றார்.
நடிகை இலியானா: மீண்டும் தமிழில் நண்பன் படத்தில் ஒல்லி பெல்லி இடுப்பை காட்டி தமிழ் ஆடியன்ஸ் மனதில் இடம் பிடித்தார். முன்னணி நடிகையாக மாறிய இலியானா பவன் கல்யாண், ரவி தேஜா, நிதின், ஜூனியர் என்.டி.ஆர் போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து தனது பாலிவுட் கனவை அடைவதற்காக பாலிவுட் பக்கம் சென்று கவர்ச்சியில் அதகளப்படுத்தினார்.

ரசிகர்கள் அதிர்ச்சி: இதையடுத்து, கடந்த ஏப்ரல் மாதம், தான் கர்ப்பமாக இருப்பதாக கூறி ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கினார். ஆனால் அந்த குழந்தையின் தந்தை குறித்தும் தனது காதல் கணவர் குறித்தும்,இலியானா எந்தவிதமான தகவலையும் தெரிவிக்கவில்லை. மேலும் அண்மையில் முகத்தை மறைத்தபடி இருக்கும் போட்டோவை வெளியிட்டு இருந்தார். அந்த வகையில் இலியானாவின் கர்ப்பத்திற்கு காரணம் யார் என்ற கேள்வியை ரசிகர்கள் தொடர்ந்து கேட்டு வருகின்றனர்.
ரகசிய காதலன் யார்: இந்நிலையில்,சினிமா விமர்சகரான பயில்வான் ரங்கநாதன் யூடியூப் சேனல் ஒன்றில் இலியானா குறித்து பேசி உள்ளார். அதில், இலியானா இப்போது நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார். அவர் அவ்வப்போது தனது கர்ப்ப கால புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு வருகிறார். இதைப்பார்த்த ரசிகர்கள் இவரது காதலர் யார் என்று கேட்டு வருகின்றனர்.

ரகசியத்தை உடைத்த பிரபலம்: குழந்தை பிறக்க இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையிலும் தனது காதலர் குறித்து வாய் திறக்காமல் இருக்கிறார்.ஆனால், பாலிவுட் வட்டாரத்தில் பிரபல லண்டன் மாடல் செபாஸ்டின் லோரன்ட் மைக்கில் தான் இலியானாவின் காதலர் என்ற பேச்சு அடிபட்டு வருகிறது. அவர் தான் இலியானாவின் காதலன் என்றும் இவர் மாடல் நடிகர் மட்டுமல்ல, பிரபல பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்பின் அண்ணன் என்றும் பயில்வான் ரங்கநாதன் கூறி உள்ளார்.


Click it and Unblock the Notifications











