Rajini - ரஜினிகாந்த் அப்படித்தான் குடிப்பார்.. கமல் அப்படி இல்லை.. பயில்வான் ரங்கநாதன் போட்ட குண்டு

சென்னை: ரஜினிகாந்த்தும், கமல் ஹாசனும் இந்திய சினிமாவின் அடையாளங்களாக இருக்கிறார்கள். ரஜினி நடிப்பில் கடைசியாக ஜெயிலர் திரைப்படமும் கமல் ஹாசன் நடிப்பில் கடைசியாக விக்ரம் திரைப்படமும் வெளியாகியிருக்கிறது. இந்த சூழலில் அவர்கள் இருவரும் குறித்து பயில்வான் ரங்கநாதன் பேசியிருக்கும் விஷயம் இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.

சினிமா பத்திரிகையாளர் மற்றும் நடிகராக வலம் வருபவர் பயில்வான் ரங்கநாதன். 90களில் பல படங்களில் காமெடி ரோலிலும், கேரக்டர் ரோலிலும் நடித்திருக்கும் இவர் சினிமா சம்பந்தமான நிகழ்ச்சிகளுக்கு பத்திரிகையாளராக சென்று சர்ச்சையான கேள்விகள் கேட்பதை வழக்கமாக வைத்திருப்பவர். அதுமட்டுமின்றி நடிகர்கள் மற்றும் நடிகைகளின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேசி பல சர்ச்சைகளுக்கு தொடக்கப்புள்ளியாகவும் இருப்பார்.

Bayilvan Ranganathan Shares about Rajini and Kamal Drinking Habit

ஓபன் டாக்தான்: தான் சொல்வதுதான் உண்மை. தனக்கு சினிமாவில் இருப்பவர்கள் பற்றி எல்லாமே தெரியும் என்ற மனப்பான்மையில் இருப்பவர் நயன்தாரா, த்ரிஷா, ரேகா நாயர் உள்ளிட்ட நடிகைகள் குறித்தும் தனுஷ், கவுண்டமணி, வடிவேலு உள்ளிட்ட நடிகர்கள் குறித்தும் பல விஷயங்களை பேசியிருக்கிறார். ஆனால் அவை அனைத்துமே அவதூறுகள்தான் என்பது ரசிகர்களின் கருத்து. ஆனால் தான் பேசுவதில் அனைத்திலும் உண்மை இருக்கிறது என்பது பயில்வான் ரங்கநாதனின் கருத்து.

சண்டைக்கு சென்ற ரேகா நாயர்: ரேகா நாயர் குறித்து பயில்வான் ரங்கநாதன் ஒரு வீடியோவில் பேசியிருந்தார். அதனை பார்த்த கொந்தளித்த ரேகா; பயில்வான் வாக்கிங் செலும்போது அவரிடம் சண்டைக்கு சென்றுவிட்டார். அதேபோல் நடிகை ராதிகாவும் பயில்வான் ரங்கநாதனை ஒருமுறை தாக்கியிருப்பதாக பேச்சு ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படி அவருக்கு எதிர்ப்புகள் வந்தாலும் சர்சைக்குரிய வகையிலும், அந்தரங்க விஷயங்களை பேசுவதையும் அவர் நிறுத்திக்கொள்வதில்லை.

பயில்வான் ரங்கநாதன் வீடியோ: இந்நிலையில் பயில்வான் ரங்கநாதன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ரஜினிகாந்த் குறித்து பேசியிருக்கும் விஷயம் இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. அவர் அளித்த பேட்டியில், "ரஜினிகாந்த் அவரது திருமணம் நடந்ததை முன்னிட்டு பத்திரிகையாளர்களை அழைத்து பார்ட்டி வைத்திருந்தார். நானும் சென்றிருந்தேன். வித விதமான மது இருந்தது. ஆனால் சைட் டிஷ் எதுவுமே இல்லை. பத்திரிகையாளர்கள் யாரும் ரஜினியிடம் சைட் டிஷ் கேட்கவில்லை. கேட்பதற்கு பயந்திருந்தார்கள்.

ரஜினி ஸ்டைல்: முதல் ரவுண்டு அடித்துவிட்டு இரண்டாவது ரவுண்டு செல்வதற்கு முன்பு நான் ரஜினியிடம் சென்று சைட் டிஷ் எதுவுமே இல்லையே என்றேன். உடனே அவர், இதுதான் ரஜினி ஸ்டைல். இப்படி குடிப்பது உடலுக்கு நல்லது என்றார். நான் உடனே அய்யோ அதெல்லாம் செட் ஆகாது. சைட் டிஷ் இல்லைனா வயிறு எல்லோருக்கும் எரியும் என்றேன். உடனே அவர் வித விதமான சைட் டிஷ்களை வரவைத்தார். அதேபோல் ரஜினிகாந்த்துக்கு சாதம் பால், தயிர் பிடிக்காது.

கமல் அப்படி இல்லை: ஆனால் கமல் ஹாசன் அப்படி இல்லை. உலகத்தில் உள்ள அனைத்து அசைவ உணவுகளையும் அவர் சாப்பிடுவார். கமல் ஹாசன் தயாரிக்கும் படங்களின் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகர்களுக்கு வித விதமான ஸ்நாக்ஸ்கள், உணவுகள் கிடைக்கும்.. அவர் நெருங்கிய நண்பர்களுடன் மட்டும்தான் மது அருந்துவார். எவ்வளவு குடித்தாலும் அதிகாலை 4 மணிக்கே எழுந்துவிடுவது கமல் ஹாசனின் பழக்கம்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X