Bayilvan Ranganathan: ரஜினியை திட்டினால் நாக்கை அறுப்போம்.. சீறிய பயில்வான் ரங்கநாதன்!
சென்னை: ரஜினிகாந்த் கர்நாடகத்திற்குள் நுழையக்கூடாது என்று ஆவேசமாக பேசிய வாட்டாள் நாகராஜை பயில்வான் ரங்கநாதன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்கப்பட்டதை நிறுத்தக் கோரி வாட்டாள் நாகராஜ், கர்நாடகத்தில் தமிழ்ப்படங்களை ஓடவிடமாட்டோம் என்றும், கர்நாடகத்தில் எத்தனை தமிழர்கள் இருக்கிறார்களோ அவர்களை காவிரி தண்ணீர் குடிக்க வேண்டாம் என்று கூற முடியுமா என்று கேட்ட அவர், தமிழர்களை தமிழ்நாட்டுக்கே அழைத்துக்கொள்ளுங்கள் என்றும் பேசி இருந்தார்.

பயில்வான் ரங்கநாதன்: இவரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ள மூத்த பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன், வாட்டாள் நாகராஜ் என்கிற கன்னட வெறியன், ரஜினி பற்றி தாறுமாறாக பேசி இருக்கிறார். அவரும் ரஜினிகாந்த் பிறந்த மாநிலத்தில் பிறந்தவர் தான். ரஜினிக்கு அங்கு சொத்துக்கள் இருக்கிறது, ரஜினியின் அண்ணன் அங்கு நான் இருக்கிறார். இப்படிப்பட்ட சூழ்நிலையில், ரஜினியை கர்நாடக மாநிலத்திற்குள் விடமாட்டோம் என்று கொக்கரித்து இருக்கிறார்.
தில்லுமுல்லு வேலை: காவேரி நீரை திறந்துவிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. எவ்வளவோ தில்லுமுல்லு செய்து பார்த்தார்கள் ஆனால், காவேரி நதிநீர் ஆணைய உத்தரவை அமுல்படுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றமே கூறிவிட்டது. இதன்காரணமாக காவேரி நீர் தமிழகத்திற்கு திறந்துவிடப்பட்டுவிட்டது.
நாக்கை அறுப்போம்: இந்த நேரத்தில் தான் வாட்டாள் நாகராஜ், ரஜினி குறித்து தடித்த வார்த்தைகளை பேசி அவரை கர்நாடகத்திற்குள் விடமாட்டோம் என்று கூறியிருக்கிறார். எங்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தைப் பார்த்து கர்நாடகத்திற்குள் விடமாட்டேன் என்று சொல்ல நீ யாருடா. நீ தமிழ் நாட்டுக்கு வந்து பாரு அப்போ ரஜினி யாருனு தெரியும். இனிமேல் ரஜினி பற்றி பேசினால் வாட்டாள் நாகராஜின் நாக்கை அறுப்போம் என்று ரஜினி ரசிகர்கள் சபதம் எடுத்துள்ளனர்.
கவனமாக இருங்கள்: தமிழகத்தில் முதலமைச்சர் பதவியை அலங்கரிக்க வேண்டிய ரஜினி காந்த், அதை தியாகம் செய்து கலைஞரிடம் ஒப்படைத்தவர். நீங்க மட்டும் தான் ரஜினியை திட்டுறீங்க. ஜெகன் மோகன் கட்சியில் இருப்பவர்கள் யாராவது ரஜினியை திட்டுறாங்களா? இனியும் ரஜினியை ரோஜா திட்டிக்கொண்டு இருந்தால் நாங்கள் பொருத்துக்கொண்டு இருக்க மாட்டோம் என்று பயில்வான் அந்த பேட்டியில் ஆவேசமாக பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











