மாலத்தீவுக்கு ரஜினி தனியாக சென்றது ஏன்? அடுத்த திருமணத்துக்கு ரெடியான மகள்.. பயில்வான் கொடுத்த ஷாக்!

சென்னை: நடிகர் தனுஷை பிரிந்து வாழ்ந்து வரும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அடுத்த திருமணத்துக்கு ரெடியானது தான் நடிகர் ரஜினிகாந்தை தனியாக மாலத்தீவுக்கு செல்ல வைத்ததன் காரணம் என பயில்வான் ரங்கநாதன் அதிர்ச்சி தகவல் ஒன்றை கூறியுள்ளார்.

ஜெயிலர் மற்றும் லால் சலாம் படங்களின் படப்பிடிப்பை நிறைவு செய்த ரஜினிகாந்த் அடுத்ததாக இயக்குநர் ஞானவேல் படத்தில் நடிக்கப் போகிறாரா? அல்லது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கப் போகிறாரா? என கேள்விகள் கிளம்பி உள்ளன.

இந்நிலையில், இந்த முறை ஓய்வெடுக்க மாலத்தீவுக்கு சென்ற நடிகர் ரஜினிகாந்த் எப்போதும் போல தனது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்தை உடன் அழைத்துச் செல்லவில்லை. ரஜினிகாந்த் தனியாக செல்ல காரணமே அவர் மகள் செய்த அதிர்ச்சிகரமான விஷயம் தான் பயில்வான் ரங்கநாதன் பரபரப்பை கிளப்பி உள்ளார்.

Bayilvan Ranganathan shocking revealation about Rajinikanths recent Maldives visit

ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தின் அடுத்த காதல்: நடிகர் தனுஷை திருமணம் செய்துக் கொண்டு கிட்டத்தட்ட 17 ஆண்டுகள் வாழ்ந்து வந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்துக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில், லால் சலாம் படத்தை இயக்கி முடித்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அந்த படத்தில் தனக்கு ரொம்பவே உதவியாக இருந்த உதவி இயக்குநரையே காதலித்து வருவதாக பயில்வான் ரங்கநாதன் பகீர் கிளப்பும் செய்தியை கூறியுள்ளார்.

சமீபத்தில் இதே விவகாரத்தை அப்பா ரஜினியிடம் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சொல்ல, அவர் மன நிம்மதியே இல்லாமல் அப்செட் ஆகி இருப்பதாக கூறியுள்ளார் பயில்வான் ரங்கநாதன்.

Bayilvan Ranganathan shocking revealation about Rajinikanths recent Maldives visit

மாலத்தீவுக்கு தனியாக சென்ற ரஜினி: அமெரிக்காவுக்கு சிகிச்சைக்கு சென்றாலும், திருப்பதி கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றாலும் எப்போதுமே தனது மகளை சூப்பர்ஸ்டா ரஜினிகாந்த் அழைத்துச் செல்வது வழக்கம்.

ஆனால், இந்த முறை மாலத்தீவுக்கு தனியாக நடிகர் ரஜினிகாந்த் சென்றிருப்பதை பார்த்த பலரும் என்ன காரணம் என விசாரிக்க, அதன் பின்னணியில் இப்படியொரு பூதம் இருப்பது தெரியவந்திருப்பதாக பயில்வான் ரங்கநாதன் போட்டு உடைத்திருக்கிறார்.

Bayilvan Ranganathan shocking revealation about Rajinikanths recent Maldives visit

மகள் மீது கோபத்தில் ரஜினி: மகளுக்காக லால் சலாம் படத்தில் மொய்தீன் பாயாக நடித்துக் கொடுத்த ரஜினிகாந்த்துக்கு ஐஸ்வர்யா தனுஷை பிரிந்ததே சுத்தமாக பிடிக்கவில்லையாம்.

தொடர்ந்து தனது மகன்கள் மீது பாசம் காட்டி வரும் தனுஷ், ஐஸ்வர்யா உடனும் சேர தயாராக உள்ள நிலையில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இன்னொருவரை காதலித்து வருகிறேன் என்றும் அவரைத்தான் திருமணம் கட்டிக் கொள்ளப் போகிறேன் என சொல்ல ரஜினிகாந்த் பயங்கர கோபம் அடைந்ததாகவும் தனது மன அழுத்தத்தை குறைக்கவே தனியாக மாலத்தீவுக்கு சென்றுள்ளார் என்றும் அந்த வீடியோவில் பயில்வான் பேசி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X