மது பாரில் நடிகைகள் ஓவர் அலப்பறை செய்றாங்களாம்.. வெயிட்டர்கள்தான் பாவமாம்.. அத்துமீறிய பிரபலம்

சென்னை: நடிகராகவும், பத்திரிகையாளராகவும் விளங்குபவர் பயில்வான் ரங்கநாதன். நடிகர்கள், நடிகைகள் குறித்து அந்தரங்கமான விஷயங்களை பேசி; அதனால் சர்ச்சைகளை உருவாக்கி அதனை வைத்து யூட்யூபில் பிரபலமாக இருப்பவர் அவர். அவரது பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்தாலும் அதை பற்றியெல்லாம் கவலைப்படுவதில்லை. சூழல் இப்படி இருக்க தற்போது நடிகைகள் குறித்து மீண்டும் ஓவராக பேசியிருக்கிறார் பயில்வான் ரங்கநாதன். அவரது பேச்சுக்கு கண்டனங்களும் வலுத்திருக்கின்றன.

பயில்வான் ரங்கநாதன் தொடர்ந்து சர்ச்சைகளை ஏற்படுத்தி வருபவர். சினிமாவில் நடித்து, பத்திரிகையாளராக இருந்துவருபவர் இப்போது யூட்யூப் தளத்தில் இயங்கிவருகிறார். தான் பேசும் சேனல்கள் அதிக வியூஸ்களை சந்திக்க வேண்டும் என்பதற்காக நடிகர்கள், நடிகைகள் குறித்த அந்தரங்க விஷயங்களை தொட்ர்ந்து பேசிவருகிறார். அவர் பேசுவது எல்லாம் பச்சை பொய் என்று ஒருதரப்பினர் கூறினாலும்; கடந்த பல வருடங்களாகவே சினிமாவுடன் தொடர்பில் இருப்பதால் தான் பேசுவது உண்மை என்று பயில்வான் சொல்வது வழக்கம்.

Bayilvan Ranganathan Tamil Cinema

பதிலடி: ஆரம்பத்தில் அவரது பேச்சு செலிபிரிட்டிகளால் கண்டுகொள்ளப்படாமல் இருந்தது. ஆனால் காலம் செல்ல செல்ல அவரது பேச்சில் அநாகரீகம் ஒட்டிக்கொள்ள ஆரம்பித்தது. நிலைமை இப்படி இருக்க நடிகை ரேகா நாயர் இரவின் நிழல் படத்தில் நிர்வாணமாக நடித்ததை வைத்து பயில்வான் தாறுமாறாக பேச; ரேகாவோ நேரடியாக பயில்வானிடம் மல்லுக்கு போய்விட்டார். அதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி; ரேகா நாயருக்கு பலரும் தங்களது பாராட்டை கொடுத்தனர். அதேபோல் ராஜன், விஷால், பாலா உள்ளிட்டோரும் தங்களது தரமான பதிலடியை கொடுத்திருக்கின்றனர்.

வழக்கு போடுங்கள்: தனுஷ் - ஐஸ்வர்யா விவகாரம், நடிகை அஞ்சலி தொடர்பான விவகாரம், இயக்குநர் பாலாவுக்கும் அவரது மனைவிக்கும் நடந்த விவாகரத்து என பயில்வான் ரங்கநாதன் பேசாத விஷயங்களே இல்லை. ஆனால் அத்தனையையும் இவர் அருகில் இருந்து பார்த்தபடியே பேசுவார். இதனால் பல பத்திரிகையாளர் சந்திப்புகளில் சலசலப்பும் ஏற்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஷகீலா அதிரடி: இதற்கிடையே ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஷகீலாவும், பயில்வான் ரங்கநாதனும் கலந்துகொண்டார்கள். அப்போது பயில்வானிடம் ஷகீலா, 'உங்கள் மகள் ஒரு தன் பாலின ஈர்ப்பாளர்.. அது பற்றி ஏன் பொதுவெளியில் பேசவில்லை' என்று கூறி அதிரடி காட்டினார். அது அப்போதைக்கு பெரும் கவனத்தை ஈர்த்தது. அந்த சம்பவத்துக்கு பிறகு அவசர அவசரமாக பயில்வான் ரங்கநாதனுடைய மகளின் திருமணம் சத்தமே இல்லாமல் நடந்து முடிந்தது.

பயில்வான் பேட்டி: இந்நிலையில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அவர் பேசுகையில், "சென்னையில் இருக்கும் ஒரு பார் ஓனர் ஒருமுறை என்னிடம் சில விஷயங்களை கூறினார். அதாவது ஸ்டார் நடிகைகள் மது விடுதிக்கு சென்று சரக்கு அடிக்கிறார்கள். அப்போது அங்கிருக்கும் வெயிட்டர்களிடம் தங்களுக்கு முத்தம் கொடுக்க வேண்டும்; தங்களை சந்தோஷப்படுத்த வேண்டும் என்று சொல்வார்களாம். மேலும் பாரை மூடிய பிறகும் அங்கேயே இருந்து மேலும் மது வேண்டும் என்று சொல்லி அலப்பறை செய்வார்களாம்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X