Vijay - அவங்க ஓட்டு போடமாட்டாங்க.. முதலமைச்சர் ஆகனுமா உங்க காசுல ஆகுங்க.. விஜய்யை விளாசும் பயில்வான்
சென்னை: Bayilvan Ranganathan (பயில்வான் ரங்கநாதன்) விஜய் முதலமைச்சர் ஆக வேண்டுமென்றால் அவருடைய பணத்தில் ஆக வேண்டும் என பயில்வான் ரங்கநாதன் பேசியிருக்கிறார்.
விஜய் நடிப்பில் கடைசியாக லியோ திரைப்படம் வெளியானது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத், கௌதம் மேனன், மன்சூர் அலிகான், ப்ரியா ஆனந்த், மிஷ்கின் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். மிகப்பெரிய எதிர்பார்ப்போடு வெளியான படம் விஜய் ரசிகர்களை தவிர்த்து மற்றவர்களை திருப்திப்படுத்த தவறியது. இருந்தாலும் வசூல் ரீதியாக நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்திருப்பதாக படத்தயாரிப்பு நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

தளபதி 68: லியோ படத்தை முடித்திருக்கும் விஜய் அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்துவருகிறார். அவருடன் பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா, ஜெயராம், மைக் மோகன், அஜ்மல், மீனாட்சி சௌதரி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். படத்தின் ஷூட்டிங் முதல் ஷெட்யூல் சென்னையில் தொடங்கியது. அடுத்த ஷெட்யூல் பாங்காக்கில் நடந்து முடிந்திருக்கிறது.
அரசியல் என்ட்ரி: இதற்கிடையே விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்று அவரது ரசிகர்கள் கடந்த பல வருடங்களாகவே கூறிவருகின்றனர். அதுகுறித்து விஜய் வாய் திறக்காமல் மௌனமாக இருந்தாலும் அவரது ஒவ்வொரு செயல்பாடும் அரசியலை நோக்கியதாகவே இருக்கிறது என்று பலராலும் கருதப்படுகிறது. அண்மையில்கூட 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளை அழைத்து சால்வை அணிவித்து ஊக்கத்தொகை வழங்கினார்.
விஜய் மக்கள் இயக்கம்: அந்த நிகழ்வுக்கு பிறகு விஜய் மக்கள் இயக்கத்தின் செயல்பாடு மும்முரமாக இருக்கிறது. அனைத்து மாவட்டங்களிலும் இரவு நேர பாடசாலை அமைப்பது என ஜரூராக பல நலத்திட்டங்களை செயல்படுத்திவருகிறது. ஆனால் இதற்கெல்லாம் விஜய் பணம் கொடுப்பதே இல்லை. அவர் தன்னுடைய சேஃப்டியில் உஷாராக இருக்கிறார். ரசிகர்களும், விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளும்தான் கை காசை போட்டு இதையெல்லாம் செய்கிறார்கள் என்ற விமர்சனம் எழுந்தது.
பயில்வான் ரங்கநாதன்: இதை கேள்விப்பட்ட ஒருதரப்பினர் விஜய் மக்கள் இயக்கத்தினரும் பணம் கொடுப்பார்கள்தான் ஆனால் விஜய் பணம் கொடுக்காமல் இருக்கமாட்டார். ஏனெனில் இவ்வளவு விஷயங்களை செய்வதற்கும் மக்கள் இயக்க நிர்வாகிகளிடம் அவ்வளவு பணம் இருக்காது என்றும் கூறுகின்றனர். இந்நிலையில் பயில்வான் ரங்கநாதன் இந்த விவகாரம் குறித்து பேசுகையில், ”விஜய்தான் சோறு, மோர் எல்லாம் கொடுக்க வேண்டும். இரவு படிப்பகத்தை திறக்க வேண்டும்.
உங்களுடைய காசில் உங்கள் புகழை தேட வேண்டும். அடுத்தவர் காசில் ஏன் புகழை தேட வேண்டும். விஜய் முதலமைச்சராக வேண்டுமென்றால் அவர்தான் பணத்தை செலவு செய்து. அவரது பணத்தில் முதலமைச்சராக வேண்டும். அதில் தவறு இல்லை. எம்ஜிஆர் ரசிகர்கள் எல்லாம் விஜய்க்கு வாக்கு செலுத்தமாட்டார்கள்.
விஜய் இன்னும் பக்குவம் அடையவில்லை. பத்திரிகையாளர்களிடம் பேச பயப்படுகிறார் விஜய். சமீபத்தில் நடந்தது லியோ வெற்றி விழா எல்லாம் இல்லை. அந்த விழாவில் அவரது பேச்சு அரசியல்வாதியின் முன்னோட்ட பேச்சாகத்தான் இருந்தது.தோல்வியை ஒத்துக்கொள்கிற கலைஞர் கருணாநிதியின் சாணக்கியத்தனம் அதில் தெரிந்தது. விஜய் அரசியலுக்கு வரும் ஆசையில்தான் இருக்கிறார்” என்றார்.


Click it and Unblock the Notifications











