Aarti - Ravi: ஆர்த்திக்காக கையை அறுத்துக் கொண்ட ரவி மோகன்.. இப்போது அந்த காதல் எங்கே? பிரபலம் கேள்வி
சென்னை: கடந்த ஆண்டு திருமண வாழ்க்கையில் இருந்து பிரிவதாக அறிவித்த ரவி மோகன், அதன் பின்னர் பல்வேறு விமர்சனங்களை எதிர் கொண்டு வருகிறார். இப்படியான நிலையில் அவர் தனது தோழி கெனிஷாவுடன் நிகழ்ச்சி ஒன்றிற்கு ஜோடியாக வந்தது அவர் மீதான விமர்சனத்தை அதிகரிக்கச் செய்தது. அதன் பின்னர் அவர் கொடுத்த விளக்கம் அவர் மீது மேலும் விமர்சனங்களுக்கு வழி வகுத்துள்ளது. இந்நிலையில் பயில்வான் ரங்கநாதன் ரவி மோகன் மற்றும் ஆர்த்தி ரவி விவாகரத்து விவகாரம் குறித்து பேசியுள்ளது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
அதாவது, " ரவி தனது அறிக்கையில் தனது மகன்களுக்கு விபத்து நடந்ததே தனக்குத் தெரியாது என்று கூறுகிறார். ஒரு அப்பாவாக இதைச் சொல்ல அவர் வெட்கப்பட வேண்டும். ஆர்த்தியும் அவரது குழந்தைகளும் சென்னையில்தான் உள்ளார்கள். அவர்கள் ஒன்றும் லண்டனில் இல்லை. தனது மகன்களை ரவி மோகன் பார்க்கச் செல்லலாமே. ஆனால் அவர் பார்க்கச் செல்லவில்லை. இவர் பார்க்கப் போனால், ஆர்த்தியும் அவரது அம்மாவும் என்ன பிடித்து வைத்துக் கொள்வார்களா? அல்லது அடித்து விடுவார்களா? இவர் போகவில்லை.

கையை அறுத்த ரவி மோகன்: ரவி மோகனை விட ஆர்த்தியின் அம்மா கோடீஸ்வரி. ஆர்த்தி லண்டனில் படித்தவர். இருவரும் ஒன்றாக படிக்கும் போது ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறுகிறது. ஆர்த்தியை திருமணம் செய்து கொள்ள ரவி முடிவு செய்கிறார். இது தொடர்பாக ஆர்த்தியின் தந்தையிடம் பேசுகிறார். ரவி மோகனின் தந்தை ஆர்த்தியின் அம்மாவிடம் பேசும் போது அவர் முடியாது என்று கூறுகிறார். இதனால் ஆர்த்தியின் மீது இருந்த காதலால், ரவி தனது கையை அறுத்துக் கொள்கிறார். ஆர்த்திக்காக கையை அறுத்துக் கொண்ட ரவி மோகனின் காதல் இன்று எங்கே போனது எனத் தெரியவில்லை.
வசியம்: எத்தனை பேருடன் வேண்டுமானாலும் ஒருவருக்கு காதல் வரலாம். ஆனால் வாழ்க்கை என்றைக்கும் மனைவியுடன் மட்டும் தான் என்பதை ரவி மோகன் எப்போது புரிந்து கொள்கிறாரோ அப்போது அவர் மனிதராக இருப்பார். கெனிஷா ரவி மோகனுக்கு வசியம் போட்டு வசியப்படுத்தி வைத்துள்ளார். ரவி கெனிஷாவின் வலையில் மாட்டிக் கொண்டார் என்பது அனைவருக்கும் நன்றாகத் தெரிகிறது. ஆனால் அவர் தொடர்ந்து கெனிஷாவுடனே இருப்பார் என்றால் அவரது படங்கள் தோல்வியைச் சந்திக்கும்.

நல்ல அப்பா: ரவி மோகன் தனது குழந்தைகளுக்கு நல்ல அப்பாவாக இருக்க தவறிவிட்டார். அதேபோல் நல்ல கணவனாகவும் இருக்கத் தவறிவிட்டார். கெனிஷாவின் வசியத்தில் அவர் இருக்கிறார். மகன்கள் மகன்கள் என்று 5 பக்கத்திற்கு அறிக்கை விட்டுள்ள ரவி மோகன், தனது மகன்களுக்கு என்ன செய்தார்? அவரது மகன்களை பார்க்க விட மாட்டேன் என்கிறார்கள் என்பதே பொய். யார் அப்படி சொல்ல முடியும்? எங்காவது இது தொடர்பாக அடிதடி நடந்ததா? இவர் போய் அழைத்தால் மகன்கள் வரமாட்டார்களா? இனிமேல் யாராவது ஹீலர் என்று சொல்லிக் கொண்டு பெண்கள் வந்தால் அவர்களையும் மக்கள் கெனிஷா என்று தான் கூறுவார்கள்" என்று தெரிவித்துள்ளார். பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ள கருத்துகள் பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.


Click it and Unblock the Notifications











