Mic Mohan - தளபதி 68ல் மைக் மோகன் ரீ என்ட்ரி.. அவர் எப்படிப்பட்டவர் தெரியுமா?.. பயில்வான் சொன்ன சீக்ரெட்ஸ்

சென்னை: Bayilvan Ranganathan (பயில்வான் ரங்கநாதன்) தளபதி 68ல் வில்லனாக நடிக்கிறார் என்று கூறப்படும் மைக் மோகன் குறித்து பயில்வான் ரங்கநாதன் பேசியிருக்கிறார்.

கோலிவுட்டில் 80களில் கொடிக்கட்டி பறந்தவர் மோகன். முக்கியமாக பெண்களுக்கு மிகவும் பிடித்தவராக வலம் வந்த அவருக்கு பலர் ரசிகர்களாக இருந்தனர்.அதிலும் தன்னுடைய பெரும்பாலான படங்களில் மேடையில் பாடுவது போன்ற காட்சிகள் இருந்ததால் அவர் ரசிகர்களால் மைக் மோகன் என்றும் அழைக்கப்பட்டார். பெரிய ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட மோகன் திடீரென்று காணாமல் போனார்.

Bayilvan Ranganathan Shares about Actor Mic Mohan

தளபதி 68: தற்போது பல வருடங்களுக்கு பிறகு தரமான கம்பேக் கொடுக்கவிருக்கிறார் மோகன். வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் தளபதி 68 படத்தில்தான் மோகன் நடிக்கிறார். முக்கியமாக அதில் அவர் வில்லனாக கமிட்டாகியிருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. இத்தனை வருடங்கள் அமைதியாக இருந்த மோகன் விஜய்க்கு வில்லனாக எப்படி ஸ்கோர் செய்யப்போகிறார் என்பதை பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

பயில்வான் ரங்கநாதன்: இந்நிலையில் மைக் மோகன் குறித்து பத்திரிகையாளரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன் பேசுகையில், “ஒருகாலத்தில் கமல் ஹாசனின் கவனம் எல்லாம் ஹிந்தி படத்தின் மீது இருந்தது. அப்போது கமலின் பாணியை பின்பற்றி நடிக்க ஆரம்பித்தவர் மோகன். மோகனின் வெற்றிக்கு முதுகெலும்பாக இருந்தவர் இசைஞானி இளையராஜாதான். வித்தியாசமான ஸ்டைலை மோகன் காண்பித்தவர்.

அதிக ரசிகைகள்: இளம்பெண்களை அதிகம் ஈர்த்தவர் என்றால் அது கமல் ஹாசனுக்கு பிறகு மோகன் மட்டும்தான். ரஜினிகாந்த்தை போலவே மோகனும் கன்னடத்துக்காரர். மோகனுக்கு தமிழ் தெரியாது என்பதே இங்கு பலருக்கு தெரியாது. அந்த அளவுக்கு அவருக்கு பின்னணி குரல் கொடுக்கப்பட்டிருந்தது. அவருக்கு அப்படி பின்னணி குரல் கொடுத்தது சுரேந்தர். அவர் விஜய்யின் தாய்மாமா.

தகராறு: மோகனின் மார்க்கெட் சரிந்த காலத்தில் அவருக்கும் சுரேந்தருக்கும் மோதல் ஏற்பட்டது. ஏனெனில் மோகனின் வெற்றிக்கு தன்னுடைய குரல்தான் காரணம் என சுரேந்தர் தொடர்ந்து சொல்லிவந்தார். அனைத்து நடிகைகளுடனும் மைக் மோகன் நடித்தவர். மோகனின் நடனத்தில் எப்போதும் ஒரு நளினம் இருக்கும்.

எய்ட்ஸ்: மோகன் திடீரென காணாமல் போனவுடன் அவருக்கு எய்ட்ஸ் வந்துவிட்டது என்று வதந்தி பரவியது. ஆனால் அதை அவர் மறுத்தார். அவர் ஒரு ஹோம் டிசைனரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர் தனது மனைவியையோ குடும்பத்தையோ மீடியாவுக்கு முன்பு எப்போதும் காட்டியதில்லை. அரசியல் ஆசை இல்லை: அரசியல் கட்சிகள் பல மோகனுக்கு தூது விட்டன. ஆனால் அவர் அதற்கு மறுத்துவிட்டார். சர்ச்சையில் சிக்காதவர் அவர்” என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X