சினேகா பிரசன்னா குடும்ப உறவில் விரிசல்.. பயில்வான் சொன்ன அதிர்ச்சி தகவல்!

சென்னை: நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட சினேகா, அண்மையில் யூடியூப் சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில், திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட பல குழப்பம் குறித்தும் சண்டை குறித்தும் பல ரகசியங்களை வெளிப்படையாக கூறியுள்ளார். திருமணமான புதிதில் தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வந்ததாக தெரிவித்துள்ளார்.

நடிகை சினேகா தனது அழகான சிரிப்பால் தமிழக ரசிகர்களை வளைத்துப்போட்டு புன்னகை அரசி என பெயர் எடுத்தார். சினேகாவுக்கு மார்டன் உடையைவிட புடவையும், தாவணியும் அம்சமாக பொருந்தி இருந்ததால், பல படங்களில் புடவை, தாவணியிலேயே ரசிகர்களை வசியம் செய்தார். இதையடுத்து, வசீகரா, ஆட்டோகிராப், புதுப்பேட்டை, நான் அவன் இல்லை, பள்ளிக்கூடம், வசூல் ராஜா எம்பிபிஎஸ் போன்ற படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இவருக்கு என்று தனி இடத்தை பெற்றார். அவர் தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னட படங்களில் நடித்துள்ளார்.

Bayilvan Ranganathan shocking information about the Sneha marriage life

நடிகை சினேகா கடந்த 2012ம் ஆண்டு பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் இருக்கிறார்கள். திருமணத்திற்கு பின்னர் சினிமாவில் இருந்து கொஞ்சம் ஓய்வெடுத்திருந்த அவர் பின்னர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராகவும் அவ்வப்போது தமிழ், தெலுங்கில் கிடைக்கும் வாய்ப்புகளிலும் நடித்து வந்தார். தற்போது விஜய்யின் கோட் படத்தில் நடித்து வருகிறார்.

பயில்வான் ரங்கநாதன்: நடிகை சினேகா திருமண வாழ்க்கை குறித்து அளித்த பேட்டி இணையத்தில் வைரலான நிலையில், இதுகுறித்து பேசிய பயில்வான் ரங்கநாதன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நடிகை சினேகா, பிரசன்னா காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் என்பது அனைவருக்கும் தெரியும், அண்மையில் சினேகா அளித்த பேட்டியில் எங்கள் குடும்பத்தில் விரிசல் வந்தது உண்மைதான் என கூறியிருந்தார். மேலும் அந்த பேட்டியில் நானும் பிரசன்னாவும் காதலித்துத்தான் திருமணம் செய்து கொண்டோம்.

தனித்தனியாக வாழ்ந்தோம்: நாங்கள் காதலித்துக்கொண்டு இருந்த போது தனித்தனியாகத்தான் வாழ்ந்து கொண்டு இருந்தோம். திருமணத்திற்கு பிறகு வாடகைக்கு வீடு தேடினோம். பல வீடுகளை பார்த்தோம், நடிகர் என்பதால் பலர் வீடு தர தயங்கினார்கள். இதனால், சில நாட்கள் நாங்கள் தனித்தனியாக வாழ்ந்து வந்தோம். அதன் பிறகு ஒரு வீட்டில் குடியேறினோம்.

சண்டையா டேட்டிங் போங்க: அதன் பிறகுதான் எங்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் பிறந்தார்கள். எங்கள் குடும்பத்தில் சந்தோஷம் இருப்பது போலவே, எங்களுக்குள் அடிக்கடி சண்டை நடந்து இருக்கிறது. சில நேரம் அது அடிதடியாக மாறி குடும்பத்தில் விரிசல் பெரிதாகிவிடும். அப்படி எங்களுக்குள் சண்டை வரும் போதேல்லாம், நானும் பிரசன்னாவும் டேட்டிங் செல்வோம். அப்படி நாங்கள் செல்லும் போது எங்களுக்குள் இருக்கும் சண்டையை மறந்துவிடுவோம் என்று சொல்லி இருக்கிறார் சினேகா. அதே போல கணவன் மனைவிக்குள் பிரச்சனை வந்தால், தயவு செய்து டேட்டிங் செல்லுங்கள், அப்படி இல்லை என்றால் படுக்கை அறைக்குள் செல்லுங்கள் இது பல பிரச்சனைகளை தீர்க்கும். இந்த விஷயத்தை சொன்ன சினேகாவை பாராட்டித்தான் ஆகவேண்டும் என்று பயில்வான் ரங்கநாதன் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X