குண்டுச்சட்டி.. சிவகார்த்திகேயனை அப்படி சொல்லலாமா?.. சரிதாவுக்கு பயில்வான் ரங்கநாதன் கண்டனம்!

சென்னை: மாவீரன் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய நடிகை சரிதா குட்டி ரஜினி என சிவகார்த்திகேயனை அழைத்தது மிகப்பெரிய தவறு என பயில்வான் ரங்கநாதன் ஜெயிலர் படத்தின் விமர்சனம் என வெளியிட்டுள்ள வீடியோவில் கண்டித்து பேசியுள்ளது பரபரப்பை கிளப்பி உள்ளது.

ஜெயிலர் படம் சரியான டார்க் காமெடி படமாக உருவாகி உள்ளது என்றும் புதிய ரஜினிகாந்தை ரசிகர்கள் பார்க்க போகின்றனர் என பாராட்டிய ப்ளூ சட்டை மாறன் நடிகை சரிதா பேசியது சரியல்ல என்றும் கூறியுள்ளார்.

பல ஆண்டுகளாக பட வாய்ப்புகளே இல்லாமல் இருந்து வந்த சரிதாவுக்கு சிவகார்த்திகேயன் சான்ஸ் கொடுத்தார் என்றால், பாராட்டலாம் அதற்காக ரஜினிகாந்த் உடன் ஒப்பிட்டு பேசலாமா எனக் கேட்டுள்ளார்.

Bayilvan Ranganathan slams Saritha for calling Sivakarthikeyan as Kutty Rajini

குண்டுச்சட்டி என கிண்டல்: நடிகை சரிதா பல திரைப்படங்களில் முன்னணி நடிகர்களையே தூக்கிச் சாப்பிடும் நடிப்பை வெளிப்படுத்தியவர். திருமணத்துக்கு பிறகு சினிமாவில் இருந்து விலகிய அவர், பல ஆண்டுகள் கழித்து மீண்டும் தமிழில் சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில், ஜெயிலர் படத்தின் முதல் விமர்சனம் என வீடியோ வெளியிட்ட பயில்வான் ரங்கநாதன் நடிகை சரிதாவை குண்டுச்சட்டி என படு மோசமாக கிண்டலடித்து பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

குட்டி ரஜினி சிவகார்த்திகேயன்: ஒரு பக்கம் சூப்பர்ஸ்டார் பட்டத்துக்கு சர்ச்சை ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயன் லுக்கே தளபதி படத்தில் ரஜினியின் லுக்காக உருவாக்கப்பட்ட நிலையில், மேடையில் பேசும் போது நடிகை சரிதாவும் குட்டி ரஜினி என்றும் நெற்றிக்கண் படத்தின் ஷூட்டிங்கில் ரஜினி எப்படி இருந்தாரோ, அதே ஸ்பீடில் மாவீரன் படத்தின் ஷூட்டிங்கில் சிவகார்த்திகேயன் இருந்தார் என சரிதா பேசிய பேச்சுக்கு பயில்வான் ரங்கநாதன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Bayilvan Ranganathan slams Saritha for calling Sivakarthikeyan as Kutty Rajini

படத்தில் வாய்ப்பு கிடைத்ததற்காக பாராட்டலாம். ஆனால், அதற்காக சூப்பர்ஸ்டார் உடன் இளம் நடிகர்களை ஒப்பிட்டு பேசுவது ரொம்பவே தவறான விஷயம் நான் நடிகை சரிதாவை அவர் சொன்ன அந்த வார்த்தைக்காக கண்டிக்கிறேன் என்றே அந்த வீடியோவில் பேசியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X