Bayilvan Ranganathan - டிடி உடலுக்காகத்தான் திருமணம் செய்தார் - பஞ்சாயத்தை பற்ற வைத்த பயில்வான்
சென்னை: Bayilvan Ranganathan (பயில்வான் ரங்கநாதன்) திவ்யதர்ஷினி உடலுக்காக மட்டும்தான் திருமணம் செய்துகொண்டதாக பயில்வான் ரங்கநாதன் தெரிவித்திருக்கிறார்.
சினிமா பத்திரிகையாளர் மற்றும் நடிகர் பயில்வான் ரங்கநாதன். 90களில் பல படங்களில் நடித்திருக்கும் இவர் சினிமா சம்பந்தமான நிகழ்ச்சிகளுக்கு பத்திரிகையாளராக சென்று சர்ச்சையான கேள்விகள் கேட்பதை வழக்கமாக வைத்திருப்பவர். அதுமட்டுமின்றி நடிகர்கள் மற்றும் நடிகைகளின் தனிப்பட்ட வாழ்க்கையை கூறி பல பஞ்சாயத்துக்களை தொடங்கி வைப்பவரும்கூட.

தொடர் அவதூறுகள்: அவரைப் பொறுத்தவரை தான் சொல்வது எல்லாமே உண்மை. உண்மையை தவிர வேறு எதுவும் இல்லை என்ற மனப்பான்மையில் இருப்பவர். நயன்தாரா, த்ரிஷா, ரேகா நாயர், ஷர்மிலி உள்ளிட்ட நடிகைகள் குறித்தும் தனுஷ், கவுண்டமணி, வடிவேலு உள்ளிட்ட நடிகர்கள் குறித்தும் பல விஷயங்களை பேசியிருக்கிறார். ஆனால் அவை அனைத்துமே அவதூறுகள்தான் என்பது ரசிகர்களின் கருத்து.
சண்டைக்கு சென்ற ரேகா நாயர்: இரவின் நிழல் படத்தில் ரேகா நாயர் நிர்வாணமாக நடித்தது குறித்து பயில்வான் ரங்கநாதன் பேசிவைக்க; திருவான்மியூர் கடற்கரையில் அவர் வாக்கிங் சென்றுகொண்டிருந்தபோது ரேகா கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் பயில்வான் ரங்கநாதனை தாக்கவும் முயன்றார். அதுதொடர்பான வீடியோ வெளியாகி இணையத்தில் ட்ரெண்டானது. அதுமட்டுமின்றி பயில்வான் ரங்கநாதன் உயிரிழக்கும்போது பட்டாசு வெடித்து கொண்டாடுவேன் எனவும் பகிரங்கமாக பேட்டியும் அளித்தது குறிப்பிடத்தக்கது.
ராஜன் வகையறா: அதேபோல் ஒரு சினிமா நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் கே.ராஜனுக்கும் பயில்வான் ரங்கநாதனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ராஜன் பயில்வான் ரங்கநாதனை கடும் சொற்களால் தாக்கி பேசினார். ராஜன் அப்படி பேசியதற்கு பலரும் தங்களது ஆதரவை தெரிவித்தனர். பயில்வான் போன்ற ஆட்களுக்கு ராஜன் வகையறாதான் சரியான ஆட்கள் என ரசிகர்களும் கருத்து தெரிவித்தனர்.
அடுத்த பஞ்சாயத்து: இந்தச் சூழலில் பெரிய திரையை பற்றி மட்டும் பேசிக்கொண்டிருந்த பயில்வான் ரங்கநாதன் தற்போது சின்னத்திரை குறித்தும் பேசியிருக்கிறார். சமீபமாக ஒரு வீடியோவில் தொகுப்பாளினி டிடி என்கிற திவ்யதர்ஷினி குறித்து பேசியிருக்கும் அவர், "திவ்யதர்ஷினியும், ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரனும் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளவே இல்லை. உடல் தேவைக்காக திருமணத்தை அவசரமாக முடித்தார்கள். அது ஒரு நோய். இரண்டு பேரும் தங்களது உடலை மட்டும் விரும்பினார்கள். அதற்கான தேவை முடிந்த பிறகு விவாகரத்து செய்துகொண்டனர்" என்றார்.
திவ்யதர்ஷினி: டிடி என்கிற திவ்யதர்ஷினி சிறு வயதிலேயே கலைத்துறைக்குள் வந்தவர். அப்போது ஒரு சில படங்களில் நடித்த அவர் தற்போது சின்னத்திரையில் ஸ்டார் தொகுப்பாளினியாக திகழ்ந்துவருகிறார். இவர் தனது நண்பர் ஸ்ரீகாந்த் என்பவரை கடந்த 2014ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். ஆனால் ஏதோ ஒரு காரணத்தால் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.


Click it and Unblock the Notifications











