ரஜினியை திட்டியதால் ஓரங்கட்டப்பட்ட மனோரமா..பயில்வான் ரங்கநாதன் சொன்ன சுவாரசியத் தகவல்!

சென்னை: ரஜினியை திட்டியதால் மனோரமா ஓரங்கட்டப்பட்டதாக பயில்வான் ரங்கநாதன் சுவாரசியத் தகவலை தெரிவித்துள்ளார்.

நகைச்சுவை, குணச்சித்திர வேடங்கள் என பல்வேறு மொழிகளில் 1500க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார் நடிகை மனோரமா.

தமிழ்த்திரையுல ரசிகர்கள் இவரை ஆச்சி என்றே அன்போடு அழைக்கிறார்கள்.

Bayilvan Ranganathan shares interesting information about Manorama

மனோரமா: தென்னிந்தியாவின் 5 முதலமைச்சர்களுடன் நடித்த பெருமை கொண்ட மனோரமாவின் சொந்த வாழ்க்கை கவலை நிறைந்ததாகவே இருந்தது. மனோரமாவின் கணவர் ஒரு நாடக நடிகர் சினிமாவில் ஒன்றிரண்டு திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் மனோரமாவை திருமணம் செய்து கொண்ட பின் சினிமாவில் நடிக்கக்கூடாது என்று சொன்னதால் இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டு பிரிந்தனர்.

குழந்தையுடன் தனியாக: மகன் பூபதியுடன் தனியாக வசித்து வந்த மனோரமா அதன் பிறகு திருமணம் செய்து கொள்ளவில்லை. ஆனால், அவரது கணவர் இரண்டாம் திருமணம் செய்து கொண்டு குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். ஆனால், மனோரமா கையில் குழந்தையை வைத்துக்கொண்டு சரித்திர சாதனை படைத்தார்.

ஓரங்கட்டப்பட்ட மனோரமா: ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது சட்டமன்ற தேர்தல் வந்தது. அப்போது தேர்தல் பிரச்சாரத்தில் நடிகர் ரஜினிகாந்தை, திட்டிதீர்த்துவிட்டார் மனோரமா. இதனால் மனோரமாவிற்கும் ரஜினிக்கும் கருத்துமோதல் வந்ததால், இவரை தமிழ் படங்களில் ஒப்பந்தம் செய்ய தயாரிப்பாளர்கள் தயங்கினார்கள் இதனால், மனோரமாவிற்கு மார்க்கெட் இல்லாமல் போய்விட்டது. அதன் பின் தெலுங்கு பக்கம் சென்றார். ஆனால், இங்கேயும் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு படவாய்ப்பு வரவில்லை என பயில்வான் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X