தியானத்திற்கு சென்ற சமந்தா, கங்கனா.. ஈஷா மையத்தில் நடப்பது என்ன.. பயில்வான் சொல்வதை கேளுங்க!

சென்னை: நடிகை சமந்தா அண்மையில் கோயம்புத்தூரில் உள்ள ஈஷா யோகா மையம் சென்று தியானத்தில் ஈடுபட்டார். அதே போல நடிகை கங்கனா ரனாவத்தும் ஈஷா மையம் வந்து தியானம் செய்தார். இந்த போட்டோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து இருந்த சமந்தா, ஒரு நல்ல குரு கிடைப்பது என்பது ரொம்பவும் அரிது. அதுவும் உங்கள் வாழ்க்கையை ஒளிமயமாக்கும் பார்வைகொண்ட ஒரு குரு கிடைப்பது என்பது ஒரு அதிர்ஷ்டம் தான் என பதிவிட்டு இருந்தார்.

இவரின் இந்த போட்டோ இணையத்தில் டிரெண்டான நிலையில், இது குறித்து மூத்த சினிமா பத்திரிக்கையாளரான பயில்வான் ரங்கநாதன் ஈஷா யோகா மையத்தில் நடப்பது குறித்து வீடியோ ஒன்றில் பேசி உள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

Samantha Bayilvan Ranganathan

பயில்வான் ரங்கநாதன்: அதில், நிம்மதி தேடி ஈஷா மையத்திற்கு வந்தார்கள் நடிகை கங்கனா ரனாவத், நடிகை சமந்தா. தியானம் என்பது மனிதனுடைய மனதில் உள்ள அழுக்கை நீக்கிவிடுகிறது. தியானம் செய்யும் போது மனதிற்கு நிம்மதி கிடைக்கிறது என்பதால், மனதிற்கு நிம்மதி தரும் இடத்தை சிலர் தேர்வு செய்து செல்கிறார்கள். அப்படி ஒரு இடம் தான் கோவையில் உள்ள ஈஷா மையம். இந்த தியான மையத்தில் வெளிநாட்டினர் பலர் வந்து மாதக்கணக்கில் தங்கி தியானம் செய்து வருகிறார்கள்.

ஏதாவது தவறு நடக்கும்: நான் மூன்று முறை கோவை ஈஷா மையத்திற்கு சென்று இருக்கிறேன். அந்த இடத்தில் ஏதோ ஒரு வைப்ரேஷன் உள்ளது அதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை. நானும் ஆன்மீகவாதிதான், என்னிடம் மூடநம்பிக்கை இல்லவே இல்லை ஆனால், இறை நம்பிக்கை உண்டு. நான் ஈஷா யோக மையத்திற்குள் போகும் போது, தவறான கண்ணோட்டத்தில் தான் உள்ளே சென்றேன். ஏதாவது தவறு நடக்கும், ஏதாவது தில்லுமுல்லு நடக்கும் அதை பற்றி பேசலாம் என்றுதான் உள்ளே சென்றேன். ஆனால், உள்ளே சென்ற 5 நிமிடத்தில் மனதிற்குள் ஏற்பட்ட வைப்ரேஷனால், என்னுள் இருந்த யூடியூப் வியாபாரி வெளியே சென்றுவிட்டான். வேறு ஒரு ஆளாகத்தான் நான் உள்னே சென்றேன்.

புது மனிதனானேன்: உள்ளே சென்ற போது நம்மை குளிக்க வைத்து அங்கு இருக்கும் சிவலிங்கத்தை தொடவைக்கிறார்கள். அப்படி செய்ததுமே உடல் அழுக்கு மன அழுக்கு இரண்டுமே போய்விடுகிறது. இதையடுத்து 6 மணிக்கு எந்தவித உருவமும் இல்லாமல் தியானம் செய்ய சொல்கிறார்கள். இந்த நேரத்தில் மனதில் உள்ள எல்லா அழுக்கும் போய் மனதிற்குள் ஒரு ஒலி, இதயத்திற்குள் பாய்ச்சப்படுவதை நான் உணர்ந்தேன். அங்கு நான் ஒரு புது மனிதனாக இருந்தேன். மேலும் இங்கு எண்ணெய் இல்லாமல் செய்யப்படுகிற, குழம்பு, ரசம் என இயற்கையான உணவை ஒருவேளைக்கு மட்டும் தருகிறார்கள். இதையடுத்து நாம் பிரம்மாண்டமாக பார்த்து வியந்த ஈஷா சிவன் சிலைக்கு முன் சிவபுராணம் அரங்கேற்றப்படுகிறது. இது நம்மை வேறு ஒரு உலகத்திற்கே கொண்டு சென்றுவிடுகிறது எனலாம்.

காரணம் இதுதான்: இதை நான்இப்போது சொல்வதற்கு காரணம் அரியவகை நோயால் பாதிக்கப்பட்டு இருக்கும் சமந்தா, கடந்த இரண்டு மாதமாக வெளிநாட்டில் தங்கி இருந்த நிலையில், திடீரென கோவை வந்து ஈஷா மையத்தில் தியானத்தில் ஈடுபட்டுள்ளார். அதே போல நடிகை கங்கனா ரனாவத், தேர்தலில் வெற்றி பெற்ற கைகோடு ஈஷா யோகா மையத்திற்கு வந்து தியானத்தில் ஈடுபட்டார். இப்படி நடிகைகள் இங்கு வருவதால், அவர்களின் மனம் நிம்மதி அடைவதால் அவர்கள் அடிக்கடி அங்கு வந்த செல்கிறார்கள் என்று பயில்வான் ரங்கநாதன் அந்த பேட்டியில் பேசி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X