Indian 2: தயாரிப்பாளர்களை நடுத்தெருவுக்கு கொண்டு வந்துட்டாரு ஷங்கர்.. பயில்வான் ரங்கநாதன் பகீர்!
சென்னை: தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநர் என அழைக்கப்படும் ஷங்கர் பல தயாரிப்பாளர்களை நடுத்தெருவுக்கு கொண்டு வந்து விட்டுவிட்டார் என பயில்வான் ரங்கநாதன் புதிய வீடியோவில் பேசி பரபரப்பை பற்ற வைத்துள்ளார்.
ஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 திரைப்படம் இரண்டு பாகங்களாக இந்தியன் 2 மற்றும் இந்தியன் 3 என உருவாக உள்ளதாக கமல்ஹாசனே பிக் பாஸ் சீசன் 7 கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சியில் வெளிப்படையாக கூறி இருந்தார்.

ஷங்கருக்கு செக் வைத்த அனிருத்: பல ஆண்டுகளாக இந்தியன் 2 படத்தை உருட்டிக் கொண்டிருக்கும் ஷங்கர் வசம் தெரியாமல் சிக்கிக்கொண்டோம் என நினைத்த அனிருத் போட்ட இசை அறிமுக டீசரிலேயே சொதப்பிய நிலையில், அனைத்தையும் மீண்டும் ஷங்கர் மாற்றக் கூறி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் கடுப்பான அனிருத் பின்னணி இசை மற்றும் பாடல்களுக்கான இசையை இழுத்து அடித்து வருவதாகவும் வரும் ஏப்ரல் மாதம் கூட படம் வெளியாகாது என பயில்வான் ரங்கநாதன் ஷாக் கொடுத்துள்ளார்.
தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம்: ஒரு படத்தை எடுக்கிறேன் நான் என்று சொல்லிவிட்டு தேவையில்லாமல் இரண்டு படங்களுக்கான செலவை ஒவ்வொரு முறையும் சங்கர் செய்து வருகிறார் என்றும் அதன் காரணமாகவே அவரை வைத்து படம் தயாரித்த பல தயாரிப்பாளர்கள் நடுத்தெருவுக்கு வந்து விட்டதாக பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.
ஜென்டில்மேன் தயாரிப்பாளர் முதல் ஏவிஎம் நிறுவனம் வரை: ஜென்டில்மேன் படத்தை தயாரித்த கே.டி குஞ்சுமோன் அதன் பின்னர் எந்த படங்களையும் தயாரிக்காமல் காணாமல் போய்விட்டார். ஐ படத்தை தயாரித்த ஆஸ்கர் ரவிச்சந்திரன் ஆள் அட்ரஸே தெரியாத நிலைக்கு சென்று விட்டார். பிரபல தயாரிப்பு நிறுவனமான ஏவிஎம் இதற்கு மேல் படத்தை தயாரிக்கவே மாட்டோம் என்கிற முடிவுக்கு வர காரணமே சங்கர் இயக்கத்தில் வெளியான சிவாஜி படம் தான் என்றும் பயில்வான் ரங்கநாதன் அடுக்கி உள்ளார்.
லைகா நிலைமை: இந்தியன் 2 ஆரம்பித்துவிட்டு ஆறு ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இந்தியன் 2, இந்தியன் 3 என அதிக பட்ஜெட் செலவை இழுத்துவிட்டு தற்போது எப்படியாவது ரசிகர்கள் தலையில் கட்ட ஷங்கர் பார்த்து வருகிறார் லைகா மற்றும் ரெட் ஜெயன்ட் நிறுவனத்தின் நிலைமை என்ன ஆகப் போகிறது என்றே தெரியவில்லை எனக் கூறியுள்ளார்.
மோதல்: இந்தியன் 2 மற்றும் இந்தியன் 3 இந்த ஆண்டு ரிலீஸ் ஆவதே அனிருத் கையில் தான் உள்ளது என்றும் ஏ.ஆர். ரஹ்மான் அப்போ போட்ட பாடல்களை போலவும் இசை போலவும் இப்ப அவரே நினைத்தாலும் போட முடியாது. ஜெயிலர், லியோ படங்களுக்கு இசையமைத்த அனிருத் பல ஆண்டுகளுக்கு முன்பு போட்ட ட்யூன்கள் எல்லாம் இந்தியன் 2 மற்றும் இந்தியன் 3க்கு செட்டாகாத நிலையில், புதிய ட்யூன்கள் போடப்பட்டு அது ஓகே ஆனால் தான் படம் வெளியாகும் என்றும் ஷங்கருக்கும் அனிருத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டு இருப்பதால் அதை தணிக்கவும் லைகா நிறுவனம் தான் முயற்சி செய்ய வேண்டும் என்றும் பயில்வான் ரங்கநாதன் தனது லேட்டஸ்ட் வீடியோவில் கூறியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











