அவரை விக் இல்லாம பார்த்தா கண்டேபிடிக்க முடியாது.. பிரபல நடிகர் குறித்து பரபரப்பை கிளப்பிய பயில்வான்!
சென்னை: பிரபல நடிகரை விக் இல்லாமல் பார்த்தால் கண்டே பிடிக்க முடியாது என பயில்வான் ரங்கநாதன் கூறியிருப்பது பரபரப்பை கிளப்பியுள்ளது.
தமிழ் சினிமா நடிகர்கள் பலரும் விக் பயன்படுத்தி வருகின்றனர். நடிகர்கள் ரஜினிகாந்த், பாக்யராஜ், சுரேஷ், சத்யராஜ் உட்பட பல நடிகர்கள் விக் பயன்படுத்தி வருகின்றனர்.
சில நடிகர்கள் பொதுவெளிக்கு வரும் போது விக்குடன் வருகிறார்கள். ரஜினிகாந்த் போன்ற சில நடிகர்கள் படங்களில் மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர்.

கதாப்பாத்திரத்திற்கு ஏற்ப
நடிகர்கள் விக் பயன்படுத்துவது என்பது சினிமாத்துறையை பொறுத்தவரை சர்வ சாதாரணம். கதாப்பாத்திரத்திற்கு ஏற்பவும் நடிகர்கள் ஹேர் ஸ்ரடைலை மாற்றுவது உண்டு. பல நடிகர்கள் நீண்ட முடி, தாடி, மீசை என வளர்த்து அடையாளம் தெரியாதப்படி இருப்பார்கள்.

காமெடி கிங் கவுண்டமணி
அந்த வகையில் விக் பயன்படுத்தி பெரும் ஹிட்டான நடிகர் காமெடி கிங் கவுண்டமணி. மேடை நாடகங்களில் நடித்து வந்த நடிகர் கவுண்டமணி சர்வர் சுந்தரம் படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார்.

காமெடி காம்போ
சோலோவாக பல படங்களில் காமெடி செய்து கலக்கிய கவுண்டமணி பின்னர் நடிகர் செந்திலுடன் சேர்ந்து சினிமாவில் காமெடி ரகளை செய்துள்ளார். இன்று வரையிலும் அவர்களின் காமெடி காம்போவை எந்த நடிகராலும் பீட் செய்ய முடியவில்லை.

குணச்சித்திர நடிகர்
பல இளம் காமெடி நடிகர்கள் கவுண்டமணியை ரோல்மாடலாக பின்பற்றி வருகின்றனர். நடிகர் கவுண்ட மணி நகைச்சுவை நடிகராக மட்டுமின்றி குணச்சித்திர நடிகர் மற்றும் வில்லன் நடிகராகவும் வலம் வருகிறார். கடைசியாக வாய்மை படத்தில் நடித்தார் கவுண்டமணி.

ரொம்ப கஷ்டம்
இந்நிலையில் பிரபல நடிகர்கள் மற்றும் நடிகைகள் குறித்த ரகசியங்களையும் பகீர் தகவல்களையும் வெளியிட்டு வரும் பயில்வான் ரங்கநாதன் பிரபல நடிகர் குறித்து பரபரப்பு தகவலை கூறியுள்ளார். அதாவது நடிகர் கவுண்ட மணியை விக் இல்லாமல் பார்த்தால் கண்டுப்பிடிப்பது ரொம் கஷ்டம் என ஓபனாக கூறியுள்ளார்.

கோபிச்செட்டி பாளையம்
இதுதொடர்பாக ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள நடிகர் பயில்வான் ரங்கநாதன், கோபிசெட்டிபாளையத்தில் படப்பிடிப்பின் போது நடந்த சம்பவத்தை பகிர்ந்துள்ளார். அதாவது கவுண்டமணி நடித்து வந்த ஒரு படத்தின் படப்பிடிப்பு சில வருடங்களுக்கு முன்பு கோபிச்செட்டி பாளையத்தில் நடைபெற்று.

விக் இல்லாமல் கவுண்டமணி
அப்போது அதே படத்தில் பயில்வான் ரங்கநாதனும் நடித்துள்ளார். படப்பிடிப்பு முடிந்து சென்னைக்கு செல்ல ஈரோடு ரயில் நிலையத்தில் காத்திருந்தாராம் கவுண்டமணி. கவுண்டமணி விக் இல்லாமல் இருந்ததால் அவரை அடையாளம் தெரியாமல் அவரை கடந்து சென்று விட்டாராம் பயில்வான் ரங்கநாதன்

உனக்குமா தெரியல?
இதை பார்த்த கவுண்டமணி, என்னய்யா ரசிகர்களுக்கு தான் விக் இல்லாமல் என்னை அடையாளம் தெரியாது, உனக்குமா தெரியாது என பயில்வான் ரங்கநாதனிடம் கேட்டுள்ளார். இந்த தகவலை தற்போது வெளியிட்டுள்ளார் நடிகரும் விமர்சகருமான பயின்வான் ரங்கநாதன்.


Click it and Unblock the Notifications











